கிறிஸ்தவ கண்ணோட்டம்

ஆபத்தான சுதந்திரம்!

ஆபத்தான சுதந்திரம்!

தேவன் ஏன் எல்லா மனிதர்களையும் தங்கள் போக்குக்கு விடவேண்டும்? ஏன் ‘ஒரு ஆட்டு ஆட்டி’ அனைவரையும் தனக்கு இணக்கமாக்கிவிடக்கூடாது? இது பிசாசுகளே அடிக்கடி வியந்து ஆராய்ச்சி செய்யும் ஒரு விஷயம் போலத்தான் தெரிகிறது. “ஸ்க்ரூடேப் லெட்டர்ஸ்” (The Screwtape Letters) என்கிற ஒரு புத்தகம். சி.எஸ். லூயிஸ் 1942-ல் எழுதியது. நார்னியா கதைகளை எழுதிய இவரது இந்தப் புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தையும் விட விநோதமானது. காரணம் இதில் உள்ள இரண்டு ஆசாமிகள். இந்த இருவருமே மனிதரல்லர்…

யூதர்களும் கிறிஸ்தவர்களும்: இன்றைய சூழலில் ஒரு வேதாகமப் பார்வை

யூதர்களும் கிறிஸ்தவர்களும்: இன்றைய சூழலில் ஒரு வேதாகமப் பார்வை

உலக வரைபடத்தில் இஸ்ரவேல் ஒரு தேசமாக மட்டும் இல்லை; அது மீண்டும் உருப்பெற்ற காலத்தில் இருந்தே விவாதங்களின் மையப்புள்ளியாகவும் இருக்கிறது. இன்னும் சரியாகச் சொன்னால், பல ஆயிர ஆண்டு சர்ச்சை வரலாறு ஒரு நாட்டுக்கு இருக்குமென்றால் அது இஸ்ரேல் தேசம் அல்லது யூதர்களைக் குறித்ததாகத்தான் இருக்கும். கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களைக் குறித்த ஒரு குழப்பம் உண்டு. ஒருபுறம், “அவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், அவர்களுக்கு நாம் நிபந்தனையற்ற ஆதரவு தர வேண்டும்” என உணர்ச்சிவசப்படும் ஒரு கூட்டம்; மறுபுறம், “அவர்கள்…

தேடுங்கள்… கண்டடைவீர்கள்!

தேடுங்கள்… கண்டடைவீர்கள்!

கோடிக்கணக்கான மனிதர்கள் கடவுளைத் தேடிக்கொண்டிருப்பது உண்மையிலேயே இயல்பான விஷயம் தானா? இல்லை விவரமற்ற, முதிர்ச்சியற்ற, அறியாமையால் செய்யப்படும், பகுத்தறிவற்ற செயலா? மனிதன் ஏன் தன் கண்களால் பார்க்க இயலாத ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறான்? இது வெறும் பொழுதுபோகாமல் செய்யப்படும் காரியமா அல்லது கஷ்ட காலங்களில் மன சமாதானத்திற்காகத் தேடிக்கொள்ளும் ஒரு ‘உளவியல் சமாளிப்பா’ (Psychological Coping Mechanism)? அருள்நாதர் இயேசு கிறிஸ்து சொன்னார்: “தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்.” பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த வாசகத்தைச் சுவர்களிலும் பாறைகளிலும் சுண்ணாம்பால் சுவிசேஷகர்கள் எழுதியிருப்பார்கள்….

தேவனின் இறையாண்மை: அகிலத்தை ஆளும் ஏகாதிபத்தியம்!

தேவனின் இறையாண்மை: அகிலத்தை ஆளும் ஏகாதிபத்தியம்!

“அவரின்றி ஓரணுவும் அசையாது” – இது நம் முன்னோர் இறைமொழி. இதிலிருக்கும் ஆழமான இறையியல் உண்மைதான் இறைவனுடைய இறையாண்மை (Sovereignty of God)! அதற்கு இன்னும் சிறப்பான பெயர்: ஏகாதிபத்தியம்! இறையாண்மை என்கிற இந்த வார்த்தையை அடிக்கடி அரசியல்வாதிகள் பேசக் கேட்டிருப்பீர்கள். இந்த இறையாண்மை என்றால் என்ன? எளிமையாகச் சொன்னால், இந்தப் பிரபஞ்சத்தின் மீது இறைவனுக்கு இருக்கும் முழுமையான அதிகாரம் மற்றும் கட்டுப்பாடு. தேவன் ஒரு அதிகாரம் மிக்க சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்; எனவே தற்செயலாக எதுவும் இங்கே…

நாம் ஏற்கனவே அங்கேதான் இருக்கிறோம்!

நாம் ஏற்கனவே அங்கேதான் இருக்கிறோம்!

(நித்தியம் குறித்த ஒரு பார்வை) ‘டைம் மெஷின்’ (கால இயந்திரம்) மூலம் கடந்த காலத்திற்கோ, அல்லது எதிர்காலத்திற்கோ பயணம் செய்வது என்பது பலரும் ஏங்கும் ஒரு விஷயம். திரைப்படங்களில் இத்தகைய பயணங்களைப் பார்ப்பதே நமக்கு ஆச்சரியம் ஊட்டும் விஷயம்தான்! (ஐய்யகோ…  ஒரு கிறிஸ்தவன் சினிமா பார்ப்பதா? – என்று அதிராமல் தொடர்ந்து வாசியுங்கள் ப்ளீஸ்) எனக்கும் 80-களுக்குத் திரும்பிச் சென்று, நாங்கள் வசித்த அந்த ஹவுசிங் போர்டு காலனியில் என் நண்பர்களுடன் ‘மரக்குரங்கு’ விளையாட வேண்டும் என்கிற…

பவுல் கிறிஸ்தவத்தை உருவாக்கினாரா? ஒரு வேத வரலாற்றுப் பார்வை

பவுல் கிறிஸ்தவத்தை உருவாக்கினாரா? ஒரு வேத வரலாற்றுப் பார்வை

வேதாகமத்தை ஆழமாக வாசியாத சிலர் மத்தியில், “இயேசு ஒரு நல்ல போதகர், ஆனால் பவுல்தான் இன்று நாம் காணும் கிறிஸ்தவ மதத்தை உருவாக்கினார் (Paul invented Christianity)” என்ற ஒரு கருத்து பரவலாக உண்டு. இயேசு போதித்த எளிய அன்பின் மார்க்கத்தை, பவுல் தனது இறையியல் அறிவாலும் நியாயப்பிரமாணப் பின்னணியாலும் சிக்கலான ஒரு மதமாக மாற்றிவிட்டார் என்பதே இவர்களின் வாதம். இந்தக் கருத்து எவ்வளவு தூரம் வேதத்திற்கும் சரித்திரத்திற்கும் புறம்பானது என்பதை நாம் ஆராய்வது அவசியம். பவுல்…

சட்டம் ஒரு சங்கடம்

சட்டம் ஒரு சங்கடம்

“இதென்ன உன் இடம்ணு எழுதி வச்சிருக்கா?” பள்ளியில் மாணவர்கள் இடையே இடத்தகறாறு வரும்போது வரும் வார்த்தைகள் இவை. இப்படிக் கேட்பதற்குக் காரணம் எழுத்துக்கு அல்லது எழுதப்பட்ட வார்த்தைக்கு வலிமை அதிகம் என்பதுதான். நிலப்பத்திரம் நாமறிந்த ஒரு நல்ல உதாரணம். ஒரு விண்ணப்பத்தைக்கூட எழுத்தில் கேட்டால்தான் அதற்குண்டான மதிப்பையும் மரியாதையையும் பெறுகிறது. துவக்கத்தில் தன் சாயலை தேவன் மனிதனுள் வைக்கும்போது அவருடைய பிரமாணங்களை இருதயத்தில்தான் வைத்தார். இருதயம் ஒரு எழுத்துப் பலகை. அதில் எப்போதும் விஷயங்கள் எழுதப்பட்டுக்கொண்டே தான்…

இப்படிக்கு பிசாசு

இப்படிக்கு பிசாசு

 ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பது தெரியும். ஆனால், பிசாசு கடிதம் எழுதுவது? அதுவும் தன் மருமகனுக்கு “நல்ல ஆலோசனை”களைக் கடிதங்களாக எழுதினால்? பிரச்சனைகளைக் கொண்டுவருபவன் பிசாசு. அந்தப் பிசாசுக்கே சில பிரச்சனைகள் இருந்து அதைப் பிசாசே சொன்னால் எப்படி இருக்கும்? அதையும் புத்தகமாக, “எனக்கு இருக்கும் பிரச்சனைகள் இவை, இவற்றைச் எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. எனக்கு திகைப்பாக இருக்கிறது” என்றெல்லாம் புலம்பலாக எழுதினால்? பிரச்சனைகளைக் கொண்டுவருபவன் பிசாசு. அந்தப் பிசாசுக்கே சில பிரச்சனைகள் இருந்து அதைப்…

கிறிஸ்தவம் தந்த கொடை

கிறிஸ்தவம் தந்த கொடை

ஒருவேளை பூமிக்கு வராமல் இருந்திருந்தால்? அவர் நமக்காக மரிக்காமல் இருந்திருந்தால்? தன்னால் இரட்சிப்பட்டவர்களாக தன் சரீரமான சபையை பூமியில் அவர் ஸ்தாபிக்காமல் இருந்திருந்தால்? உலகமெங்கும் அவரது சீடர்கள் பரம்பி இன்றுவரை அவரது அன்பின் நீட்சியாகச் செயல்படாமல் இருந்திருப்பார்களானால் இன்று எப்படி இருந்திருப்போம்? எல்லா வசதிகளையும் அருகருகே கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டைச் சேர்ந்த நமக்கு, மொபைலிலும், போக்குவரத்திலும், இணையத்திலும் இனி வரும் காலங்களில் ஆர்டிஃபிஷ்யல் இண்டலிஜென்சிலும் இன்னமும் கணக்கிலடங்கா வசதிகளைப் பெற்ற ஒரு சமுதாயத்தில் இருக்கும் நாம், ஒரு…

தூங்கும் மிருகம்?

தூங்கும் மிருகம்?

ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் தூங்கிக் கொண்டிருக்கும். அது அவ்வப்போது எட்டிப்பார்க்கும் என்று சொல்வார்கள். அதாவது, நமக்குள் இருக்கும் நன்மையான எண்ணங்களுக்கும், தீமையான எண்ணங்களுக்கும் உருவமும் உயிரும் அளித்தால் நமக்குள் ஒரு நல்ல மனிதனும் தீய மிருகமுமாக நமக்குள்ளேயே இருவர் உண்டு – என்கிற சிந்தனை உலகத்தில் இருந்து வரும் ஒரு சிந்தனை.!  சிலருக்கு நல்லவன் வெளியே உலாவிக்கொண்டிருப்பான் – அவர்கள் நல்லவர்கள். சிலருக்கு தீயவன் வெளியே. அவர்கள் மோசமான மிருகங்கள். பெரும்பாலும் நல்லவர்களுக்குள்ளே தூங்கிக்கொண்டிருக்கும் மிருகத்தை…