தர்க்கவுரை

ஆபத்தான சுதந்திரம்!

ஆபத்தான சுதந்திரம்!

தேவன் ஏன் எல்லா மனிதர்களையும் தங்கள் போக்குக்கு விடவேண்டும்? ஏன் ‘ஒரு ஆட்டு ஆட்டி’ அனைவரையும் தனக்கு இணக்கமாக்கிவிடக்கூடாது? இது பிசாசுகளே அடிக்கடி வியந்து ஆராய்ச்சி செய்யும் ஒரு விஷயம் போலத்தான் தெரிகிறது. “ஸ்க்ரூடேப் லெட்டர்ஸ்” (The Screwtape Letters) என்கிற ஒரு புத்தகம். சி.எஸ். லூயிஸ் 1942-ல் எழுதியது. நார்னியா கதைகளை எழுதிய இவரது இந்தப் புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தையும் விட விநோதமானது. காரணம் இதில் உள்ள இரண்டு ஆசாமிகள். இந்த இருவருமே மனிதரல்லர்…