ஏன் 66 புத்தகங்கள் மட்டும்?
பைபிள் ரொம்ப ‘வெயிட்’ட்டான புத்தகம். அதில் உள்ள காகிதங்கள் மட்டும் தடிமனாக இருந்திருந்தால் கையிலெல்லாம் கொண்டு செல்ல இயலாது. இன்னும் மிகப்பெரிதாக இருந்திருக்கும். இப்போதே கனம் அதிகம் என்பதற்காக சர்ச்சுக்குக் கூட எடுக்காமல் செல்பவர்கள் உண்டு.நம் கைகளில் வேதம் இப்படிக் கனமாக இருக்க அது ஒற்றைப் புத்தகம் அல்ல என்பதும் ஒரு காரணம்; 66 புத்தகங்களின் தொகுப்பு. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்டவை. அதுவும் பலரால்!. ஆனால் ஏன் 66 மட்டும்தான் நம் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் கையில்…