கிறிஸ்தவ கண்ணோட்டம்

எண்ணங்களை மேம்படுத்துங்கள்

எண்ணங்களை மேம்படுத்துங்கள்

இன்று சில சபைக்குள் பிரசங்கிக்கப்படுகிற சில புத்தகங்கள்: ஆனால், இந்தப் புத்தகங்களின் பெயரையோ, எழுத்தாளர்களையோ குறிப்பிட்டால் மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதெல்லாம், இதையெல்லாம் கர்த்தர் சொன்னார் என்று வேதாமத்தில் சில வசனங்களை நுட்பமாக வியாக்கியானம் செய்துவிட்டால் போதும். சபை குஷியாகிவிடும்! எனவே மேற்சொன்ன புத்தகங்களுக்கு கறுப்பு அட்டைஇட்டு வேதாகமம் என்று பெயரிட்டால் எல்லாம் சுகமே! எதிர்காலம் டாப். ஏனென்றால் இதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.  இதற்காக கீழே உள்ள வசனங்களை மறைக்கவேண்டும். மறக்கடிக்க வேண்டும். அல்லது புறக்கணிக்கிற அளவுக்கு புரட்டவேண்டும்: அன்றியும்…

உணர்ச்சிப் பொங்கல்!

உணர்ச்சிப் பொங்கல்!

ஒரு நிகழ்வு குறித்து நாம் பெறும் அறிதல், மற்றும் புரிதலே உணர்வு. அதை வெளிப்படுத்தும் விதமே உணர்ச்சி. உணர்வு – Understanding after knowing.உணர்ச்சி – Feeling. தேவன் என்னை இரட்சித்திருக்கிறார் என்பது அறிதலால் வருவது உணர்வு. அதைச் சார்ந்து அவருக்கு அந்த உணர்வை வெளிப்படுத்தும் உணர்ச்சி சரியானது. சும்மா பாடுதல், ஆடுதல், கைகளை உயர்த்தி வெறுமனே சத்தமிடல், ஆராதனை என்கிற பெயரில் உணர்ச்சிவசம் அடைந்து சத்தமிடல், கண்ணீர் சொறிதல், புல்லரித்தல், அந்நியபாஷையில் பேசுதல் – இதற்கும்…

நான் யார்?

நான் யார்?

வேலைக்கான இண்டர்வியூ சென்றிருக்கிறீர்களா? அங்கு கேட்கப்படும் முக்கியமான கேள்வி – ‘உங்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்’ என்பார்கள். அதுவரை யோசிக்கவில்லை என்றால் திகிரென்று கூட இருக்கும். “நா…நா.. வந்து, என் பேரு..” என்று நாக்குக் குழறுவதில் இருந்து, இல்லாத பொல்லாத விஷயங்களைக்கூட நம்மைப் பற்றி என்று சொல்லக்கூடிய இடம் இண்டர்வியூக்கள்.  நம்முடைய அடையாளங்கள் பொதுவாக நம்மைப் பற்றிய அபிப்பிராயங்கள் மேல்தான் கட்டப்படுகின்றன. நம்மைப் பற்றி நாம் அறிந்திருப்பதற்கும், அடுத்தவர் அறிந்திருப்பதற்குமே கூடப் பல முரண்கள் இருக்கும் என்பதால் நம்முடைய…