வேதவாசிப்பு

சிங்கம் தன் வரலாறு கூறுதல்

சிங்கம் தன் வரலாறு கூறுதல்

‘சிங்கங்கள் புத்தகம் எழுதாத வரை, வேட்டைக்காரன் தன்னைக் குறித்துதான் பெருமையாக எழுதிக் கொண்டிருப்பான்’ என்று ஒரு ஆப்பிரிக்க பழமொழி உண்டு. எழுத்தாளர்கள் அனைவருக்குமே உள்ளதை உள்ளபடி எழுதுவது என்பது இயலாது. ஸ்டைல் என்கிற பேரிலாவது தங்களை எழுதுவதில் கலந்துகொண்டிருப்பார்கள். வரலாறும் அப்படித்தான்.  அக்கால மன்னர்களைத் தாண்டி வரலாற்று ஆசிரியர்கள் உண்மையை  மட்டும் எழுதியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். இதை வரலாறு படிப்பவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். யுவான் சுவாங், பாஹியான் போன்றவர்கள் எல்லாம் அந்த வகையறாக்கள். அவர்கள் எழுதியவை எல்லாம் சரியாகத்தான்…

எண்ணாகமம் – என்ன ஆகமம்?

எண்ணாகமம் – என்ன ஆகமம்?

அதிகம் பேரால் வாசிக்கப்படாத ஒரு புத்தம் வேதாகமத்தில் இருக்கிறது என்றால் அது அநேகமாக இந்தப் புத்தகம்தான். வேதாகமத்தை வருடத்திற்கு இத்தனை முறை படித்தாகவேண்டும் என்கிற கட்டாயத்துள் தங்களை வைத்திருப்பவர்கள் இந்தப் புத்தகத்தைக் கடந்தது எப்படி என்பதை அவர்கள்தான் விளக்கவேண்டும். 🙂  முதல் பத்து அதிகாரங்கள் சற்று விளக்கமாக சில முறைமைகளைக் கொண்டிருப்பது உண்மைதான். வெகு விளக்கமாக வரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, பாளையம் இறங்கவேண்டிய இடங்கள், மோசே மற்றும் ஆரோனின் வம்ச வரலாறு, ஆசரிப்புக்கூடாரத் திட்டங்கள், அவர்களது பணிகள்,…

விதவித..வினோத.. விபரீத.. வேதப் புறக்கணிப்புகள்

விதவித..வினோத.. விபரீத.. வேதப் புறக்கணிப்புகள்

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19:7 .  ஆனால், காலந்தோறும் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருந்துகொண்டே இருக்கின்றன விதவிதமான வகைவகையாய் வேதப் புறக்கணிப்புகள் இவை. “வேதமே வெளிச்சம்”! ஆனால் அறிந்தோ அறியாமலோ அந்த வெளிச்சத்தை விரும்பாதவர்கள், அல்லது வெளிச்சத்தை மறைப்பவர்கள் எல்லோரும் இருளை விரும்புபவர்கள்தான். இங்கு எழுதப்பட்டிருப்பவை எல்லாம் சில உதாரணங்களே. 1. பழைய ஏற்பாட்டைப் புறக்கணிப்பது, அதில் தீர்க்கதரிசனப் புத்தகங்களைப் புறக்கணிப்பது. சிறு தீர்க்கர்களின் புத்தகங்கள் எதையும்…