கிறிஸ்தவ வாழ்வு

கிறிஸ்தவ வாழ்வு – கிறிஸ்துவின் வாழ்வு!

மத உணர்வுகளைப் புண்படுத்தாதீர்

மத உணர்வுகளைப் புண்படுத்தாதீர்

ஒரு கிறிஸ்தவனாக மத உணர்வு புண்படுத்தப்பட்டால், அதை எப்படி எதிர்கொள்வது? கிறிஸ்தவ மத உணர்வு என்பதுதான் என்ன?  இந்தக் கேள்விக்கு பதில் தெரியுமுன் மத உணர்வு என்பதை வேதம் எப்படிப் பார்க்கிறது என்பதை அறிந்துகொள்ளவேண்டும். பொதுவாக மத உணர்வு என்பது ஒரு மதத்தைப் பின்பற்றுவோரின் இறைநம்பிக்கை, பின்பற்றும் வழிமுறைகள், மதக் கோட்பாடுகள் மற்றும் கடவுளைப் பற்றிய எண்ணங்கள்.  இந்த எண்ணக்களைப் பரிகசிப்பதை, அல்லது தவறாகத் திரித்துப் பேசுவது அந்த மதத்தைப் பின்பற்றுவோரின் மனதைக் காயப்படுத்தினால் அதுவே மத…

தேவ பெலன்

தேவ பெலன்

‘ பாவியாகிய எனக்காக கிறிஸ்து சிலுவையில் மரித்தார்’ என்பதை விசுவாசித்து அவரை  ஏற்றுக்கொள்ளும் எவரும் இரட்சிப்பு என்கிற சுதந்தரமாகிய பலனை அடைகிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கையில் பெற்ற பலன் அத்துடன் நம் வாழ்வில் நின்றுவிடுவதில்லை. அது தொடர்ச்சியாக வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வை வாழ பெலனும் செய்கிறது. “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது” என்று கொரிந்தியருக்கு எழுதும் முதலாம் கடிதத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு முக்கியமான திறவுகோலை விட்டுச் சென்றிருக்கிறார். இதை, ‘இரட்சிக்கப்பட்ட…

வயசானா சரியாகிவிடும்?

வயசானா சரியாகிவிடும்?

வயதும் அனுபங்களும் மட்டும் ஒரு மனிதனை நல்லவனாக வாழ வைத்துவிடும் என்றால் அறுபது எழுபதைத் தாண்டினால் அனைவரும் நல்லவர்களாகவும், மிகவும் நல்லவர்களாகவும் மாறி இருக்கவேண்டும். ஆனால் உண்மை அப்படி இல்லை என்பது நாம் அறிந்த உண்மை. வேதம் நமக்குப் போதிப்பது நல்லவர்களாக வாழ்வதைக் குறித்த அல்ல. மாறாக இவ்வுலகில் இரட்சிப்பையும் நித்தியமாக தேவனுடன் வாழும் சிலாக்கியத்தை அருளும் தேவ கிருபையையும். அதை நாம் அனுபவங்கள் வாயிலாககப் பெறுவதில்லை. கிறிஸ்துவால் பெறுகிறோம்.  இந்தக் கிருபை நம்மை நல்லவர்களாக ஆக்க…

கிறிஸ்தவத்தில் சட்டவாதம்: எளிய விளக்கம்

கிறிஸ்தவத்தில் சட்டவாதம்: எளிய விளக்கம்

சமீபத்தில் ஒரு பிரசங்கம். அதில் பேசுபவர் ஒற்றைக்காலில் ‘முட்டிபோட்டு’ தான் ஜெபித்த விதத்தை விளக்கிக்கொண்டிருந்தார். மூட்டு இரண்டும் ‘காப்பு காய்த்து’ விடும்வரை ஜெபம் பண்ணுவாராம். அதாவது கடவுளை ‘இரங்க’ வைத்து இறங்கி வரச் செய்தல்.! இது ஒற்றைக்காலில் கிடுகிடு மலை உச்சியில் நின்று தவம் செய்வது போன்று; அதாவது அவரது கடினமான இந்த முயற்சிகளின் பலனாக, கடவுளின் மனதை இளக வைத்து, குளிரவைத்து – ஐஸ் வைத்து… அவர் விரும்பின காரியத்தை நடத்திவிடும்! தமிழ்க் கிறிஸ்தவத்தில் அதிகமாகப்…

கெட்ட நல்லவைகள்

கெட்ட நல்லவைகள்

  நமக்குள் இருக்கும் கெட்ட விஷயங்கள் பளிச்சென்று தெரிந்துவிடும். ஆனால், பல இடங்களில் நல்ல விஷயங்கள், நாம் அறியாத வகையில் நமக்கு இடைஞ்சலாக இருக்கும்! இதற்கு சுயபரிசோதனை அவசியம். ஏனென்றால், நல்ல பழக்கவழக்கங்கள் என்பவை இயல்பில் நல்லவைகளாக இருப்பதால், நம் இருதயம் அதில் மகிழந்து நின்றுவிடும். எனவே, ஒரு கட்டத்தில் நல்லபழக்க வழக்கங்களே நம்மை நல்லவர்களாக ஆக்கிவைத்திருப்பதாக நினைக்கத் துவங்குவோம். விளைவு, நம்மிடம் நம்மைபோல இல்லாதவர்களை, நல்லவர்கள் அல்ல என்றும் கருதம் அபாயம் உண்டு. கிறிஸ்தவர்களாக நாம்…

தத்துப்பிள்ளைகள்

தத்துப்பிள்ளைகள்

பொதுவாக குழந்தை இல்லாதோர் தங்கள் முயற்சிகள் பலனளிக்காமல், வெகுவாய் அயர்ச்சியடைந்த பின்பு தான் சுவிகாரமாகக் குழந்தைகளைத் தத்தெடுப்பார்கள். ஆனால் தேவனோ, தனக்கு ஒரு சொந்த – மூத்த பிள்ளையாகிய இயேசு இருந்தபோதே, பாவிகளாகிய நம்மையும் தன் மிகுந்த அன்பினால் புத்திரராக்க விருப்பம் கொண்டு, தன் குடும்பத்தில் இணைக்க விரும்பினார்.  அந்த அன்பு மிகப்பெரிது! அது எவ்வளவென்றால், தம் இளைய குமாரராகிய நம்மைத் தன் குடும்பத்தில் இணையத் தகுதிப்படுத்தத், தன் மூத்த குமாரனாகிய ஒரே பிள்ளையை பலியிட்ட அளவுக்கு!…

பதினோராம் மணிக் கிருபை!

பதினோராம் மணிக் கிருபை!

அதிகாலை வேலைக்கு வந்தவர்களுக்கு எஜமானன் கொஞ்சம் அதிகம் கொடுத்திருந்தால் என்ன? எல்லாருக்கும் ஒரேபணம் கூலி என்பது நியாயமாகப்படவில்லையே என்று விஷயம் புரியாத நாட்களில் நான் நினைத்து உண்டு. அந்தப் பகுதியை தியானித்திருப்பீர்கள் என்றால் (மத்தேயு 20) நீங்களும் அப்படி உணர்ந்திருக்கலாம். காரணம், நாம் எல்லாருமே நம்மை அதிகாலையில் இருந்து வேலை செய்பவர்களாகக் கருதிக்கொள்ளவதுதான். இங்குதான் இறைநீதியும் நம் மனதில் தோன்றும் நியாயங்களும் ஒன்றல்ல என்பதைக் கற்றுக்கொள்ள முடியும். பகலில் உஷ்ணம் இருக்கும், கஷ்டம் இருக்கும், வெயில் இருக்கும்…

உணர்ச்சிகளில் மாற்றம் 

உணர்ச்சிகளில் மாற்றம் 

கோபம், எரிச்சல், பயம், வருத்தம் போன்றவை எல்லாம் “அகிறிஸ்தவ” உணர்வுகள் என்று நினைத்தால் அது தவறு.  உண்மையில் மனிதன் விழுந்ததில் இந்த சுபாவங்கள் எல்லாம் இடப்பெயர்ச்சி அடைந்துவிட்டன. விளைவு கோபம் மூர்க்கமாக, பயம் திகிலாக, வருத்தம் என்பது  அவநம்பிக்கையாக – மனக்குழப்பமாக என்று சுபாவங்களின் சுபாவங்களே இருதயத்தில் அதனதன் இருப்பிடத்தைவிட்டு விலகிவிடுகின்றன. கோபம் கொண்டால் உடனே பாவம் செய்தல் அதன் விளைவுதான். அநீதியின்பால் கோபம் கொள்ளல், அநியாயத்தின்மேல் எரிச்சல் அடைதல், தேவனுக்குப் பயப்படுதல், பிறர் வருத்தம் கண்டு…

நாம் நல்லவர்களாக இருந்தால் போதுமா?

நாம் நல்லவர்களாக இருந்தால் போதுமா?

நல்லவனுக்கும், கிறிஸ்தவனுக்கும் ஒரு பெரும் வேறுபாடு  உண்டு.   நல்லவர்கள் முடிந்தவரை நல்லவர்களாக வாழ்ந்து, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் தொல்லை தராமல் வாழ நினைக்கிறவர்கள். அவர்களே கடவுளை நம்புகிறவர்களாக இருந்தால்,  நல்லவர்களாக இருந்து கடவுளது நேசத்தைப் பெற முயற்சிப்பார்கள். தாங்கள் நல்லவர்களாக இருப்பதும், மற்ற நல்லவர்கள் தங்களை அங்கீகரிக்கவேண்டும் என்பதிலும் மிக கவனமாக இருப்பவர்கள்இவர்கள். ஆனால், கிறிஸ்தவன் அப்படி இல்லை. அவனிடம் வெளிப்படும் நன்மை – அது அவனுக்குள் வசிக்கும் கிறிஸ்துவிடம் இருந்து வெளிப்படுவதாக நம்புபவன். தான் நல்லவனாக…

போதக ஐக்கியம்

போதக ஐக்கியம்

“பிறரிடம் இருந்தும் கற்றுக்கொள்ள மனமற்ற போதககர்கள் மிகவும் அபாயமான ஆசாமிகள்” என்று பல வருடங்கள் முன் எனக்குத் தெரிந்த ஒரு போதகர் ( பாஸ். மேத்யூஸ்) ஒரு முறை சொன்னார். அப்பொல்லோவைப் போல வேதாகமங்களில் வல்லவர்களாகவும், ஆவியில் அனலுள்ளவர்களாகவும், திட்டமாய் போதகம் பண்ணுபவர்களாக இருந்தாலும், நீங்களும், அதிக திட்டமாய் இறைவழியை விவரிக்கும் ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள் போன்ற மக்களை ஐக்கியத்தில் – உங்கள் வட்டத்தில் – வைத்திருப்பது அவசியம். உங்கள் உபதேசங்கள் ஆவியானவரால்தான் உறுதி செய்யப்படுகின்றன என்றாலும் ஐக்கியம்…