உனக்கு நரகம் தான்!
ஆதாமை தன் சாயலாகப் படைத்த தேவன், தன் சாயலின் மேன்மையான சிந்திக்கும் திறனை வைத்தார். இந்த சிந்திக்கும் திறன்தான் எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளவும் புறம் தள்ளவும் உதவுகிறது. எதையும் யோசிக்காமல் அப்படியே யோசிக்காமல் ஏற்றுக்கொள்ளும் சமநிலை அற்ற தன்மை நம்மில் இல்லாததற்குக் காரணம் இந்த சிந்திக்கும் திறன் தான். அவர் சமநிலையான தேவன். எதையும் பின்யோசனையின்றி செய்பவரோ, செய்துவிட்டு அதன்பின் அதைக்குறித்து ஆராய்பவரோ அல்ல. மனிதனை அப்படி ஒரு பிறவியாகத்தான் வைத்தார். அவரது சாயல் என்பது…
முரட்டுப் பக்தர்கள்
ஆங்கிலத்தில் லீகலிஸம் (Legalism) என்கிற வார்த்தை உண்டு. கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமான வார்த்தை இது. இதன் அர்த்தம் “கடவுள் இதைத்தான் செய்யச் சொல்கிறார் என்று அவர் சொல்லாத ஒன்றைச் செய்யச் சொன்னதாக நினைத்துக்கொண்டிருப்பது”. தமிழில் இதைச் சட்டவாதம் என்று சொல்லலாம். “இதைச் செய்தால் சரி, இதைச் செய்யாவிட்டால் உன் அபிஷேகம் அம்பேல். இப்படிச் செய்தால் இரட்சிப்பு போச்சி!” என்று சொந்த விருப்பங்களை வேதம் காட்டும் ஒழுக்க நெறிகளாகத் திணிப்பதே இந்தச் சட்டவாதம். பெந்தேகோஸ்தே சபைகளில்தான் இதை அதிகமாக…
இந்த நம்பிக்கை!
கிறிஸ்து உயிர்தெழாவிட்டால் எங்கள் நம்பிக்கை வீண். நாங்கள் உரைக்கும் எந்தவார்த்தையும் வீண் என்கிறார் பவுல். அவர் உயிர்தெழுந்திருக்காவிட்டால், கிறிஸ்தவமும் வீண். கிறிஸ்தவர்களும் வீண். நாமெல்லாம் வெறும் முட்டாள்களாக இருந்திருப்போம். ஆனால், இது எப்படிப்பட்ட நம்பிக்கை? 2000த்துச் சொச்சம் வருடங்களாக, தலைமுறை தலைமுறைகளாக வரும் இந்த நம்பிக்கை வெறும் முரட்டுப் பக்தர்களால் பின்பற்றப்படும் குருட்டு நம்பிக்கை அல்ல. மாறாக, பெரும் சவால்களையும், எதிர்விவாதங்களையும் முறியடித்துத் தாங்கி வந்த நம்பிக்கை. கண்கள் திறக்கப்பட்டவர்களின் நம்பிக்கை. படிப்பறிவற்ற காட்டுமிராண்டிகளால் ஏற்கப்பட்ட நம்பிக்கைகள்…
அஸ்திபாரமும் ஐஸ்கட்டியும்
ஒரு டாக்குமெண்டரி பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஆர்டிக் பகுதியில் வசிக்கும் ஒரு எஸ்கிமோ குடும்பத்தைப் பற்றியது. ஆர்டிக், அண்டார்டிகா (-58°F), அலாஸ்கா என்றாலே நாம் குஷியாகிவிடுவதுண்டு அல்லவா?. அதற்கு அங்கிருக்கும் ஐஸ் மட்டுமல்ல, அவர்கள் வாழ்க்கை முறையும் கூட – அது மிகவும் வித்தியாசமானதும், ஆச்சரியங்களும் நிறைந்தது. ஆர்டிக் பகுதில் மேலே ஐஸ்கட்டியும், கீழே நீரோட்டமும் கொண்ட பகுதிகள் ஏராளம். இவ்வாறு நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்தாலும், கீழே சில அடிகளுக்குப் பின் இருப்பது ஆழமான உறையவைக்கும் நீர்ப்பகுதிதான். (சூரியன்…
பரலோகம் நுழையத் தகுதி
இரட்சிக்கப்பட்ட உடன் ஒருவர் பரலோகம் போய்விடுவதில்லை! ஏன்? அப்படிச் சென்றால் ஒரு மணி நேரம்கூட அவரால் அங்கு தாக்குப்பிடிக்கமுடியாது. கற்றுக்கொண்ட, கற்றவைகளில் நிச்சயித்த, நிலைத்த மற்றும் முற்றும்முடிய இரட்சிக்கப்பட்ட நிலைகளைக் கற்றுத்தேற இவ்வுலகே சரியான இடம். முன்பு சரியற்ற இடமாக இருந்த அதே இடம் இன்று ஒரு பயிற்சிக்களமாக மாற்றப்படுகிறது. இதை அறியாமல், எப்படியோ பரலோகம் சென்று இந்த வண்டி சேர்ந்துவிடும் என்று கனவுகண்டு கொண்டிருந்தால் வண்டி பஞ்சராகிப் பரிதவிக்கும் அபாயம் உண்டு. மாறாக இவ்வுலக வாழ்வின்…