இறை அங்கீகாரம்
தன்னைச் சுற்றியுள்ளவர்கள் தன் உழைப்பையும் அடையாளத்தையும் அங்கீகரிக்க வேண்டும் என்ற ஏக்கம் ஒவ்வொரு மனித மனதின் ஆழத்திலும் இயல்பாகவே குடிகொண்டிருப்பதுதான். ஆனால், அசட்டை பண்ணப்பட்ட மனிதர்கள்தான் இந்த உலகில் பெரும்பான்மையினர்! ஆனால் நம் ஆண்டவர் அப்படியில்லை. விழுந்துபோன மனிதர்களிலும்கூடப் பலரைத் தெரிந்தெடுத்த் தேவன் தன் பிள்ளைகளாக அங்கீகரித்திருப்பதை வேதம் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறது. தேவன் மனிதனைத் தன் கரத்தின் கிரியையாகப் படைத்திருந்தாலும், அவனுடைய விசுவாசத்தையும் உண்மையையும் கண்டு, அவனைப் பாராட்டிப் பெருமைப்படுத்துவதில் தயங்குவதில்லை. வேதாகம வரலாற்றில்,…
வெறும் மூலக்கூறுகளா நாம்?
குறைப்பியல் என்று அறிவியலிலும் தத்துவத்திலும் ஒரு கோட்பாடு உண்டு. ஆங்கிலத்தில் Reductionism. இது ஒரு சிக்கலான விஷயத்தை அதன் மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து, அந்தப் பகுதிகளின் தொகுப்புதான் அந்த முழுமை என்று வாதிடும் ஒரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் குறைப்பியலுக்கு நல்ல உதாரணம் மனிதனை வெறும் ‘உயிரணுக்களின் தொகுப்பு’ (Biological Machine) என்று பார்ப்பது. நவீன அறிவியலாளர்கள் முன்வைக்கும் இந்த விஷயம் விசுவாசிகளுக்குச் சவாலாக அமையலாம். இதை நீங்கள் கேள்விப்பட்டிருக்காவிட்டாலும், இறைவனின் படைப்பாக நாம் எவ்வளவு…
தியாகம்
இரண்டாம் உலகப் போரின் முடிவில் பல கதைகள் வெளிவந்துகொண்டே இருந்தன. சில அதிர்ச்சி இரகம். பலவும் மிகவும் அதிர்ச்சி இரகம். ஏராளமான வினோத நிகழ்வுகளை இரண்டாம் உலகப்போரின் பின்னர் பத்திரிக்கைகள் எழுதித்தள்ளின. அதில், ஒன்று விட்டோல்ட் பிலெக்கியின் (Witold Pilecki) தீரக் கதை. அமெரிக்காவின் தலைமையில் ஹிட்லரை எதிர்த்து நின்ற கூட்டுப் படைகள் ஆஷ்விட்ஸ் வதை முகாமுக்குள் நடப்பதை எப்படியாவது தெரிந்துகொள்ள விரும்பினர். இந்த ஆஷ்விட்ஸ் வதை முகாமுக்குள்தான் சுமார் 40 இலட்சம் யூதர்களாவது ஹிட்லரின் ஆட்களால்…
ஆபத்தான சுதந்திரம்!
தேவன் ஏன் எல்லா மனிதர்களையும் தங்கள் போக்குக்கு விடவேண்டும்? ஏன் ‘ஒரு ஆட்டு ஆட்டி’ அனைவரையும் தனக்கு இணக்கமாக்கிவிடக்கூடாது? இது பிசாசுகளே அடிக்கடி வியந்து ஆராய்ச்சி செய்யும் ஒரு விஷயம் போலத்தான் தெரிகிறது. “ஸ்க்ரூடேப் லெட்டர்ஸ்” (The Screwtape Letters) என்கிற ஒரு புத்தகம். சி.எஸ். லூயிஸ் 1942-ல் எழுதியது. நார்னியா கதைகளை எழுதிய இவரது இந்தப் புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தையும் விட விநோதமானது. காரணம் இதில் உள்ள இரண்டு ஆசாமிகள். இந்த இருவருமே மனிதரல்லர்…
சரணடைதல் எனும் வாசல்
என் வாழ்க்கையில் பல தருணங்களில் நான் அப்படியே தளர்ந்து போயிருக்கிறேன். அது வெறும் உடல் சோர்வு மட்டுமல்ல; அது ஒருவிதமான ஆத்தும இளைப்பு. ஓடிக்கொண்டே இருப்பதிலும், போராடுவதிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வையும் நமக்குப் புரியும்படி மாற்ற முயல்வதிலும் வந்த சோர்வு அது. நான் ஜெபிப்பேன், ஆனால் கவலைப்படுவதை நிறுத்தமாட்டேன். விசுவாசிப்பேன், ஆனால் விளைவுகளை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே துடிப்பேன். தேவனுடைய சமாதானம் எனக்கு வேண்டும் என்று கேட்பேன், ஆனால் என் திட்டங்களை மட்டும் விடவே மாட்டேன். அப்படிப்பட்ட ஒரு கையறு நிலையில், என் இதயத்தின் ஆழத்தில் ஒரு…
யூதர்களும் கிறிஸ்தவர்களும்: இன்றைய சூழலில் ஒரு வேதாகமப் பார்வை
உலக வரைபடத்தில் இஸ்ரவேல் ஒரு தேசமாக மட்டும் இல்லை; அது மீண்டும் உருப்பெற்ற காலத்தில் இருந்தே விவாதங்களின் மையப்புள்ளியாகவும் இருக்கிறது. இன்னும் சரியாகச் சொன்னால், பல ஆயிர ஆண்டு சர்ச்சை வரலாறு ஒரு நாட்டுக்கு இருக்குமென்றால் அது இஸ்ரேல் தேசம் அல்லது யூதர்களைக் குறித்ததாகத்தான் இருக்கும். கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களைக் குறித்த ஒரு குழப்பம் உண்டு. ஒருபுறம், “அவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், அவர்களுக்கு நாம் நிபந்தனையற்ற ஆதரவு தர வேண்டும்” என உணர்ச்சிவசப்படும் ஒரு கூட்டம்; மறுபுறம், “அவர்கள்…
தேடுங்கள்… கண்டடைவீர்கள்!
கோடிக்கணக்கான மனிதர்கள் கடவுளைத் தேடிக்கொண்டிருப்பது உண்மையிலேயே இயல்பான விஷயம் தானா? இல்லை விவரமற்ற, முதிர்ச்சியற்ற, அறியாமையால் செய்யப்படும், பகுத்தறிவற்ற செயலா? மனிதன் ஏன் தன் கண்களால் பார்க்க இயலாத ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறான்? இது வெறும் பொழுதுபோகாமல் செய்யப்படும் காரியமா அல்லது கஷ்ட காலங்களில் மன சமாதானத்திற்காகத் தேடிக்கொள்ளும் ஒரு ‘உளவியல் சமாளிப்பா’ (Psychological Coping Mechanism)? அருள்நாதர் இயேசு கிறிஸ்து சொன்னார்: “தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்.” பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த வாசகத்தைச் சுவர்களிலும் பாறைகளிலும் சுண்ணாம்பால் சுவிசேஷகர்கள் எழுதியிருப்பார்கள்….
தெய்வீகப் பேச்சு!
நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும். மற்றவர் மதிக்கும் வண்ணம் பேசவேண்டும். எல்லாம் சரிதான். ஆனால், தேவ வார்த்தைகளைப் பேசமுடியுமா? அதுவும் தேவனே பேசுவதுபோல்? அப்படி ஒரு மனிதன் பேசும் வார்த்தையை, தேவன் அப்படியே தன் வார்த்தையாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவது சாத்தியமா? 1 இராஜாக்கள் 17-ல் எலியா ஆகாபுக்கு முன்பாக நின்று, “கர்த்தர் சொல்லுகிறார்” என்று ஒரு செய்தியாளராக மட்டும் பேசவில்லை. மாறாக, “என் வாக்கின்படியே அன்றி…” என்று ஒரு அதிகாரத் தொனியில் முழங்குகிறார். வானத்தை அடைக்கும் சாவியைத் தான்…
கோபம், எரிச்சல், பயம் வருத்தம் – இவைகள் பாவங்களா?
கோபம், எரிச்சல், பயம், வருத்தம் போன்றவை எல்லாம் ‘அகிறிஸ்தவ’ உணர்வுகள் என்று நினைத்தால் அது தவறு. உண்மையில் மனிதன் விழுந்ததில் இந்த சுபாவங்கள் எல்லாம் இடப்பெயர்ச்சி அடைந்துவிட்டன. விளைவு: கோபம் மூர்க்கமாக, பயம் திகிலாக, வருத்தம் என்பது அவநம்பிக்கையாக – மனக்குழப்பமாக என்று சுபாவங்களே தங்கள் தன்மைகளை மாற்றிக்கொண்டு இருதயத்தில் அதனதன் இருப்பிடத்தைவிட்டு விலகிவிடுகின்றன. “கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” (எபேசியர் 4:26). இந்த வசனம் சொல்வது போல, கோபம் கொண்டால் உடனே பாவம் செய்தல் என்பது அந்த…
தீர்க்கதரிசனப் புத்தகங்கள்: ஒரு எளிய அறிமுகம்
பழைய ஏற்பாட்டில் வாசிக்க சவாலானவை என்றால் அது தீர்க்கதரிசன புத்தகங்கள் தான். கிறிஸ்தவர்களுக்குத் தீர்க்கதரிசனம் பிடிக்கிற அளவுக்கு, தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் பிடிக்காததற்குக் காரணம் அவற்றின் கடின நடைதான். ஆனால் அவர்கள்தான் தேவனது பிரதிநிதிகளாகப் பூமியில் இருந்தவர்கள். இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்த அவர்கள் வழியாகத்தான் தேவன் பேசினார். அவர் தெரிந்துகொண்ட அந்தப் பாத்திரங்களின் வேலை அவ்வளவு இலகுவாக இல்லை. காரணம் அவர்கள் வழியாக தேவன் பேசியவை கடினமானவை என்பதல்ல, அதைக் கேட்டு இணங்காத வணங்காக் கழுத்துள்ள கடின இருதய…