கிறிஸ்தவ வாழ்வு

சுதந்திரம்

சுதந்திரம்

கேள்வி: மனிதர்கள் சுதந்திரமாக இருக்கப் பிறந்தவர்களா? பதில்: ஆம், மனிதன் சுதந்திரமாக வாழவே படைக்கப்பட்டான். ஆனால், இன்றைக்குப் பெரும்பாலானோர் ‘சுதந்திரம்’ என்பதற்கு வைத்துள்ள விளக்கம் முற்றிலும் எதிர்மறையானது. எவ்விதக் கட்டுப்பாடும், எல்லையும் இல்லாத ஒரு வாழ்க்கையைத்தான் உலகம் ‘சுதந்திரம்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. ஒருவரிடம் மிகப் பெரிய பரப்பளவில் நிலம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நிலத்திற்குச் சுவரோ, வேலியோ இல்லையென்றால், உரிமையாளரால் அதை நிம்மதியாக அனுபவிக்க முடியாது. அந்நியர்களின் ஊடுருவலும் ஆபத்தும் தான் அதிகரிக்குமே தவிர,…

அறிவு, புத்தி, புரிதல், ஞானம்

அறிவு, புத்தி, புரிதல், ஞானம்

கேள்வி: அறிவு, புத்தி(சாலித்தனம்), ஞானம் போன்றவைகள் எல்லாம் ஒன்றுதானா? பதில்: ஒன்றோடொன்று தொடர்புடையவை, ஆனால் அனைத்தும் ஒன்றல்ல. வேதாகமத்திலும் இவை அந்தந்த இடங்களுக்கேற்ற பொருள்படத்தான் வருகின்றன. அவற்றிற்கிடையில் இருக்கும் சிறு வேறுபாடுகளை அறிந்துகொள்வது நல்லது. அறிவும் (Knowledge), புத்திசாலித்தனமும் (Intelligence), புரிதலும் (Understanding), ஞானமும் (Wisdom) வேதாகமத்தின் பார்வையில் மனித சிந்தனையின் வெறும் தர்க்க நிலைகள் மட்டுமல்ல, அவை தேவனுடனான உறவிலும் அவருடைய வார்த்தையிலும் வேரூன்றிய ஆன்மீகப் பரிமாணங்கள் என்று சொல்லலாம். இவற்றை ஒரு எளிய உதாரணத்துடன்…

மறந்துவிட்டீர்களா?

மறந்துவிட்டீர்களா?

“டிரான்ஸ்ஃபர் வேணும்னு ஜெவ்ம் பண்ணினேம் பிரதர்..கர்த்தர் உதவி செய்தார்; டிரான்ஸ்ஃபர் கிடைச்சிருச்சி” “சின்னவன் கல்யாணம் நல்லபடியா முடியணும்னு ஜெபிச்சோம்; கர்த்தர் கல்யாணத்தை நல்லா நடத்திக் கொடுத்தார்” “பத்துவருஷம் மூட்டுவலி. சர்ஜரிக்குப் பிறகு நல்ல சொஹம் கெடச்சிருக்கு. எல்லாம் கர்த்தர் கிருபை!” என்பதில் இருந்து, “இது எப்படி நடந்தது என்பதே புரியவில்லை சகோதரா, நெனச்சாலே புல்லரிக்குது; ஆண்டவர் அற்புதம் செய்யனேண்ணா நிலைமை சரியாக ஆகியிருக்க வாய்ப்பே இல்லை”, என்பது வரை… பெறும் நன்மைகள்தான் எத்தனை எத்தனை. இப்படி எக்கச்சக்கமான…

கிறிஸ்தவக் கஞ்சன்

கிறிஸ்தவக் கஞ்சன்

வால் ஸ்ட்ரீட்டின் ஆகப் பெரிய பிசினஸ் ராஜாக்களெல்லாம் பணத்தை எப்படிப் பெருக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பெண் பழைய, அழுக்கடைந்த ஒரே ஒரு கருப்பு நிற கவுனை அணிந்துகொண்டு நியூயார்க் வீதிகளில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர், ஹெட்டி க்ரீன். மின்னும் வைரங்களோ, கம்பீரமான அலுவலகங்களோ, பளபளக்கும் ஆட்களோ இவரிடம் இல்லை. கெமிக்கல் நேஷனல் என்கிற ஒரு வங்கியின் ஏதோ ஒரு மூலையில், பழைய ஆவணங்கள் நிறைந்த சில மரப்பெட்டிகளுக்கு நடுவேதான் இவரது சாம்ராஜ்யம் இயங்கியது. பசித்தால் உணவகங்களுக்குப்…

கொழுந்துவிட்டு எரிதல்

கொழுந்துவிட்டு எரிதல்

நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தபோது அவருக்கு வயது பூஜ்ஜியம் அல்ல. அநேக கிறிஸ்தவர்களின் வேதாகமப் புரிதல் மத்தேயு சுவிசேஷத்தில்தான் தொடங்குகிறது; அவர் 2000 ஆண்டுகளுக்கு முன்புதான் உதித்தார் என்பதுபோல. ஆனால், புதிய ஏற்பாடே எழுதப்படாத அந்தக் காலத்தில், இயேசு தம் சீஷர்களுக்குப் போதித்தது ‘தாம் இருந்த’ பழைய ஏற்பாட்டைத்தான். கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட (Incarnation) நிகழ்வே தவிர, அவருடைய தொடக்கம் அல்ல. அவர் அநாதி தேவன். மீகா தீர்க்கதரிசியின் வார்த்தைகளில்  “அவருடைய புறப்படுதல்…

தியாகம்

தியாகம்

இரண்டாம் உலகப் போரின் முடிவில் பல கதைகள் வெளிவந்துகொண்டே இருந்தன. சில அதிர்ச்சி இரகம். பலவும் மிகவும் அதிர்ச்சி இரகம். ஏராளமான வினோத நிகழ்வுகளை இரண்டாம் உலகப்போரின் பின்னர் பத்திரிக்கைகள் எழுதித்தள்ளின. அதில், ஒன்று  விட்டோல்ட் பிலெக்கியின் (Witold Pilecki) தீரக் கதை. அமெரிக்காவின் தலைமையில் ஹிட்லரை எதிர்த்து நின்ற கூட்டுப் படைகள் ஆஷ்விட்ஸ் வதை முகாமுக்குள் நடப்பதை எப்படியாவது தெரிந்துகொள்ள விரும்பினர். இந்த ஆஷ்விட்ஸ் வதை முகாமுக்குள்தான் சுமார் 40 இலட்சம் யூதர்களாவது ஹிட்லரின் ஆட்களால்…

ஆபத்தான சுதந்திரம்!

ஆபத்தான சுதந்திரம்!

தேவன் ஏன் எல்லா மனிதர்களையும் தங்கள் போக்குக்கு விடவேண்டும்? ஏன் ‘ஒரு ஆட்டு ஆட்டி’ அனைவரையும் தனக்கு இணக்கமாக்கிவிடக்கூடாது? இது பிசாசுகளே அடிக்கடி வியந்து ஆராய்ச்சி செய்யும் ஒரு விஷயம் போலத்தான் தெரிகிறது. “ஸ்க்ரூடேப் லெட்டர்ஸ்” (The Screwtape Letters) என்கிற ஒரு புத்தகம். சி.எஸ். லூயிஸ் 1942-ல் எழுதியது. நார்னியா கதைகளை எழுதிய இவரது இந்தப் புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தையும் விட விநோதமானது. காரணம் இதில் உள்ள இரண்டு ஆசாமிகள். இந்த இருவருமே மனிதரல்லர்…

சரணடைதல் எனும் வாசல்

சரணடைதல் எனும் வாசல்

என் வாழ்க்கையில் பல தருணங்களில் நான் அப்படியே தளர்ந்து போயிருக்கிறேன். அது வெறும் உடல் சோர்வு மட்டுமல்ல; அது ஒருவிதமான ஆத்தும இளைப்பு. ஓடிக்கொண்டே இருப்பதிலும், போராடுவதிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வையும் நமக்குப் புரியும்படி மாற்ற முயல்வதிலும் வந்த சோர்வு அது. நான் ஜெபிப்பேன், ஆனால் கவலைப்படுவதை நிறுத்தமாட்டேன். விசுவாசிப்பேன், ஆனால் விளைவுகளை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே துடிப்பேன். தேவனுடைய சமாதானம் எனக்கு வேண்டும் என்று கேட்பேன், ஆனால் என் திட்டங்களை மட்டும் விடவே மாட்டேன். அப்படிப்பட்ட ஒரு கையறு நிலையில், என் இதயத்தின் ஆழத்தில் ஒரு…

கோபம், எரிச்சல், பயம் வருத்தம் – இவைகள் பாவங்களா?

கோபம், எரிச்சல், பயம் வருத்தம் – இவைகள் பாவங்களா?

கோபம், எரிச்சல், பயம், வருத்தம் போன்றவை எல்லாம் ‘அகிறிஸ்தவ’ உணர்வுகள் என்று நினைத்தால் அது தவறு. உண்மையில் மனிதன் விழுந்ததில் இந்த சுபாவங்கள் எல்லாம் இடப்பெயர்ச்சி அடைந்துவிட்டன. விளைவு: கோபம் மூர்க்கமாக, பயம் திகிலாக, வருத்தம் என்பது அவநம்பிக்கையாக – மனக்குழப்பமாக என்று சுபாவங்களே தங்கள் தன்மைகளை மாற்றிக்கொண்டு இருதயத்தில் அதனதன் இருப்பிடத்தைவிட்டு விலகிவிடுகின்றன. “கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” (எபேசியர் 4:26). இந்த வசனம் சொல்வது போல, கோபம் கொண்டால் உடனே பாவம் செய்தல் என்பது அந்த…

ஜி.கே செஸ்டர்டன் – இன்றைய குழப்பங்களும், ஒரு பழைய தீர்க்கதரிசியும்

ஜி.கே செஸ்டர்டன் – இன்றைய குழப்பங்களும், ஒரு பழைய தீர்க்கதரிசியும்

இன்றைய குழப்பங்களும், ஒரு பழைய தீர்க்கதரிசியும் 2026-ம் ஆண்டு, முன்னெப்போதும் இல்லாத அளவு தொழில்நுட்பமும், அதன் வழியாகக் கிடைத்திருக்கும் இணைப்புகளும் தொடர்புகளுமாகத் துவங்கியிருக்கிறது. எவரையும் தொடர்பு கொள்ளலாம், எதிலும் இணைந்துகொள்ளலாம், கற்கலாம், அறியலாம்…! இப்படி நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களும், நம்மைச் சுற்றியிருக்கும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த (AI) தொழில்நுட்பங்களும் வாழ்க்கையை எளிதாக்கியிருக்கலாம். ஆனால், மனித மனம் அமைதியாக இருக்கிறதா? என்றால், நிச்சயமாக முன்புபோல “இல்லை” என்பதே பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும்! சரியாக 120 ஆண்டுகளுக்கு முன்பு…