அவர் எனக்காக ஏன் மரிக்க வேண்டும்?

அவர் எனக்காக ஏன் மரிக்க வேண்டும்?

₹100.00

இயேசு சிலுவையில் அறையப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டாமல், வேறு வழியாக இரட்சிப்பைக் கொண்டு வந்திருக்க முடியாதா? அதுவுமில்லாமல், அவரது மரணம் எனக்கு எப்படிப் பொருந்தும்? அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கொலை, இன்று என் பிரச்சனைகளுக்குத் தீர்வாக முடியும்?. இது போன்ற கேள்விகள் உங்களுக்கு இருந்தால் இந்தப் புத்தகம் உங்களுக்குத்தான்.

200 in stock

Category:

Description

“பிரதர், இயேசு உங்களுக்காக மரித்தார். அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்கிற இந்த சத்தியமான வார்த்தைகள் சிம்பிளாக, சொல்ல ஈசியாக இருந்தாலும் — அதற்குள் இருக்கும் விஷயம் சர்வசாதாரணமானதல்ல. “இதை அறியாமல் இருப்பதாலும், அறிய வைக்க முடியாமல் இருப்பதாலும் வேதத்தின் மகத்தான சத்தியம் வெற்று வார்த்தைகளாகச் சென்றுவிடுகிறது” என்று ஆதங்கப்படும் ஆசிரியர், நாம் இனியும் அப்படி இருக்கத் தேவை இல்லை என்பதற்காகத்தான் இந்தச் சிறு புத்தகத்தை வெளியிடுகிறார்.

ஏன் அவர் சிலுவையில் அறையப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டாமல் வேறு வழியாக இரட்சிப்பைக் கொண்டு வந்திருக்க முடியாதா? அதுவுமில்லாமல், அவரது மரணம் எனக்கு எப்படிப் பொருந்தும்? அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கொலை, இன்று என் பிரச்சனைகளுக்குத் தீர்வாக முடியும்?. இது போன்ற கேள்விகள் உங்களுக்கு இருந்தால் இந்தப் புத்தகம் உங்களுக்குத்தான்.

அல்லது, உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஓர் உபதேசத்தை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ளவும், உங்களிடம் இந்த நூலின் தலைப்பையே கேள்வியாக வைப்பவருக்குப் பதிலளிக்கவும்கூட உதவி செய்யும். இந்தப் புத்தகக் கட்டுரைகள் கொண்ட நூலைச் சிறிது கவனமாகப் படித்தால் உங்களது ஆசிர்வாதமான ஆன்மிக வாழ்வின் துவக்கமாகவோ திருப்பமாகவோ அது இருக்கும்.

உள்ளடக்கம்:

  1. நம் உண்மை நிலை
  2. எது பாவம்?
  3. பாவத்தின் வலிமை
  4. பரிசுத்தம் எதற்காக?
  5. அன்பு, மன்னிப்பு, சட்டம்
  6. பலி, தண்டனை, இரத்தம்
  7. கிருபை
  8. உடன்படிக்கை, அன்பு
  9. அவர் எனக்காக ஏன் மரிக்க வேண்டும்?
  10. தேவ பெலன்

ஆசிரியர்: பென்னி அலெக்ஸாண்டர்
வெளியீடு: YAWAY Publications