Blog

Welcome to our blog!

தாங்கமாட்டீர்கள் – பாகம் 2

தாங்கமாட்டீர்கள் – பாகம் 2

(முந்தைய பாகம்) பூமியில் கிறிஸ்து இருந்த காலங்களில் சீஷர்களால் விளங்கிக்கொள்ள அப்போது இயலாது என்பதாலேயே பலவற்றை அவர்களிடம் சொல்லவில்லை என்று சென்ற பாகத்தில் பார்த்தோம். ஒருமுறை ‘இப்போது சொன்னால் தாங்கமாட்டீர்கள்’ என்றேகூடச் சொல்லிவிட்டார். அவை என்ன என்று சீடர்களும் கேட்டாற்போல் தெரியவில்லை. இங்கு போதித்தவர் கிறிஸ்து! அவரைவிட மேலான போதகர் இருக்க வாய்ப்பில்லை. இருந்த போதிலும் அப்போது அவர்கள் பிற்காலங்களில் அவர்களாகவே கற்றுக்கொள்ள வேண்டிய காலத்திற்கென, பலவற்றை அவர் விட்டுவிட்டே சென்றார். அப்போது போதித்தவற்றில்கூட புரிந்து கொள்ளவும்…

Mr. கிறிஸ்தவன் SSLC, MBBS:

Mr. கிறிஸ்தவன் SSLC, MBBS:

இதென்னடா தலைப்பு கிறுக்குத்தனமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இது, தான் யார் என்று அடையாளம் புரியாமல் குழம்பிக்கொண்டிருக்கும் ஒரு கிறிஸ்தவனைப் பற்றியது. தொடர்ந்து பொறுமையாக வாசித்து தியானித்தால் புரியக்கூடும். சபைகளில் நிலவிவந்த குழப்பங்களைப் போக்க பல கடிதங்களை அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியவையே இன்று புதிய ஏற்பாடு முழுவதும் நிரம்பி இருக்கின்றன. அதில் வெவ்வேறு சபைகளுக்குத் தனித்தனியாக நாம் யார் என்பதை உச்சியில் அடித்தார்ப்போல் தெளிவாகப் பவுல் எழுதுகிறார். பெரும் மக்கள்கூட்டமான ரோமர்கள், கிரேக்கர்கள் மற்றும் யூதர்களுக்கு இடையே…

தி மெஸேஜ் பைபிள் – The Message Bible.

தி மெஸேஜ் பைபிள் – The Message Bible.

ஆங்கிலத்தில் The Message என்கிற பைபிள் ஒன்று உண்டு. இதை மொழிபெயர்ப்பு என்று சொல்வதைவிட தற்காலத்திற்கான எளிய விளக்க நடையில் எழுதப்பட்ட பைபிள் என்று சொல்லலாம். இதன் ஆசிரியர் மறைந்த போதகர் யூஜின் பீட்டர்ஸன். ESV, KJV, மற்றும் NKJV வேதங்களை மட்டும் பயன்படுத்தும் மொழிபெயர்ப்பு ஆதரவாளர்களால் காய்மகாரமாய்ப் பகைக்கப்படுபவர். மொழிபெயர்ப்பு என்கிற பேரில் வேதத்தைச் சிதைத்துவிட்டார் என்று கடுமையாக சொற்களால் அவரை வசைபாடுவார்கள். அதுவும் KJV ஐ மட்டும் பயன்படுத்தும் பழமைவாதிகள் மெஸேஜ் பைபிளை வெறுக்கிறார்கள்….

தாங்கமாட்டீர்கள் – பாகம் 1

தாங்கமாட்டீர்கள் – பாகம் 1

நல்ல ஆசிரியர்களுக்கென்று சில அடையாளங்கள் உண்டு. நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது குறைந்தகாலம்தான் அவர் வகுப்பெடுத்தார்.  ஆனால், பள்ளியில் அந்த ஒரு ஆசிரியர் கற்பித்த விதம் மட்டும் இன்றும் நினைவில் இருக்கிறது. தான் எடுக்கப்போகும் பாடப்பகுதியை முதலில் ஒரு 10 நிமிடம் வாசிக்க நேரம் தருவார் அதன் பின் சில கேள்விகளைக் கேட்பார். அல்லது கேள்வி கேட்கச் சொல்வார். கடினமான பாடம் என்றால் என்ன புரிந்துகொண்டீர்கள் என்று கேட்பார். இந்த நேரம் முடிந்தவுடன்தான் அவர் அந்தப் பாடத்துக்குள்…

மத உணர்வுகளைப் புண்படுத்தாதீர்

மத உணர்வுகளைப் புண்படுத்தாதீர்

ஒரு கிறிஸ்தவனாக மத உணர்வு புண்படுத்தப்பட்டால், அதை எப்படி எதிர்கொள்வது? கிறிஸ்தவ மத உணர்வு என்பதுதான் என்ன?  இந்தக் கேள்விக்கு பதில் தெரியுமுன் மத உணர்வு என்பதை வேதம் எப்படிப் பார்க்கிறது என்பதை அறிந்துகொள்ளவேண்டும். பொதுவாக மத உணர்வு என்பது ஒரு மதத்தைப் பின்பற்றுவோரின் இறைநம்பிக்கை, பின்பற்றும் வழிமுறைகள், மதக் கோட்பாடுகள் மற்றும் கடவுளைப் பற்றிய எண்ணங்கள்.  இந்த எண்ணக்களைப் பரிகசிப்பதை, அல்லது தவறாகத் திரித்துப் பேசுவது அந்த மதத்தைப் பின்பற்றுவோரின் மனதைக் காயப்படுத்தினால் அதுவே மத…

தேவ பெலன்

தேவ பெலன்

‘ பாவியாகிய எனக்காக கிறிஸ்து சிலுவையில் மரித்தார்’ என்பதை விசுவாசித்து அவரை  ஏற்றுக்கொள்ளும் எவரும் இரட்சிப்பு என்கிற சுதந்தரமாகிய பலனை அடைகிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கையில் பெற்ற பலன் அத்துடன் நம் வாழ்வில் நின்றுவிடுவதில்லை. அது தொடர்ச்சியாக வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வை வாழ பெலனும் செய்கிறது. “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது” என்று கொரிந்தியருக்கு எழுதும் முதலாம் கடிதத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு முக்கியமான திறவுகோலை விட்டுச் சென்றிருக்கிறார். இதை, ‘இரட்சிக்கப்பட்ட…

வயசானா சரியாகிவிடும்?

வயசானா சரியாகிவிடும்?

வயதும் அனுபங்களும் மட்டும் ஒரு மனிதனை நல்லவனாக வாழ வைத்துவிடும் என்றால் அறுபது எழுபதைத் தாண்டினால் அனைவரும் நல்லவர்களாகவும், மிகவும் நல்லவர்களாகவும் மாறி இருக்கவேண்டும். ஆனால் உண்மை அப்படி இல்லை என்பது நாம் அறிந்த உண்மை. வேதம் நமக்குப் போதிப்பது நல்லவர்களாக வாழ்வதைக் குறித்த அல்ல. மாறாக இவ்வுலகில் இரட்சிப்பையும் நித்தியமாக தேவனுடன் வாழும் சிலாக்கியத்தை அருளும் தேவ கிருபையையும். அதை நாம் அனுபவங்கள் வாயிலாககப் பெறுவதில்லை. கிறிஸ்துவால் பெறுகிறோம்.  இந்தக் கிருபை நம்மை நல்லவர்களாக ஆக்க…

கிருபை சத்தியம் கிறிஸ்து

கிருபை சத்தியம் கிறிஸ்து

கிறிஸ்து பூமியில் வந்தபோது கிருபையைக் குறித்துப் போதிக்கவில்லை. காரணம் அவர் மனு உருவில் வெளிப்பட்டதே கிருபையாகத்தான். அவர் கிருபையாக இருந்தார். (லூக்கா 18:13).  சத்தியம் என்றால் என்ன என்று கேட்ட பிலாத்துவுக்கு அவர் பதில் சொல்லவில்லை. சத்தியத்தினிடமே சத்தியம் என்றால் என்ன என்று கேட்டால் எப்படி? சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவர் அவர். நானே சத்தியம் என்றவர்.  கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. (யோவான் 1:17) கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் வார்த்தையான கிறிஸ்து மனிதருக்குள் வந்து வாசம்…

கிறிஸ்தவத்தில் சட்டவாதம்: எளிய விளக்கம்

கிறிஸ்தவத்தில் சட்டவாதம்: எளிய விளக்கம்

சமீபத்தில் ஒரு பிரசங்கம். அதில் பேசுபவர் ஒற்றைக்காலில் ‘முட்டிபோட்டு’ தான் ஜெபித்த விதத்தை விளக்கிக்கொண்டிருந்தார். மூட்டு இரண்டும் ‘காப்பு காய்த்து’ விடும்வரை ஜெபம் பண்ணுவாராம். அதாவது கடவுளை ‘இரங்க’ வைத்து இறங்கி வரச் செய்தல்.! இது ஒற்றைக்காலில் கிடுகிடு மலை உச்சியில் நின்று தவம் செய்வது போன்று; அதாவது அவரது கடினமான இந்த முயற்சிகளின் பலனாக, கடவுளின் மனதை இளக வைத்து, குளிரவைத்து – ஐஸ் வைத்து… அவர் விரும்பின காரியத்தை நடத்திவிடும்! தமிழ்க் கிறிஸ்தவத்தில் அதிகமாகப்…

கெட்ட நல்லவைகள்

கெட்ட நல்லவைகள்

  நமக்குள் இருக்கும் கெட்ட விஷயங்கள் பளிச்சென்று தெரிந்துவிடும். ஆனால், பல இடங்களில் நல்ல விஷயங்கள், நாம் அறியாத வகையில் நமக்கு இடைஞ்சலாக இருக்கும்! இதற்கு சுயபரிசோதனை அவசியம். ஏனென்றால், நல்ல பழக்கவழக்கங்கள் என்பவை இயல்பில் நல்லவைகளாக இருப்பதால், நம் இருதயம் அதில் மகிழந்து நின்றுவிடும். எனவே, ஒரு கட்டத்தில் நல்லபழக்க வழக்கங்களே நம்மை நல்லவர்களாக ஆக்கிவைத்திருப்பதாக நினைக்கத் துவங்குவோம். விளைவு, நம்மிடம் நம்மைபோல இல்லாதவர்களை, நல்லவர்கள் அல்ல என்றும் கருதம் அபாயம் உண்டு. கிறிஸ்தவர்களாக நாம்…