Blog

Welcome to our blog!

கிறிஸ்தவம் இவ்வளவுதான்: சி.எஸ். லூயிஸின் Mere Christianity தமிழில்

கிறிஸ்தவம் இவ்வளவுதான்: சி.எஸ். லூயிஸின் Mere Christianity தமிழில்

ஆங்கிலக் கிறிஸ்தவ இலக்கியங்களில் அதிகம் வாசிக்கப்படும் Mere Christianity இப்போது தமிழில். மொழிபெயர்ப்பு அல்ல — தழுவல். ஏன், எப்படி என்பதை மொழிபெயர்ப்பாளரே விளக்குகிறார்.

தீர்மானங்களின் திசைகள்

தீர்மானங்களின் திசைகள்

ஒவ்வொரு நாளும் நாம் ஆயிரக்கணக்கான தீர்மானங்களை எடுக்கிறோம் என சில நவீன ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது அவைகளின் எண்ணிக்கை 35000 வரை கூட இருக்கலாம்! காலையில் எப்போது எழவேண்டும், டீயா காப்பியா என்பதில் இருந்து, இரவில் வாசிக்கும் புத்தகம் வரை கணக்கிலடங்காத் தெரிவுகளை நாம் ஒவ்வொரு கணமும் மேற்கொள்கிறோம். இவற்றில் பெரும்பாலான தீர்மானங்களைத் தெரிந்தே நம் மனம் மேற்கொள்வதில்லை என்பதே இதில் நாம் கவனிக்க வேண்டிய நுட்பமான உண்மை!. ஒரு பெருங்கப்பலின் கேப்டன் அதன் பயணத்தின் முக்கியத்…

இரத்தக் கையெழுத்து

இரத்தக் கையெழுத்து

‘நடிகை ராதாவுக்கு இரசிகர் இரத்தத்தால் கடிதம்!’ என்பது போன்ற செய்திகள் எல்லாம் முன்பு தினத்தந்தி சினிமா செய்திகளில் அடிக்கடி வரும். ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகருக்கு இப்படி இரத்தத்தால் கடிதம் எழுதி அனுப்புவார்கள் இன்று கடிதங்கள் யாரும் எழுதுவதில்லை என்பதான் இன்று இவைகள் வழக்கொழிந்துவிட்டன. ஆனால், நிரத்தரமாக இரத்தத்தால் எழுதப்பட்ட நிகழ்வு ஒன்று வரலாற்றில் உண்டு. புதிய ஏற்பாடுதான் அது. இந்தப் புதிய ஏற்பாட்டுக்கு புது உடன்படிக்கையின் நூல் என்கிற பெயரை இறையியளார் பயன்படுத்துவார்கள். பெயர்தான் ‘புதிய’…

அறிவியலை எதிர்த்ததா கிறிஸ்தவம்?

அறிவியலை எதிர்த்ததா கிறிஸ்தவம்?

(முன்குறிப்பு: மேலே இருக்கும் படத்தில் இருப்பவர்கள் எல்லாம் வெறும் வில்லேஜ் விஞ்ஞானிகள் அல்லர்!) கிறிஸ்தவம் அறிவியலுக்கு எதிரானது என்கிற துர்கருத்தைச் சிலர் திரும்பத் திரும்பப் பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள். இதைப் பல புத்தகங்களாக வெளியிட்டுக் காசுபார்த்தவர்கள் உண்டு. தமிழிலும் மொழிபெயர்த்து வந்திருக்கின்றன. சமீபத்தில் என் கண்ணில் ஒரு புத்தகம் பட்டதால் இதைப் பற்றி சற்று விளக்கியாக வேண்டும். ரோமன் கத்தோலிக்க சபையின் வரலாற்றில் சிலர் சில அறிவியல் கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடிப்பாளர்களையும் எதிர்த்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், அதற்காக ஒட்டுமொத்த…

தேவன் தன் முடிவுகளை மாற்றிக்கொள்பவரா?

தேவன் தன் முடிவுகளை மாற்றிக்கொள்பவரா?

தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார். – ஆதியாகமம் 6:6,7 நம்முடைய மனம் (வாக்குறுதி, பேச்சு) மாறுவதற்கும் தேவன் தன் மனதை மாற்றிக்கொண்டார் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது; அல்லது சம்பந்தமே இல்லை என்றுகூடச் சொல்லிவிடலாம். நிச்சயம், நம்மைப்போல ஒன்றைச் செய்ய…

சுதந்திரம்

சுதந்திரம்

கேள்வி: மனிதர்கள் சுதந்திரமாக இருக்கப் பிறந்தவர்களா? பதில்: ஆம், மனிதன் சுதந்திரமாக வாழவே படைக்கப்பட்டான். ஆனால், இன்றைக்குப் பெரும்பாலானோர் ‘சுதந்திரம்’ என்பதற்கு வைத்துள்ள விளக்கம் முற்றிலும் எதிர்மறையானது. எவ்விதக் கட்டுப்பாடும், எல்லையும் இல்லாத ஒரு வாழ்க்கையைத்தான் உலகம் ‘சுதந்திரம்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. ஒருவரிடம் மிகப் பெரிய பரப்பளவில் நிலம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நிலத்திற்குச் சுவரோ, வேலியோ இல்லையென்றால், உரிமையாளரால் அதை நிம்மதியாக அனுபவிக்க முடியாது. அந்நியர்களின் ஊடுருவலும் ஆபத்தும் தான் அதிகரிக்குமே தவிர,…

அறிவு, புத்தி, புரிதல், ஞானம்

அறிவு, புத்தி, புரிதல், ஞானம்

கேள்வி: அறிவு, புத்தி(சாலித்தனம்), ஞானம் போன்றவைகள் எல்லாம் ஒன்றுதானா? பதில்: ஒன்றோடொன்று தொடர்புடையவை, ஆனால் அனைத்தும் ஒன்றல்ல. வேதாகமத்திலும் இவை அந்தந்த இடங்களுக்கேற்ற பொருள்படத்தான் வருகின்றன. அவற்றிற்கிடையில் இருக்கும் சிறு வேறுபாடுகளை அறிந்துகொள்வது நல்லது. அறிவும் (Knowledge), புத்திசாலித்தனமும் (Intelligence), புரிதலும் (Understanding), ஞானமும் (Wisdom) வேதாகமத்தின் பார்வையில் மனித சிந்தனையின் வெறும் தர்க்க நிலைகள் மட்டுமல்ல, அவை தேவனுடனான உறவிலும் அவருடைய வார்த்தையிலும் வேரூன்றிய ஆன்மீகப் பரிமாணங்கள் என்று சொல்லலாம். இவற்றை ஒரு எளிய உதாரணத்துடன்…

மறந்துவிட்டீர்களா?

மறந்துவிட்டீர்களா?

“டிரான்ஸ்ஃபர் வேணும்னு ஜெவ்ம் பண்ணினேம் பிரதர்..கர்த்தர் உதவி செய்தார்; டிரான்ஸ்ஃபர் கிடைச்சிருச்சி” “சின்னவன் கல்யாணம் நல்லபடியா முடியணும்னு ஜெபிச்சோம்; கர்த்தர் கல்யாணத்தை நல்லா நடத்திக் கொடுத்தார்” “பத்துவருஷம் மூட்டுவலி. சர்ஜரிக்குப் பிறகு நல்ல சொஹம் கெடச்சிருக்கு. எல்லாம் கர்த்தர் கிருபை!” என்பதில் இருந்து, “இது எப்படி நடந்தது என்பதே புரியவில்லை சகோதரா, நெனச்சாலே புல்லரிக்குது; ஆண்டவர் அற்புதம் செய்யனேண்ணா நிலைமை சரியாக ஆகியிருக்க வாய்ப்பே இல்லை”, என்பது வரை… பெறும் நன்மைகள்தான் எத்தனை எத்தனை. இப்படி எக்கச்சக்கமான…

TheTamilBible.com – இணைவசனத் தமிழ் வேதாகம்

TheTamilBible.com – இணைவசனத் தமிழ் வேதாகம்

TheTamilBible.com –  இணையத்தளத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் நிறைவான ஒரு தமிழ் வேத ஆராய்ச்சி அனுபவம் — முற்றிலும் இலவசமாய், ஆஃப்லைனில், என்றும் இனி உங்களுடையதாக. தலைமுறை தலைமுறையாக, ஆழமான வேத ஆராய்ச்சி கருவிகள் என்பவை ஆங்கிலத்தில் மட்டுமே இருந்து வந்தன. தமிழ் விசுவாசிகள் தேவனுடைய வார்த்தையைத் தங்கள் இருதயத்தின் மொழியில் வாசித்தாலும், இன்னும் ஆழமாகத் தோண்டி ஆராய வேண்டும் என்று விரும்பிய பொழுதே — ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைத் தேடவோ, இணை வசனங்களைப் பின்தொடரவோ…

கிறிஸ்தவக் கஞ்சன்

கிறிஸ்தவக் கஞ்சன்

வால் ஸ்ட்ரீட்டின் ஆகப் பெரிய பிசினஸ் ராஜாக்களெல்லாம் பணத்தை எப்படிப் பெருக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பெண் பழைய, அழுக்கடைந்த ஒரே ஒரு கருப்பு நிற கவுனை அணிந்துகொண்டு நியூயார்க் வீதிகளில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர், ஹெட்டி க்ரீன். மின்னும் வைரங்களோ, கம்பீரமான அலுவலகங்களோ, பளபளக்கும் ஆட்களோ இவரிடம் இல்லை. கெமிக்கல் நேஷனல் என்கிற ஒரு வங்கியின் ஏதோ ஒரு மூலையில், பழைய ஆவணங்கள் நிறைந்த சில மரப்பெட்டிகளுக்கு நடுவேதான் இவரது சாம்ராஜ்யம் இயங்கியது. பசித்தால் உணவகங்களுக்குப்…