அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு…
நம் ஆண்டவருக்கு மிகப் பெரிதான சந்தோஷம் என்னவாக இருக்கும்? பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும், அவருக்குள்ளும் சிருஷ்டிக்கப்பட்டிருக்க அதென்ன பெரிதான சந்தோஷம் கிறிஸ்துவுக்கு என்று புதிதாக ஒன்று இருக்கமுடியும்? அதுவும் மரணத்தைக் குறித்த துயரத்தையும் ஒதுக்கிவைக்கக்கூடிய அளவுக்கு? பாவத்தில் உளலும் தன் மணவாட்டியாகிய சபையைத் தன் பரிசுத்த இரத்தத்தைத் தந்து, கழுவி, ஆட்டுக்குட்டியானவரின் திருமணநாளுக்காக, அவள்பால் கொண்ட தன் எல்லையில்லா அன்பினால் ஆயத்தப்படுத்தும் பெரும்…