வரலாறு

ஜி.கே செஸ்டர்டன் – இன்றைய குழப்பங்களும், ஒரு பழைய தீர்க்கதரிசியும்

ஜி.கே செஸ்டர்டன் – இன்றைய குழப்பங்களும், ஒரு பழைய தீர்க்கதரிசியும்

இன்றைய குழப்பங்களும், ஒரு பழைய தீர்க்கதரிசியும் 2026-ம் ஆண்டு, முன்னெப்போதும் இல்லாத அளவு தொழில்நுட்பமும், அதன் வழியாகக் கிடைத்திருக்கும் இணைப்புகளும் தொடர்புகளுமாகத் துவங்கியிருக்கிறது. எவரையும் தொடர்பு கொள்ளலாம், எதிலும் இணைந்துகொள்ளலாம், கற்கலாம், அறியலாம்…! இப்படி நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களும், நம்மைச் சுற்றியிருக்கும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த (AI) தொழில்நுட்பங்களும் வாழ்க்கையை எளிதாக்கியிருக்கலாம். ஆனால், மனித மனம் அமைதியாக இருக்கிறதா? என்றால், நிச்சயமாக முன்புபோல “இல்லை” என்பதே பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும்! சரியாக 120 ஆண்டுகளுக்கு முன்பு…

வேதத்துக்கு வெளியே இருந்துவரும் ஆதாரம் –  ஜோசிபஸ்

வேதத்துக்கு வெளியே இருந்துவரும் ஆதாரம் – ஜோசிபஸ்

இந்த பூமியில் இயேசுக்கிறிஸ்துவின் வாழ்க்கை நான்கு சுவிசேஷங்களில் நமக்குத் தெரிய வேண்டிய அளவுக்கு தெளிவாகவே எழுதப்பட்டுள்ளது. அதுவும் நான் வெவ்வேறு நபர்களால் நான்கு சுவிசேஷங்களாக –  மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்று! . ஆனால், வேதாகமத்தில் இடம்பெறாத ஒரு மனிதர், இயேசு வாழ்ந்த காலத்தையும், அப்போஸ்தலர் காலத்தையும் பற்றி எழுதியிருக்கிறார். அவரைக் குறித்துக் கொஞ்சம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அவர் ஃபிளேவியஸ் ஜோசிபஸ் (Flavius Josephus). பெரும்பாலான தமிழ்க் கிறிஸ்தவர்கள் இவரைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. பொதுவாகவே…

ஏரோது: ஒரு கொலைகார வம்சத்தின் வரலாறு

ஏரோது: ஒரு கொலைகார வம்சத்தின் வரலாறு

புதிய ஏற்பாட்டில் “ஏரோது” என்ற பெயர் ஏறக்குறைய ஐம்பது முறை வருகிறது. ஆனால், நினைவில் கொள்ளுங்கள்: இது ஒரே நபரைக் குறிப்பதல்ல! ரோமானியப் பேரரசின் தயவால் யூதேயாவை ஆண்ட ஒரு வம்சத்தின் பெயரே ‘ஏரோது’. புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஏரோதுகள் அனைவருமே கி.மு. 40 வாக்கில் ரோமானியப் பேரரசால் யூதேயா மீது அமைக்கப்பட்ட ஆட்சியாளர்களின் வம்சத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். இவர்கள் யார்? ஆதிப் பிதாவாகிய யாக்கோபின் வழித்தோன்றல்கள் அல்ல; அவருடைய சகோதரன் ஏசாவின் வம்சத்தார் (ஏதோமியர்கள்)….

தாமஸ் ஜெஃபர்ஸன் (படித்துக்) கிழித்த பைபிள்

தாமஸ் ஜெஃபர்ஸன் (படித்துக்) கிழித்த பைபிள்

“ஆமா, அப்படியே படிச்சுக் கிழிச்சிட்டாரு… எங்க…இந்தக் கேள்விக்கு பதில் சொல்பார்ப்போம்” என்று ஆசிரியர்கள், பெற்றோர் சொல்வது வழக்கம். ஆனால், உண்மையிலேயே, அப்படிப் படித்துக் கிழித்தவர் ஒருவர் வரலாற்றில் இருந்தார். அதுவும் பைபிளை!. அவர் பெயர் தாமஸ் ஜெஃபர்ஸன். அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்; நன்றாகப் படித்தவர் என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். கிறிஸ்துவை விசுவாசிக்காமல் கிறிஸ்தவராக வாழ முயற்சிப்பவர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், அந்நாட்டின் சுதந்திரப் பிரகடனத்தை…

பயன்படுவதே பாக்கியம்

பயன்படுவதே பாக்கியம்

“சார் தந்தி!” என்று வாசலில் குரல்கேட்டால் வீட்டுக்குள் அனைவருக்கும் பெரும்பதற்றம் தொற்றும். எழுபது எண்பதுகளின் இறுதிவரை அதிவேகத் தகவல்களுக்குத் தந்திதான் எளிய வழி. உங்களில் எத்தனை பேருக்கு இதில் அனுபவம் உண்டு என்று தெரியாது. பத்து வரி அனுப்ப 30-40 ரூபாய் ஆகும் என்பதால், மிகக் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தித்தான் தகவல்களை அனுப்பிக்கொண்டிருந்தோம். டெலிஃபோன் பயன்பாடு அதிகரிக்கும் வரை தந்திதான் சாமனியருக்குக் கிடைத்த வழி. பொல்லது மட்டுமல்லாமல், நல்லதும் தந்திவழியாகத் தான் சென்றது. “YOU ARE APPOINTED….

சி. எஸ். லூயிஸ் 

சி. எஸ். லூயிஸ் 

சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த கிறிஸ்தவ எழுத்தாளர்  CS Lewis என்று சொன்னால் பலர் மறுக்கப்போவதில்லை. அவரை வாசிப்பது கடினம் என்பது முதல் புத்தகத்தை வாசிக்கும்போது தோன்றியது. அதற்குக் காரணம் அவர் அல்ல. அவரது சில முக்கியமான புத்தகங்கள் அவரது உரைகளில் இருந்து எழுத்துக்களாகத் தொகுக்கப்பட்டவை. அக்கால பிரிட்டிஷ் அறிஞர்களின் ஆங்கிலம் என்பதால் அதை அப்படியே எழுதிவிட்டார்கள். அவரது கருத்துக்களில் கைவைத்துவிடக்கூடாது என்பதற்காகவே புத்தகங்களை எளிமைப்படுத்தும் முயற்சியை எவரும் செய்யவில்லை.  நாத்திகத்தில் இருந்து ஆத்திகனாக மாறிய கிளைவ்…

டீட்ரிச் போன்ஹோஃபர் – சீஷத்துவத்தின் விலை

டீட்ரிச் போன்ஹோஃபர் – சீஷத்துவத்தின் விலை

சென்ற நூற்றாண்டின் முதல் 50 வருடங்கள் பல நாடுகளில் மரணக்களங்களாகத்தான் இருந்தன. குறிப்பாக உலகப் போர்களின் விளைவாக ஐரோப்பா சந்தித்த இழப்புகள் பல இலட்சம். ஆனாலும், அக்காலங்களில்  கோழைத்தனமான கொடூரங்களை அரங்கேற்றிய பலர் நடுவில் அவர்களை மிகத்தைரியமாக எதிர்கொண்ட வீரர்களும் தோன்றினர். அவர்களில் ஒருவர் டீட்ரிச் போன்ஹோஃபர் (Dietrich Bonhoeffer)  . இவர் ஒரு ஜெர்மானியர், கிறிஸ்தவர்.  தமிழ்க் கிறிஸ்தவர்கள் அதிகம் அறிந்திராதவர் போன்ஹோஃபர்.  வரலாற்றின் கருமையான பக்கங்களில் கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக ஒளிவீசும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் இவர்…

டான் ரிச்சர்ட்ஸன் – அறியப்படாத மக்களிடையே அறியப்படாத தேவன்

டான் ரிச்சர்ட்ஸன் – அறியப்படாத மக்களிடையே அறியப்படாத தேவன்

முன்குறிப்பு: இதுவரை ஒருமுறைகூடக் கேள்விப்பட்டிராத ஜனங்களுக்கான நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது எனக்கு வந்த ஒரு சந்தேகம். அது, மேலும் அறிய சில வருடங்கள் முன்னர் ஒரு தேடலைத் துவக்கியது. உதாரணமாக, எவரும் நுழைய இயலாத அமேஸான் காடுகளுக்குள் வசிக்கும் மக்கள் இயேசு என்கிற பெயரைகூடக் கேள்விப்படாதிருந்தால் அவர்கள் நித்திய வாழ்வு அதோகதிதானா என்கிற கேள்வி!. எனவே, சிலவருடங்களுக்கு முன்னர் அதை அறிந்து ஒரு கட்டுரையாக எழுதவும் செய்தேன். (ஆனால், அதை இங்கு பதிவிடவில்லை). ஆனால், அப்போதைய…

சிங்கம் தன் வரலாறு கூறுதல்

சிங்கம் தன் வரலாறு கூறுதல்

‘சிங்கங்கள் புத்தகம் எழுதாத வரை, வேட்டைக்காரன் தன்னைக் குறித்துதான் பெருமையாக எழுதிக் கொண்டிருப்பான்’ என்று ஒரு ஆப்பிரிக்க பழமொழி உண்டு. எழுத்தாளர்கள் அனைவருக்குமே உள்ளதை உள்ளபடி எழுதுவது என்பது இயலாது. ஸ்டைல் என்கிற பேரிலாவது தங்களை எழுதுவதில் கலந்துகொண்டிருப்பார்கள். வரலாறும் அப்படித்தான்.  அக்கால மன்னர்களைத் தாண்டி வரலாற்று ஆசிரியர்கள் உண்மையை  மட்டும் எழுதியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். இதை வரலாறு படிப்பவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். யுவான் சுவாங், பாஹியான் போன்றவர்கள் எல்லாம் அந்த வகையறாக்கள். அவர்கள் எழுதியவை எல்லாம் சரியாகத்தான்…