கிறிஸ்தவம் இவ்வளவுதான்: சி.எஸ். லூயிஸின் Mere Christianity தமிழில்
ஆங்கிலக் கிறிஸ்தவ இலக்கியங்களில் அதிகம் வாசிக்கப்படும் Mere Christianity இப்போது தமிழில். மொழிபெயர்ப்பு அல்ல — தழுவல். ஏன், எப்படி என்பதை மொழிபெயர்ப்பாளரே விளக்குகிறார்.
அறிவியலை எதிர்த்ததா கிறிஸ்தவம்?
(முன்குறிப்பு: மேலே இருக்கும் படத்தில் இருப்பவர்கள் எல்லாம் வெறும் வில்லேஜ் விஞ்ஞானிகள் அல்லர்!) கிறிஸ்தவம் அறிவியலுக்கு எதிரானது என்கிற துர்கருத்தைச் சிலர் திரும்பத் திரும்பப் பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள். இதைப் பல புத்தகங்களாக வெளியிட்டுக் காசுபார்த்தவர்கள் உண்டு. தமிழிலும் மொழிபெயர்த்து வந்திருக்கின்றன. சமீபத்தில் என் கண்ணில் ஒரு புத்தகம் பட்டதால் இதைப் பற்றி சற்று விளக்கியாக வேண்டும். ரோமன் கத்தோலிக்க சபையின் வரலாற்றில் சிலர் சில அறிவியல் கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடிப்பாளர்களையும் எதிர்த்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், அதற்காக ஒட்டுமொத்த…
தேவன் தன் முடிவுகளை மாற்றிக்கொள்பவரா?
தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார். – ஆதியாகமம் 6:6,7 நம்முடைய மனம் (வாக்குறுதி, பேச்சு) மாறுவதற்கும் தேவன் தன் மனதை மாற்றிக்கொண்டார் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது; அல்லது சம்பந்தமே இல்லை என்றுகூடச் சொல்லிவிடலாம். நிச்சயம், நம்மைப்போல ஒன்றைச் செய்ய…
ஆபத்தான சுதந்திரம்!
தேவன் ஏன் எல்லா மனிதர்களையும் தங்கள் போக்குக்கு விடவேண்டும்? ஏன் ‘ஒரு ஆட்டு ஆட்டி’ அனைவரையும் தனக்கு இணக்கமாக்கிவிடக்கூடாது? இது பிசாசுகளே அடிக்கடி வியந்து ஆராய்ச்சி செய்யும் ஒரு விஷயம் போலத்தான் தெரிகிறது. “ஸ்க்ரூடேப் லெட்டர்ஸ்” (The Screwtape Letters) என்கிற ஒரு புத்தகம். சி.எஸ். லூயிஸ் 1942-ல் எழுதியது. நார்னியா கதைகளை எழுதிய இவரது இந்தப் புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தையும் விட விநோதமானது. காரணம் இதில் உள்ள இரண்டு ஆசாமிகள். இந்த இருவருமே மனிதரல்லர்…
தேடுங்கள்… கண்டடைவீர்கள்!
கோடிக்கணக்கான மனிதர்கள் கடவுளைத் தேடிக்கொண்டிருப்பது உண்மையிலேயே இயல்பான விஷயம் தானா? இல்லை விவரமற்ற, முதிர்ச்சியற்ற, அறியாமையால் செய்யப்படும், பகுத்தறிவற்ற செயலா? மனிதன் ஏன் தன் கண்களால் பார்க்க இயலாத ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறான்? இது வெறும் பொழுதுபோகாமல் செய்யப்படும் காரியமா அல்லது கஷ்ட காலங்களில் மன சமாதானத்திற்காகத் தேடிக்கொள்ளும் ஒரு ‘உளவியல் சமாளிப்பா’ (Psychological Coping Mechanism)? அருள்நாதர் இயேசு கிறிஸ்து சொன்னார்: “தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்.” பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த வாசகத்தைச் சுவர்களிலும் பாறைகளிலும் சுண்ணாம்பால் சுவிசேஷகர்கள் எழுதியிருப்பார்கள்….
நாம் ஏற்கனவே அங்கேதான் இருக்கிறோம்!
(நித்தியம் குறித்த ஒரு பார்வை) ‘டைம் மெஷின்’ (கால இயந்திரம்) மூலம் கடந்த காலத்திற்கோ, அல்லது எதிர்காலத்திற்கோ பயணம் செய்வது என்பது பலரும் ஏங்கும் ஒரு விஷயம். திரைப்படங்களில் இத்தகைய பயணங்களைப் பார்ப்பதே நமக்கு ஆச்சரியம் ஊட்டும் விஷயம்தான்! (ஐய்யகோ… ஒரு கிறிஸ்தவன் சினிமா பார்ப்பதா? – என்று அதிராமல் தொடர்ந்து வாசியுங்கள் ப்ளீஸ்) எனக்கும் 80-களுக்குத் திரும்பிச் சென்று, நாங்கள் வசித்த அந்த ஹவுசிங் போர்டு காலனியில் என் நண்பர்களுடன் ‘மரக்குரங்கு’ விளையாட வேண்டும் என்கிற…
அறிவியல் வளர வளர இறைவன் தேவைப்படமாட்டாரா?
“அறிவியல் வளர்ந்துகொண்டிருக்கிறது. அதனால், அறிவியலுக்கு இன்னும் சிறிது காலம் கொடுங்கள்; மதங்கள், குறிப்பாக கிறிஸ்தவம் அதன்பின் அவசியம் இல்லாமல் போய்விடும்” என்பது சில கடவுள் மறுப்பாளர்களின் வாதம். அதாவது, அறிவியல் வளர வளர, இறைவன் தேவையற்றவர் ஆகிவிடுவார் என்பது இவர்களுடைய எண்ணம். ஆனால், இந்த எண்ணம் மெய்யறிவுக்கு (Truth) முற்றிலும் புறம்பானது. இன்று நாம் வாழும் உலகம் அறிவியலால் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். நேற்று முடியாத பல காரியங்கள் இன்று சாதாரணமாக நடக்கிறது; அறிவியலால்…
சட்டம் ஒரு சங்கடம்
“இதென்ன உன் இடம்ணு எழுதி வச்சிருக்கா?” பள்ளியில் மாணவர்கள் இடையே இடத்தகறாறு வரும்போது வரும் வார்த்தைகள் இவை. இப்படிக் கேட்பதற்குக் காரணம் எழுத்துக்கு அல்லது எழுதப்பட்ட வார்த்தைக்கு வலிமை அதிகம் என்பதுதான். நிலப்பத்திரம் நாமறிந்த ஒரு நல்ல உதாரணம். ஒரு விண்ணப்பத்தைக்கூட எழுத்தில் கேட்டால்தான் அதற்குண்டான மதிப்பையும் மரியாதையையும் பெறுகிறது. துவக்கத்தில் தன் சாயலை தேவன் மனிதனுள் வைக்கும்போது அவருடைய பிரமாணங்களை இருதயத்தில்தான் வைத்தார். இருதயம் ஒரு எழுத்துப் பலகை. அதில் எப்போதும் விஷயங்கள் எழுதப்பட்டுக்கொண்டே தான்…
டோபமைன்: வீணாக்கப்படும் இறைப்படைப்பு
எக்கச்சக்கமாக மொபைலில் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருப்பீர்களானால், டோபமைன் என்கிற வார்த்தை ஒருமுறையாவது உங்களைக் கடந்து சென்றிருக்கும். இது நம் உடலில் ஏற்படும் ஒரு அவசியமான சுரப்பு. நம் சரீரம் தேவன் வடிவமைத்த ஒரு அதிசயமான கருவி. அதில் ஹார்மோன்களின் பங்கு மிகவும் அதிகம். பிரச்சனைகள் வராதவரை இந்த ஹார்மோன்களைப் பற்றியும் நாம் அதிகம் யோசிப்பதில்லை. ஹார்மோன்கள் ஒருவகை வேதிப்பொருட்கள் – பழைய தமிழில் இரசாயனம். நம் உடலில் ஒவ்வொரு இரசாயனமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு…
இப்படிக்கு பிசாசு
‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பது தெரியும். ஆனால், பிசாசு கடிதம் எழுதுவது? அதுவும் தன் மருமகனுக்கு “நல்ல ஆலோசனை”களைக் கடிதங்களாக எழுதினால்? பிரச்சனைகளைக் கொண்டுவருபவன் பிசாசு. அந்தப் பிசாசுக்கே சில பிரச்சனைகள் இருந்து அதைப் பிசாசே சொன்னால் எப்படி இருக்கும்? அதையும் புத்தகமாக, “எனக்கு இருக்கும் பிரச்சனைகள் இவை, இவற்றைச் எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. எனக்கு திகைப்பாக இருக்கிறது” என்றெல்லாம் புலம்பலாக எழுதினால்? பிரச்சனைகளைக் கொண்டுவருபவன் பிசாசு. அந்தப் பிசாசுக்கே சில பிரச்சனைகள் இருந்து அதைப்…
- 1
- 2