ஆங்கிலத்தில் The Message என்கிற பைபிள் ஒன்று உண்டு. இதை மொழிபெயர்ப்பு என்று சொல்வதைவிட தற்காலத்திற்கான எளிய விளக்க நடையில் எழுதப்பட்ட பைபிள் என்று சொல்லலாம். இதன் ஆசிரியர் மறைந்த போதகர் யூஜின் பீட்டர்ஸன். ESV, KJV, மற்றும் NKJV வேதங்களை மட்டும் பயன்படுத்தும் மொழிபெயர்ப்பு ஆதரவாளர்களால் காய்மகாரமாய்ப் பகைக்கப்படுபவர். மொழிபெயர்ப்பு என்கிற பேரில் வேதத்தைச் சிதைத்துவிட்டார் என்று கடுமையாக சொற்களால் அவரை வசைபாடுவார்கள். அதுவும் KJV ஐ மட்டும் பயன்படுத்தும் பழமைவாதிகள் மெஸேஜ் பைபிளை வெறுக்கிறார்கள்….