தியாகம்
இரண்டாம் உலகப் போரின் முடிவில் பல கதைகள் வெளிவந்துகொண்டே இருந்தன. சில அதிர்ச்சி இரகம். பலவும் மிகவும் அதிர்ச்சி இரகம். ஏராளமான வினோத நிகழ்வுகளை இரண்டாம் உலகப்போரின் பின்னர் பத்திரிக்கைகள் எழுதித்தள்ளின. அதில், ஒன்று விட்டோல்ட் பிலெக்கியின் (Witold Pilecki) தீரக் கதை. அமெரிக்காவின் தலைமையில் ஹிட்லரை எதிர்த்து நின்ற கூட்டுப் படைகள் ஆஷ்விட்ஸ் வதை முகாமுக்குள் நடப்பதை எப்படியாவது தெரிந்துகொள்ள விரும்பினர். இந்த ஆஷ்விட்ஸ் வதை முகாமுக்குள்தான் சுமார் 40 இலட்சம் யூதர்களாவது ஹிட்லரின் ஆட்களால்…
ஆபத்தான சுதந்திரம்!
தேவன் ஏன் எல்லா மனிதர்களையும் தங்கள் போக்குக்கு விடவேண்டும்? ஏன் ‘ஒரு ஆட்டு ஆட்டி’ அனைவரையும் தனக்கு இணக்கமாக்கிவிடக்கூடாது? இது பிசாசுகளே அடிக்கடி வியந்து ஆராய்ச்சி செய்யும் ஒரு விஷயம் போலத்தான் தெரிகிறது. “ஸ்க்ரூடேப் லெட்டர்ஸ்” (The Screwtape Letters) என்கிற ஒரு புத்தகம். சி.எஸ். லூயிஸ் 1942-ல் எழுதியது. நார்னியா கதைகளை எழுதிய இவரது இந்தப் புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தையும் விட விநோதமானது. காரணம் இதில் உள்ள இரண்டு ஆசாமிகள். இந்த இருவருமே மனிதரல்லர்…
சரணடைதல் எனும் வாசல்
என் வாழ்க்கையில் பல தருணங்களில் நான் அப்படியே தளர்ந்து போயிருக்கிறேன். அது வெறும் உடல் சோர்வு மட்டுமல்ல; அது ஒருவிதமான ஆத்தும இளைப்பு. ஓடிக்கொண்டே இருப்பதிலும், போராடுவதிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வையும் நமக்குப் புரியும்படி மாற்ற முயல்வதிலும் வந்த சோர்வு அது. நான் ஜெபிப்பேன், ஆனால் கவலைப்படுவதை நிறுத்தமாட்டேன். விசுவாசிப்பேன், ஆனால் விளைவுகளை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே துடிப்பேன். தேவனுடைய சமாதானம் எனக்கு வேண்டும் என்று கேட்பேன், ஆனால் என் திட்டங்களை மட்டும் விடவே மாட்டேன். அப்படிப்பட்ட ஒரு கையறு நிலையில், என் இதயத்தின் ஆழத்தில் ஒரு…
கோபம், எரிச்சல், பயம் வருத்தம் – இவைகள் பாவங்களா?
கோபம், எரிச்சல், பயம், வருத்தம் போன்றவை எல்லாம் ‘அகிறிஸ்தவ’ உணர்வுகள் என்று நினைத்தால் அது தவறு. உண்மையில் மனிதன் விழுந்ததில் இந்த சுபாவங்கள் எல்லாம் இடப்பெயர்ச்சி அடைந்துவிட்டன. விளைவு: கோபம் மூர்க்கமாக, பயம் திகிலாக, வருத்தம் என்பது அவநம்பிக்கையாக – மனக்குழப்பமாக என்று சுபாவங்களே தங்கள் தன்மைகளை மாற்றிக்கொண்டு இருதயத்தில் அதனதன் இருப்பிடத்தைவிட்டு விலகிவிடுகின்றன. “கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” (எபேசியர் 4:26). இந்த வசனம் சொல்வது போல, கோபம் கொண்டால் உடனே பாவம் செய்தல் என்பது அந்த…
ஜி.கே செஸ்டர்டன் – இன்றைய குழப்பங்களும், ஒரு பழைய தீர்க்கதரிசியும்
இன்றைய குழப்பங்களும், ஒரு பழைய தீர்க்கதரிசியும் 2026-ம் ஆண்டு, முன்னெப்போதும் இல்லாத அளவு தொழில்நுட்பமும், அதன் வழியாகக் கிடைத்திருக்கும் இணைப்புகளும் தொடர்புகளுமாகத் துவங்கியிருக்கிறது. எவரையும் தொடர்பு கொள்ளலாம், எதிலும் இணைந்துகொள்ளலாம், கற்கலாம், அறியலாம்…! இப்படி நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களும், நம்மைச் சுற்றியிருக்கும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த (AI) தொழில்நுட்பங்களும் வாழ்க்கையை எளிதாக்கியிருக்கலாம். ஆனால், மனித மனம் அமைதியாக இருக்கிறதா? என்றால், நிச்சயமாக முன்புபோல “இல்லை” என்பதே பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும்! சரியாக 120 ஆண்டுகளுக்கு முன்பு…
கோபங்கொண்ட தேவனுடைய கரத்தில் பாவிகள்
கிறிஸ்தவ வரலாற்றிலேயே மறக்கமுடியாத, அஸ்திபாரங்களை அசைத்த பல பிரசங்கங்களில் முதன்மையானது ஜோனாதன் எட்வர்ட்ஸ் (Jonathan Edwards) அவர்கள் 1741-ம் ஆண்டு பிரசங்கித்த “கோபங்கொண்ட கடவுளின் கரத்தில் பாவிகள்” (Sinners in the Hands of an Angry God) என்னும் இச்செய்தி. அமெரிக்காவில் “பெரிய விழிப்புணர்வு” (Great Awakening) நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், என்ஃபீல்ட் (Enfield) என்ற இடத்தில் இது பிரசங்கிக்கப்பட்டது. இச்செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்கள், தேவனுடைய உக்கிரகோபத்தையும், நரகத்தின் பயங்கரத்தையும் ஆவியானவரின் மூலமாக உணர்த்தப்பட்டபோது, தாங்கள் அந்த…
நீண்ட நெடிய கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கை
“ஒரே திசையில் நீண்ட கீழ்ப்படிதல்” (A Long Obedience in the Same Direction) எனும் சொற்றொடர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரபலமான ஜெர்மன் தத்துவஞானி ஃபிரெட்ரிக் நீட்சேவால் முன்வைக்கப்பட்ட ஒன்று. இதை வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான கீழ்படிதல் என்றும் சொல்லாம். அதைக்குறித்து முதன்முதலில் அவரது “நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்” (Beyond Good and Evil) எனும் நூலில் எழுதியிருந்தார். நீட்சே, சடங்கு மதங்களின் மீதும் பாரம்பரிய ஒழுக்கவியலின் மீதும் விமர்சனங்களை முன்வைத்தவர். ஒரு தனிமனிதன் தனது வாழ்விற்குத்…
எளிய ஜெபம்
ஒரு பொடியன் மூலையில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு “ABECDE…” என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் அம்மா வியப்புடன் அவனிடம் “தம்பீ… நீ என்ன செய்யுதே?” என்றார்கள். அதற்கு அவன் “நா ஜெவம் பண்ணுதேன்…” என்றான். “ஓ, ஆனா, நீ ABCD..ந்னுல்ல சொல்லிக்கிட்டு இருக்கிறமாதிரித் தெரியுது” “ஆமாம்மா…நீங்க ஜெவம் பண்ணச் சொன்னீங்க. எனக்கு நீங்க சொல்லித்தந்த ஜெபம் மறந்திருச்சி…அதுனால, ஆண்டவரே எனக்கு ஜெபிக்கதெரியாது… நா ABCD ஃபுல்லாச் சொல்றேன். அந்த எழுத்துக்களை வச்சி நீங்களே ஜெபம் பண்ணீக்கோங்க என்று…
டோபமைன்: வீணாக்கப்படும் இறைப்படைப்பு
எக்கச்சக்கமாக மொபைலில் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருப்பீர்களானால், டோபமைன் என்கிற வார்த்தை ஒருமுறையாவது உங்களைக் கடந்து சென்றிருக்கும். இது நம் உடலில் ஏற்படும் ஒரு அவசியமான சுரப்பு. நம் சரீரம் தேவன் வடிவமைத்த ஒரு அதிசயமான கருவி. அதில் ஹார்மோன்களின் பங்கு மிகவும் அதிகம். பிரச்சனைகள் வராதவரை இந்த ஹார்மோன்களைப் பற்றியும் நாம் அதிகம் யோசிப்பதில்லை. ஹார்மோன்கள் ஒருவகை வேதிப்பொருட்கள் – பழைய தமிழில் இரசாயனம். நம் உடலில் ஒவ்வொரு இரசாயனமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு…
பியூரிட்டன் போதகர்கள்
பரிசுத்தம், தூய்மை என்றால் கொஞ்சம் ஒரு பயம், ஏக்கம் என்று கலவையான உணர்வு முதலில் வருவது தவிர்க்கமுடியாதது. ஆனால், பரிசுத்தத்தை முன்னிறுத்தி வாழ்ந்த ஒரு கூட்டத்தார் உண்டு. அவர்களை பரிசுத்தத்தை முன்னிறுத்தி வாழ்ந்தார்கள் என்று சொவதைவிட பரிசுத்தரை முன்னிறுத்தி வாழ்ந்தவர்கள் என்று சொல்வதுதான் பொருத்தமானது. ஆங்கிலத்தில் இவர்கள் Puritans – ப்யூரிட்டன்கள். பியூரிட்டன்களைத் தூய்மையாளர்கள் என்றோ பரிசுத்தவாதிகள் என்றோ அழைக்கலாம் என்றாலும், அவர்களைக் குறித்த அறிமுகக் கட்டுரை என்பதால் பியூரிட்டன் (Puritans) என்றே இங்கே குறிப்பிட்டுவிடுகிறேன். பின்னர்,…