கிறிஸ்தவம் இவ்வளவுதான்
₹400.00
சென்ற நூற்றாண்டில் வெளியாகி, இன்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஒரு கிளாசிக் படைப்பு ‘Mere Christianity’. காலத்தை வென்ற இந்த ஆங்கில நூல், இப்போது எளிய தழுவல் நடையில் தமிழாக்கமாக உங்கள் கைகளில்! இது வார்த்தைக்கு வார்த்தை செய்யப்பட்ட வறண்ட மொழிபெயர்ப்பல்ல. சிறப்பான தமிழ் தழுவல். வாசிக்க இலகுவான நடை!
200 in stock
Description
சென்ற நூற்றாண்டில் வெளியாகி, இன்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஒரு கிளாசிக் படைப்பு ‘Mere Christianity’. காலத்தை வென்ற இந்த ஆங்கில நூல், இப்போது எளிய தழுவல் நடையில் தமிழாக்கமாக உங்கள் கைகளில்! இது வார்த்தைக்கு வார்த்தை செய்யப்பட்ட வறண்ட மொழிபெயர்ப்பல்ல. சிறப்பான தமிழ் தழுவல். வாசிக்க இலகுவான நடை!
“உலகில் ஏன் இத்தனை அநீதிகள்? நியாயம், அநியாயம் என்பதை யார் தீர்மானிப்பது? நமக்குள் ஒலிக்கும் அந்த தார்மீகக் குரல் (Moral Law) எங்கிருந்து வருகிறது?”
இந்தக் கேள்விகள் ஒருமுறையேனும் உங்களைத் தொந்தரவு செய்திருக்கிறதா? அப்படியானால், இந்தப் புத்தகம் உங்களுக்கானது.
சி.எஸ். லூயிஸ் ஒரு காலத்தில் தீவிர நாத்திகராக இருந்தவர். ஆனால், பிரபஞ்சத்தின் மர்மத்தைத் தேடும் அவரது அறிவுப்பூர்வமான பயணம், இறுதியில் அவரை இறைவனிடம் கொண்டு சேர்த்தது. அந்தத் தேடலின் நேர்மையான பதிவுதான் இந்நூல்.
‘கிறிஸ்தவம் இவ்வளவுதான்’ என்பது எந்தவொரு குறிப்பிட்ட சபைப்பிரிவையும் சார்ந்ததல்ல. இது உங்களை நம்பச் சொல்லி வற்புறுத்தவும் இல்லை. மாறாக, அறிவுப்பூர்வமான தேடலுக்கு கிறிஸ்தவம் முன்வைக்கும் பதில்கள் என்ன என்பதைத் திறந்த மனதுடன் சிந்திக்க அழைப்பதே லூயிஸின் நோக்கம்.
சத்தியத்தைத் தேடும் தாகம் கொண்ட எவரும்—அவர் எம்மதத்தைச் சார்ந்தவராயினும்—தன் வாழ்நாளில் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு அறிவுப் பெட்டகம்.
மூலம்: Mere Christianity (மியர் கிறிஸ்டியானிட்டி) — சி.எஸ். லூயிஸ்
தமிழாக்கம்: பென்னி அலெக்ஸாண்டர்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கேள்வி 1: இந்தப் புத்தகம் எதைப் பற்றிப் பேசுகிறது?
சி.எஸ். லூயிஸ் எழுதிய புகழ்பெற்ற ‘Mere Christianity’ நூலின் தமிழாக்கமே இந்தப் புத்தகம். கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை உண்மைகளை எந்தவொரு குறிப்பிட்ட சபை வேறுபாடுகளும் இன்றி மிகத் தெளிவாகவும் தர்க்கரீதியாகவும் விளக்கும் நூல் இது. இரண்டாம் உலகப்போரின் இருண்ட காலகட்டத்தில், மனமுடைந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் லூயிஸ் ஆற்றிய வானொலி உரைகளின் தொகுப்பே இந்த நூலாக உருமாறியிருக்கிறது.
கேள்வி 2: ஆங்கிலத் தலைப்பான ‘Mere Christianity’ என்பதன் அர்த்தம் என்ன?
‘Mere’ என்ற வார்த்தையை ‘வெறும்’ என்று நேரடியாக அர்த்தம் கொள்ளக்கூடாது. அது ‘மதிப்பற்றது’ என்ற பிழையான எண்ணத்தைத் தந்துவிடும். மாறாக, தேவையற்ற சடங்குகளையும் உபதேசப் பிரிவினைகளையும் தவிர்த்துவிட்டு, கிறிஸ்தவத்தின் கலப்படமற்ற, ஆழமான சாராம்சத்தை மட்டுமே லூயிஸ் இங்கே முன்வைக்கிறார். ‘கிறிஸ்தவம் என்பது அடிப்படையில் இவ்வளவுதான்’ என்ற பொருளைத் தருவதாலேயே இந்தத் தமிழாக்கத்திற்கு ‘கிறிஸ்தவம் இவ்வளவுதான்!’ என்று பெயரிட்டிருக்கிறோம்.
கேள்வி 3: இது வார்த்தைக்கு வார்த்தை செய்யப்பட்ட நேரடி மொழிபெயர்ப்பா?
இல்லை, இது ஒரு நேரடி மொழிபெயர்ப்பு அல்ல. லூயிஸின் ஆங்கில நடை மிகவும் செறிவானது. அதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால் தமிழ் வாசிப்பிற்கு அந்நியமாக இருக்கும். எனவே, லூயிஸ் நம் முன்னே அமர்ந்து உரையாடுவது போன்ற ஒரு ‘தழுவல்’ (Adaptation) நடையில் இதை உருவாக்கியிருக்கிறோம். அதேசமயம், அவர் சொல்ல வந்த எந்தவொரு ஆழமான சத்தியத்தையும், மூலக்கருத்தையும் ஒரு நூலளவுகூடச் சிதையாமல் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறோம்.
கேள்வி 4: இந்தப் புத்தகம் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமானதா? கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் வாசிக்கலாமா?
நிச்சயமாக வாசிக்கலாம். சி.எஸ். லூயிஸ் ஒருகாலத்தில் தீவிர நாத்திகராக இருந்தவர். நீண்ட தர்க்கரீதியான தேடலுக்குப் பிறகே அவர் கிறிஸ்துவைக் கண்டடைந்தார். எனவே, எடுத்தவுடனேயே அவர் வேதவாக்கியங்களை மேற்கோள் காட்டிக் கட்டாயப்படுத்துவதில்லை. மனிதர்களுக்குள் இயல்பாக இருக்கும் ‘சரி, தவறு’ என்ற உணர்வில் தொடங்கி, மிகவும் அறிவார்ந்த முறையில் உரையாடலை நகர்த்துகிறார். சந்தேகங்கள் நிறைந்தவர்களுக்கும், கடவுள் மறுப்பாளர்களுக்கும் இது ஒரு சிறந்த திறவுகோலாக இருக்கும்.
கேள்வி 5: இந்த நூலின் வாசிப்பு அனுபவம் எப்படி இருக்கும்? எளிதாகப் புரிந்துவிடுமா?
இது ஒரே மூச்சில் வாசித்து முடிக்கும் நாவல் அல்ல. மிகவும் ஆழமான இறையியல் கருத்துக்களை லூயிஸ் பேசுகிறார். வாசகர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகக் கருத்துக்களை மேலோட்டமாக நீர்த்துப்போகச் செய்யும் (Dumbing down) வேலையை நாம் இங்குச் செய்யவில்லை. எனவே, நிறுத்தி, நிதானமாக, ஒவ்வொரு பத்தியாகச் சிந்தித்து வாசிக்க வேண்டும். தேவைப்பட்டால் சில பகுதிகளைத் திரும்ப வாசிப்பது உங்கள் சிந்தனையை இன்னும் விரிவடையச் செய்யும்.
கேள்வி 6: கிறிஸ்தவத்தின் பல உபதேசப் பிரிவுகள் குறித்து லூயிஸ் இதில் என்ன சொல்கிறார்?
கிறிஸ்தவர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கும் உபதேசங்களை லூயிஸ் முழுமையாகத் தவிர்த்துவிட்டார். அதைக் குறித்து விவாதிப்பது அவர் நோக்கமல்ல. அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஏற்றுக்கொள்ளும் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகம், மனிதனின் பாவம், அதற்கான ஈடேற்றம் ஆகிய மையமான சத்தியங்களை மட்டுமே அவர் ஆணித்தரமாகப் பேசுகிறார். அதனால்தான், எந்தச் சபைப் பின்னணி கொண்டவரும் இந்த நூலை எந்தவிதத் தயக்கமுமின்றி வாசிக்கலாம்.
Additional information
| Weight | 450 g |
|---|---|
| பக்கங்கள் | 400 |



Reviews
There are no reviews yet.