கிறிஸ்தவ வாழ்வு

துப்பாக்கிச் சண்டையில் கத்தி

துப்பாக்கிச் சண்டையில் கத்தி

துப்பாக்கிச் சண்டைக்குக் கத்தியோடே போகாதே என்ற அர்த்தத்தில் (Don’t go to gun fight with a knife) ஆங்கிலச் சொலவடை ஒன்று உண்டு. எதிராளி துப்பாக்கியுடன் வரும்போது அவனைச் சமாளிக்க கத்தியோடு சென்று புல்லட் துளைத்த யாரோ ஒருவன் கதையில் கிடைத்த நீதியாகத்தான் இது இருக்கவேண்டும். இதன் அர்த்தம் என்னவெனில் சண்டைக்கேற்ற ஆயுதம் அவசியம். அதுவும் நம் ஆயுதத்தைத் தீர்மானிப்பவன் கூட எதிராளிதான் என்று சொல்வார்கள். இந்தக் கட்டுரை அப்படிப்பட்ட சண்டை பற்றியது. ஆனால் துப்பாக்கிச்…

நீங்கள் வீணடித்த வாழ்க்கை

நீங்கள் வீணடித்த வாழ்க்கை

குறிப்பு: பதிவு ஒரு எழுத்தாளரைப் பற்றியது அல்ல. மால்கம் மஃகரிட்ஜ் ஒரு ஆங்கில எழுத்தாளர். கொஞ்சம் நம்ம ஊர் ஆர்.கே.நாராயணன் மாதிரி. மால்கம் ஜாலியாக ஆனால்  அதேசமயம் ஆழமாக எழுதுபவர். ஏகப்பட்ட அனுபவங்கள் அவருக்கு.  ஆங்கிலேயர். ஆனால், இரஷ்யாவில் கம்யூனிசத்தின் தொடக்க காலங்களில் பிரச்சனைகள் மிகுந்த பகுதிகளில் இருந்திருக்கிறார். உக்ரேனியப் பஞ்சத்தைக் குறித்து ஆராய்ந்து ஆவணப்படுத்தியிருக்கிறார். இந்தியாவிலும் சில காலம் வாழ்ந்தார். மதர் தெரசாவை சந்தித்திருக்கிறார். அவருடனும் நல்ல நட்பு இருந்தது. மஃகரிட்ஜ் சந்தித்த எக்கச்சக்கமான நபர்கள்,…

டீட்ரிச் போன்ஹோஃபர் – சீஷத்துவத்தின் விலை

டீட்ரிச் போன்ஹோஃபர் – சீஷத்துவத்தின் விலை

சென்ற நூற்றாண்டின் முதல் 50 வருடங்கள் பல நாடுகளில் மரணக்களங்களாகத்தான் இருந்தன. குறிப்பாக உலகப் போர்களின் விளைவாக ஐரோப்பா சந்தித்த இழப்புகள் பல இலட்சம். ஆனாலும், அக்காலங்களில்  கோழைத்தனமான கொடூரங்களை அரங்கேற்றிய பலர் நடுவில் அவர்களை மிகத்தைரியமாக எதிர்கொண்ட வீரர்களும் தோன்றினர். அவர்களில் ஒருவர் டீட்ரிச் போன்ஹோஃபர் (Dietrich Bonhoeffer)  . இவர் ஒரு ஜெர்மானியர், கிறிஸ்தவர்.  தமிழ்க் கிறிஸ்தவர்கள் அதிகம் அறிந்திராதவர் போன்ஹோஃபர்.  வரலாற்றின் கருமையான பக்கங்களில் கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக ஒளிவீசும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் இவர்…

இரும்பை இரும்பு

இரும்பை இரும்பு

கூராக, அபாயகரமாக எதாவது இரும்பு முனைகள் (அல்லது பிளாஸ்டிக், மரம்) நீட்டிக்கொண்டு இருக்கும்.  கவனியாமல் விட்டால், இப்போது இல்லாவிட்டால் ஒரு நேரம் ‘சரக்’கென்று அது ‘இரத்தம் கேட்பது’ உறுதி. எனவே, ஒரு நல்ல அரம் இருப்பின் அதைக் கொண்டு உடனடியாக அந்தப் பகுதியைத் தேய்த்து முனை மழுங்கப்பண்ணிவிடுவது நல்லது.  ஆங்கிலத்தில் Iron file அல்லது Rasp என்னும் நல்ல அரம் ஒன்று எப்போதும் என்னிடம் இருக்கிறது. முன்பைப்போல கத்தி தீட்டுபவர்களை அதிகம் தெருக்களில் காணமுடிவதில்லை. எனவே, அதை…

ஒரு நேரத்தில் ஒரு அடி

ஒரு நேரத்தில் ஒரு அடி

இரவுகள் இருளாக இருந்த காலங்கள் அது. இன்று போல லைட் ஃபொல்யூஷன் இல்லாத காலங்கள். இன்று நகரங்களில் மட்டுமல்ல, குறுநகரங்களில் கூட ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சி இருளை மறைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு – அன்று ஒரு இரவில் ஆபிரகாமால் தேவன் வானத்தைப் பார்க்கச்சொன்ன போது சுமார் 20000 நட்சத்திரங்களைப் பார்த்து, எண்ணி இருக்க முடியுமாம். இன்று பல நாட்களில் நம்மால் அது இயலாது. நட்சத்திரங்களைக் கோள்களைப் படமெடுக்க விண்வெளிப் புகைப்பட ஆர்வலர்கள் இருளைத்தேடி அலைகிறார்கள்….

மீதமான அப்பங்கள்

மீதமான அப்பங்கள்

பன்னிரெண்டு கூடை நிறைய மீதமானவற்றை எடுத்தார்கள். ஏன்? ஆண்டவரால் இத்தனை பேர்  X இத்தனை அப்பம் = இத்தனை ஆயிரம் அப்பம் என்று துல்லியமாகக் கணக்குப் போட்டிருக்க முடியாதா? அவர்தான் சர்வ ஞானம் பொருந்தியவராயிற்றே? துணிக்கைகள் முழு சைஸ் அப்பங்கள் இல்லை. கையாளும்போது உடைந்த, பிய்ந்துவிட்ட துணிக்கைகளாக இருந்திருக்கலாம்.  நம் அருள்நாதர் தன் பிள்ளைகளுக்கு முழுமையானதை மட்டும் கொடுக்கவும், உடைந்துபோனவற்றை கொடுக்கவேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். கல்யாணவீட்டில் உடைந்த அப்பளங்களையெல்லாம் கடைசியில் பார்த்திருப்போமே அதேபோல்! ஆனால் அவையும்…

நீங்களும் இறையியலாளரே!

நீங்களும் இறையியலாளரே!

(குறிப்பு: இந்தக் கட்டுரை இறையியல் கல்லூரி செல்வது அவசியமா இல்லையா என்பதைப் பற்றியதல்ல) இறையியல் (Theology) என்றால் நமக்கு உடனடியாக மனதில் வருவது மதுரை அரசரடி, சென்னை குருகுல் மற்றும் பெங்களூரின் பிரபல இறையியல் கல்லூரிகளாக இருக்கக்கூடும். அதேபோல் இறையியலாளர் (Theologian) என்கிற வார்த்தையைக் கேட்டால் நினைவுக்கு வருவது இறைக்கல்வி பெற்ற பாஸ்டர்கள், குருமார்கள் தான். இது சரியே என்றாலும், இறைக்கல்வியை கல்லூரியில் சென்றுதான் படித்தாகவேண்டும் என்றும், அப்படிப் படித்தவர்கள்தான் இறையியலாளர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிருப்பது சரியல்ல. நாம்…

சார்லஸ் (சக்) கோல்சன்: அரசியல் அதிகாரத்திலிருந்து சிறைச்சாலை ஊழியத்திற்கு

சார்லஸ் (சக்) கோல்சன்: அரசியல் அதிகாரத்திலிருந்து சிறைச்சாலை ஊழியத்திற்கு

சார்ல்ஸ் “சக்” (Chuck) கோல்சன் – தமிழ் கிறிஸ்தவர்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  ஆனால், சென்ற நூற்றாண்டு கிறிஸ்தவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க நபர். நாம் அறிந்துகொள்ளவேண்டியவர். அவரது வாழ்க்கை மீட்பின் சாட்சியாகவும், நம்பிக்கையின் செய்தியாகவும் அமைந்த ஒன்று. சுவாரசியமான அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகமே இக்கட்டுரை. சென்ற நூற்றாண்டின் நடுவில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில்  ஒரு சக்திவாய்ந்த அரசியல் செயல்பாட்டாளராக இருந்தவர் சார்ல்ஸ் கோல்சன். பிற்காலங்களில் இரட்சிப்புக்குள்ளாக வந்தபின், சிறைக்கைதிகளுக்காகவும் அவர்கள் சார்ந்த விளிம்பு நிலை…

விதவித..வினோத.. விபரீத.. வேதப் புறக்கணிப்புகள்

விதவித..வினோத.. விபரீத.. வேதப் புறக்கணிப்புகள்

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19:7 .  ஆனால், காலந்தோறும் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருந்துகொண்டே இருக்கின்றன விதவிதமான வகைவகையாய் வேதப் புறக்கணிப்புகள் இவை. “வேதமே வெளிச்சம்”! ஆனால் அறிந்தோ அறியாமலோ அந்த வெளிச்சத்தை விரும்பாதவர்கள், அல்லது வெளிச்சத்தை மறைப்பவர்கள் எல்லோரும் இருளை விரும்புபவர்கள்தான். இங்கு எழுதப்பட்டிருப்பவை எல்லாம் சில உதாரணங்களே. 1. பழைய ஏற்பாட்டைப் புறக்கணிப்பது, அதில் தீர்க்கதரிசனப் புத்தகங்களைப் புறக்கணிப்பது. சிறு தீர்க்கர்களின் புத்தகங்கள் எதையும்…

தாங்கமாட்டீர்கள் பாகம் 4 – சத்தியம்

தாங்கமாட்டீர்கள் பாகம் 4 – சத்தியம்

[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3] …[பாகம் 5] ஆண்டவர் பூமியில் இருந்தகாலங்களில் கிருபையைப் போதிக்கவில்லை என்று சென்ற பாகத்தில் பார்த்தோம். தேபோல் ஆச்சரியமானவிதமாக அவர் விளக்கிச் சொல்லாத மற்றொரு விஷயம் கிறிஸ்தவத்தின் அடிநாதமான ‘சத்தியம்’! அதை அவர் ஒரு உபதேசமாகச் சொல்லி விளக்கவில்லை. அதற்குக் காரணம் சீடர்கள் தாங்கமாட்டார்கள் என்ற காரணமாகத்தான் இருக்கமுடியும்.  ஆனாலும், அவரது குரலை வீதிகளில் கேட்டவர்கள் அவர் போதிப்பது சத்தியம் என்று சில பரிசேயர்கள் அனுப்பிய சில ஏரோதியரான வேவுக்கார்…