
நீங்கள் வீணடித்த வாழ்க்கை
குறிப்பு: பதிவு ஒரு எழுத்தாளரைப் பற்றியது அல்ல. மால்கம் மஃகரிட்ஜ் ஒரு ஆங்கில எழுத்தாளர். கொஞ்சம் நம்ம ஊர் ஆர்.கே.நாராயணன் மாதிரி. மால்கம் ஜாலியாக ஆனால் அதேசமயம் ஆழமாக எழுதுபவர். ஏகப்பட்ட அனுபவங்கள் அவருக்கு. ஆங்கிலேயர். ஆனால், இரஷ்யாவில் கம்யூனிசத்தின் தொடக்க காலங்களில் பிரச்சனைகள் மிகுந்த பகுதிகளில் இருந்திருக்கிறார். உக்ரேனியப் பஞ்சத்தைக் குறித்து ஆராய்ந்து ஆவணப்படுத்தியிருக்கிறார். இந்தியாவிலும் சில காலம் வாழ்ந்தார். மதர் தெரசாவை சந்தித்திருக்கிறார். அவருடனும் நல்ல நட்பு இருந்தது. மஃகரிட்ஜ் சந்தித்த எக்கச்சக்கமான நபர்கள்,…

மீதமான அப்பங்கள்
பன்னிரெண்டு கூடை நிறைய மீதமானவற்றை எடுத்தார்கள். ஏன்? ஆண்டவரால் இத்தனை பேர் X இத்தனை அப்பம் = இத்தனை ஆயிரம் அப்பம் என்று துல்லியமாகக் கணக்குப் போட்டிருக்க முடியாதா? அவர்தான் சர்வ ஞானம் பொருந்தியவராயிற்றே? துணிக்கைகள் முழு சைஸ் அப்பங்கள் இல்லை. கையாளும்போது உடைந்த, பிய்ந்துவிட்ட துணிக்கைகளாக இருந்திருக்கலாம். நம் அருள்நாதர் தன் பிள்ளைகளுக்கு முழுமையானதை மட்டும் கொடுக்கவும், உடைந்துபோனவற்றை கொடுக்கவேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். கல்யாணவீட்டில் உடைந்த அப்பளங்களையெல்லாம் கடைசியில் பார்த்திருப்போமே அதேபோல்! ஆனால் அவையும்…

தாங்கமாட்டீர்கள் பாகம் 4 – சத்தியம்
[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3] …[பாகம் 5] ஆண்டவர் பூமியில் இருந்தகாலங்களில் கிருபையைப் போதிக்கவில்லை என்று சென்ற பாகத்தில் பார்த்தோம். தேபோல் ஆச்சரியமானவிதமாக அவர் விளக்கிச் சொல்லாத மற்றொரு விஷயம் கிறிஸ்தவத்தின் அடிநாதமான ‘சத்தியம்’! அதை அவர் ஒரு உபதேசமாகச் சொல்லி விளக்கவில்லை. அதற்குக் காரணம் சீடர்கள் தாங்கமாட்டார்கள் என்ற காரணமாகத்தான் இருக்கமுடியும். ஆனாலும், அவரது குரலை வீதிகளில் கேட்டவர்கள் அவர் போதிப்பது சத்தியம் என்று சில பரிசேயர்கள் அனுப்பிய சில ஏரோதியரான வேவுக்கார்…

நாம் ஏன் சிலுவை சுமக்க வேண்டும்?
சிலுவை என்றால் ‘டக்’கென்று நம் மனதில் வருவது இயேசு சுமந்தது சென்ற சிலுவை மரம். சர்ச்களின் மேல், ஆல்டர்களில் இருப்பது, கழுத்துகளில் தொங்கி அலங்கரிப்பது இப்படி. பொதுவாக துயரத்தின் சின்னம். கிறிஸ்தவர்களுக்கு கல்வாரியை அடுத்த நொடி கண்முன் நிறுத்தும். அவர் சுமந்த தடுமாறிச் சென்றது ‘இயேசு’ வாழ்க்கைப் படங்களில் பார்த்தவர்களுக்கு இன்னும் சித்திரமாக மனதில் தோன்றும். இயேசு சிலுவை சுமந்தார், ஆனால், அவர் அப்படிச் சுமக்கும் முன்பே இருவேறு இடங்களில் தம் சீஷர்களையும் ‘அவர்களது’ சிலுவையைச் சுமக்கச்…

தாங்கமாட்டீர்கள் – பாகம் 3
(பாகம் 1) (பாகம் 2) நான்கு சுவிசேஷ நூல்களிலும் நுழைந்து நன்றாக கவனித்தீர்கள் என்றால் இயேசுக்கிறிஸ்து பூமியில் இருந்த காலங்களில் அவர் போதிக்காத வார்த்தை ஒன்று “கிருபை”. இது ஆச்சரியமான விஷயம் தான். அவர் வாயில் இருந்து கிருபை என்கிற வார்த்தை வெளிப்படவில்லை. ஆனால், அதற்குக்காரணம் சாதாரணமானதே. கிருபை என்கிற – யூதர்கள் நன்றாக அறிந்திருந்த வார்த்தையை அவர் போதிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவு வாழ்ந்துகாட்டினார். தன் ஒவ்வொரு செயல்களிலும் கிருபையை வெளிப்படுத்தினார். வருடக்கணக்கில் நோயுற்றுக்கிடந்தவர்களை…

கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்…!
இயேசு நினைத்தால் “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்று ஒற்றை வாக்கியத்திலோ, “எல்லோர பாவங்களையும் நான் மன்னித்துவிட்டேன் வாங்க என்னோடு பரலோகத்துக்கு” என்றோ சொல்லி நம் எல்லோரையுமே மன்னித்திருக்கலாமே? அதை அவர் இறைவனாக இருந்துகொண்டே செய்திருக்கலாமே? இதற்காக இந்த பூமியில் அவதரித்ததெல்லாம் அவசியமா? இப்படியெல்லாம் சிந்தித்தது உண்டா? இல்லையென்றால் இப்போது சிந்தித்துவிடலாம். அப்படிச் செய்ய அவருக்கு வல்லமை உண்டு தான். ஆனாலும், அப்படிச் செய்யாமல், இன்னும் சிறப்பான, நியாமான முறையில் செய்வதுதான் அவருக்கு அது அவசியமாகத் தோன்றியது! காரணம்…