நீண்ட நெடிய கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கை
“ஒரே திசையில் நீண்ட கீழ்ப்படிதல்” (A Long Obedience in the Same Direction) எனும் சொற்றொடர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரபலமான ஜெர்மன் தத்துவஞானி ஃபிரெட்ரிக் நீட்சேவால் முன்வைக்கப்பட்ட ஒன்று. இதை வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான கீழ்படிதல் என்றும் சொல்லாம். அதைக்குறித்து முதன்முதலில் அவரது “நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்” (Beyond Good and Evil) எனும் நூலில் எழுதியிருந்தார். நீட்சே, சடங்கு மதங்களின் மீதும் பாரம்பரிய ஒழுக்கவியலின் மீதும் விமர்சனங்களை முன்வைத்தவர். ஒரு தனிமனிதன் தனது வாழ்விற்குத்…
எளிய ஜெபம்
ஒரு பொடியன் மூலையில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு “ABECDE…” என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் அம்மா வியப்புடன் அவனிடம் “தம்பீ… நீ என்ன செய்யுதே?” என்றார்கள். அதற்கு அவன் “நா ஜெவம் பண்ணுதேன்…” என்றான். “ஓ, ஆனா, நீ ABCD..ந்னுல்ல சொல்லிக்கிட்டு இருக்கிறமாதிரித் தெரியுது” “ஆமாம்மா…நீங்க ஜெவம் பண்ணச் சொன்னீங்க. எனக்கு நீங்க சொல்லித்தந்த ஜெபம் மறந்திருச்சி…அதுனால, ஆண்டவரே எனக்கு ஜெபிக்கதெரியாது… நா ABCD ஃபுல்லாச் சொல்றேன். அந்த எழுத்துக்களை வச்சி நீங்களே ஜெபம் பண்ணீக்கோங்க என்று…
இழப்பவன் முட்டாள் அல்ல!
ஜனவரி 8, 1956 அன்று ஜிம் எலியட் மற்றும் அவருடைய நண்பர்களான பீட்டர் பிளெமிங், எட் மெக்கல்லி, நேட் செயிண்ட், ரோஜர் யூடெரியன் ஆகிய ஐவரும் தாங்கள் நண்பர்களாக்கி விட்டோம் என்று நினைத்து நெருங்கிய பழங்குடிகளால் தாக்கிக் கொல்லப்பட்டார்கள். சிறுவயதில் சண்டேஸ்கூலோடு போய்விடும் வழக்கம் மிஷனரிமார்களின் கதைகளைக் கேட்பது. வயதாக வயதாக ஊர்க்கதைகளைக் கேட்டு வளரும் காதுகளுக்கு ‘பழங்கதைகள்’ என்று அவை அதிக ஈர்ப்பை அளிப்பதில்லை. ஆனால், தேவனுடைய ராஜ்யத்திற்காகத் தங்களையே அர்ப்பணித்து வாழ்ந்தவர்களின் வரலாற்றை அவ்வப்போது…
டோபமைன்: வீணாக்கப்படும் இறைப்படைப்பு
எக்கச்சக்கமாக மொபைலில் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருப்பீர்களானால், டோபமைன் என்கிற வார்த்தை ஒருமுறையாவது உங்களைக் கடந்து சென்றிருக்கும். இது நம் உடலில் ஏற்படும் ஒரு அவசியமான சுரப்பு. நம் சரீரம் தேவன் வடிவமைத்த ஒரு அதிசயமான கருவி. அதில் ஹார்மோன்களின் பங்கு மிகவும் அதிகம். பிரச்சனைகள் வராதவரை இந்த ஹார்மோன்களைப் பற்றியும் நாம் அதிகம் யோசிப்பதில்லை. ஹார்மோன்கள் ஒருவகை வேதிப்பொருட்கள் – பழைய தமிழில் இரசாயனம். நம் உடலில் ஒவ்வொரு இரசாயனமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு…
பியூரிட்டன் போதகர்கள்
பரிசுத்தம், தூய்மை என்றால் கொஞ்சம் ஒரு பயம், ஏக்கம் என்று கலவையான உணர்வு முதலில் வருவது தவிர்க்கமுடியாதது. ஆனால், பரிசுத்தத்தை முன்னிறுத்தி வாழ்ந்த ஒரு கூட்டத்தார் உண்டு. அவர்களை பரிசுத்தத்தை முன்னிறுத்தி வாழ்ந்தார்கள் என்று சொவதைவிட பரிசுத்தரை முன்னிறுத்தி வாழ்ந்தவர்கள் என்று சொல்வதுதான் பொருத்தமானது. ஆங்கிலத்தில் இவர்கள் Puritans – ப்யூரிட்டன்கள். பியூரிட்டன்களைத் தூய்மையாளர்கள் என்றோ பரிசுத்தவாதிகள் என்றோ அழைக்கலாம் என்றாலும், அவர்களைக் குறித்த அறிமுகக் கட்டுரை என்பதால் பியூரிட்டன் (Puritans) என்றே இங்கே குறிப்பிட்டுவிடுகிறேன். பின்னர்,…
உரிமையாளர்: இயேசுக்கிறிஸ்து
“நம் ஒவ்வொருவருடைய வாழ்வில் தேவன் தன்னுடையது என்று சொந்தம் பாராட்டக்கூடாத ஒரு சதுர அங்குலம் கூட இல்லை” என்றார் ஆபிரகாம் குய்பர். இவர் ஹாலந்து நாட்டின் முன்னாள் பிரதமர், நல்ல இறையிலளாரும் கூட. இறையியல் அறிந்த போதகர்கள் எல்லாம் நாட்டின் பிரதமராக இருந்தார் என்பது ஆச்சரியமான ஒன்றுதான். ஆனால், பதிவு ஐயா குய்பரைப் பற்றியதல்ல. (நான் மொழிபெயர்ப்புக்காக சற்றே மாற்றி இருக்கிறேன்). அவர் சொன்னதன் பொருள், உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதிக்கும் தேவனே உரிமையாளர். அவரால் தமக்குச்…
தாமஸ் ஜெஃபர்ஸன் (படித்துக்) கிழித்த பைபிள்
“ஆமா, அப்படியே படிச்சுக் கிழிச்சிட்டாரு… எங்க…இந்தக் கேள்விக்கு பதில் சொல்பார்ப்போம்” என்று ஆசிரியர்கள், பெற்றோர் சொல்வது வழக்கம். ஆனால், உண்மையிலேயே, அப்படிப் படித்துக் கிழித்தவர் ஒருவர் வரலாற்றில் இருந்தார். அதுவும் பைபிளை!. அவர் பெயர் தாமஸ் ஜெஃபர்ஸன். அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்; நன்றாகப் படித்தவர் என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். கிறிஸ்துவை விசுவாசிக்காமல் கிறிஸ்தவராக வாழ முயற்சிப்பவர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், அந்நாட்டின் சுதந்திரப் பிரகடனத்தை…
புதிய துவக்கங்கள்
தோல்வி மற்றும் தோல்வியில் ஏற்பட்ட மனச்சோர்வில், தங்கள் வாழ்க்கை இனி முடிந்துவிட்டது என்று நினைப்பவர்கள் ஏராளம். இனி வாழ்க்கையை அழகாக மாற்றுவதற்கு வாய்ப்பில்லை. இப்போதே என் வாழ்வில் எல்லாம் தாமதமாகிவிட்டது என்று நினைப்பதால் இனி புதிய வாய்ப்புகளைக் குறித்து சிந்திப்பதே கடினமாக ஆகிவிடுகிறது. சில விஷயங்கள் விரும்பத்தாக சூழலில் சென்று விட்டதால், இனி சரியான நிலைக்கு நான் வருவதே இயலாது என்ற நினைவுகளின் அழுத்தம் அதிகமாகி விடுகிறது. அது தலைக்கு மிஞ்சிய சூழலாகவே ஆகிவிடுகிறது. ஆனால் நாம்…
பயன்படுவதே பாக்கியம்
“சார் தந்தி!” என்று வாசலில் குரல்கேட்டால் வீட்டுக்குள் அனைவருக்கும் பெரும்பதற்றம் தொற்றும். எழுபது எண்பதுகளின் இறுதிவரை அதிவேகத் தகவல்களுக்குத் தந்திதான் எளிய வழி. உங்களில் எத்தனை பேருக்கு இதில் அனுபவம் உண்டு என்று தெரியாது. பத்து வரி அனுப்ப 30-40 ரூபாய் ஆகும் என்பதால், மிகக் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தித்தான் தகவல்களை அனுப்பிக்கொண்டிருந்தோம். டெலிஃபோன் பயன்பாடு அதிகரிக்கும் வரை தந்திதான் சாமனியருக்குக் கிடைத்த வழி. பொல்லது மட்டுமல்லாமல், நல்லதும் தந்திவழியாகத் தான் சென்றது. “YOU ARE APPOINTED….
துப்பாக்கிச் சண்டையில் கத்தி
துப்பாக்கிச் சண்டைக்குக் கத்தியோடே போகாதே என்ற அர்த்தத்தில் (Don’t go to gun fight with a knife) ஆங்கிலச் சொலவடை ஒன்று உண்டு. எதிராளி துப்பாக்கியுடன் வரும்போது அவனைச் சமாளிக்க கத்தியோடு சென்று புல்லட் துளைத்த யாரோ ஒருவன் கதையில் கிடைத்த நீதியாகத்தான் இது இருக்கவேண்டும். இதன் அர்த்தம் என்னவெனில் சண்டைக்கேற்ற ஆயுதம் அவசியம். அதுவும் நம் ஆயுதத்தைத் தீர்மானிப்பவன் கூட எதிராளிதான் என்று சொல்வார்கள். இந்தக் கட்டுரை அப்படிப்பட்ட சண்டை பற்றியது. ஆனால் துப்பாக்கிச்…