கிறிஸ்தவப் பார்வை

கிறிஸ்துவின் கண்கொண்டு பார்த்தல்

அடுத்தவரை நியாயம் தீர்க்கலாமா?

அடுத்தவரை நியாயம் தீர்க்கலாமா?

உத்திரம் உங்கள் கண்களிலேயே இருந்ததென்றால் அது இயலாது. ஆகாது. அதையே இயேசு சொன்னார். முதலில் தன்னைச் சீர்செய்த அவசியம் நிச்சயம் தேவை. ஆனால், நியாயமே தீர்க்கக்கூடாது; குற்றப்படுத்தவே கூடாது என்பது இதற்குப் பொருள் அல்ல! “என் கண்களில் ஒரு பெரிய உத்திரமே இருந்ததப்பா, நான் அதையே எடுத்துப்போட என்னுள் வாழும் பரிசுத்த ஆவியானவர் உதவி செய்தார்; உன்னில் இருக்கும் துரும்ப அவருக்கு எம்மாத்திரம். நீ அதை உணர்ந்தால், அதை எடுத்துப்போடவது எளிது. உன் கண்ணில் இருக்கும் துரும்பை…

ஏரியாமாரி…

ஏரியாமாரி…

ஒரு புது ஊருக்கு மாறி செல்பவர்கள் அல்லது ஏரியா மாறிச் செல்பவர்கள், “ நல்ல ஏரியாவுல வீடு பாக்கணும், சுத்தி இருக்கிற ஆள்கள் வீடுகள் நல்லா இருக்கணும், சொந்த பந்தங்கள் இருக்குற ஏரியாண்ணா சிறப்பு!” என்றெல்லாம் பார்த்துதான் வீடு குடிபுகுவது வழக்கம். அதுவும் வீடு இடம் வாங்கவேண்டும் என்றால் சாதிசனமெல்லாம் பார்க்காமல் ஒரு ஏரியாவுக்குள் செல்லமாட்டர். ஏழைகள் குடிசைகள் வாழும் பகுதி என்றால், அந்த ஏரியாவே வேண்டாம் என்றுதான் ஒதுங்குபவர்கள் தாம் நாம் அனைவரும். ஆனால், இதற்கு…

பரலோகம் நுழையத் தகுதி

பரலோகம் நுழையத் தகுதி

இரட்சிக்கப்பட்ட உடன் ஒருவர் பரலோகம் போய்விடுவதில்லை! ஏன்? அப்படிச் சென்றால் ஒரு மணி நேரம்கூட அவரால் அங்கு தாக்குப்பிடிக்கமுடியாது. கற்றுக்கொண்ட, கற்றவைகளில் நிச்சயித்த, நிலைத்த மற்றும் முற்றும்முடிய இரட்சிக்கப்பட்ட நிலைகளைக் கற்றுத்தேற இவ்வுலகே சரியான இடம்.  முன்பு சரியற்ற இடமாக இருந்த அதே இடம் இன்று ஒரு பயிற்சிக்களமாக மாற்றப்படுகிறது. இதை அறியாமல், எப்படியோ பரலோகம் சென்று இந்த வண்டி சேர்ந்துவிடும் என்று கனவுகண்டு கொண்டிருந்தால் வண்டி பஞ்சராகிப் பரிதவிக்கும் அபாயம் உண்டு. மாறாக இவ்வுலக வாழ்வின்…

இயேசுவா? இயேசு கிறிஸ்துவா?

இயேசுவா? இயேசு கிறிஸ்துவா?

கிறிஸ்து இல்லாத இயேசு வேறு ஒரு இயேசு. நாம் சபைகளில் போதிக்கவேண்டிய இயேசு, வெறும் இயேசு அல்ல! — இயேசு கிறிஸ்து!!!