இழப்பவன் முட்டாள் அல்ல!
ஜனவரி 8, 1956 அன்று ஜிம் எலியட் மற்றும் அவருடைய நண்பர்களான பீட்டர் பிளெமிங், எட் மெக்கல்லி, நேட் செயிண்ட், ரோஜர் யூடெரியன் ஆகிய ஐவரும் தாங்கள் நண்பர்களாக்கி விட்டோம் என்று நினைத்து நெருங்கிய பழங்குடிகளால் தாக்கிக் கொல்லப்பட்டார்கள். சிறுவயதில் சண்டேஸ்கூலோடு போய்விடும் வழக்கம் மிஷனரிமார்களின் கதைகளைக் கேட்பது. வயதாக வயதாக ஊர்க்கதைகளைக் கேட்டு வளரும் காதுகளுக்கு ‘பழங்கதைகள்’ என்று அவை அதிக ஈர்ப்பை அளிப்பதில்லை. ஆனால், தேவனுடைய ராஜ்யத்திற்காகத் தங்களையே அர்ப்பணித்து வாழ்ந்தவர்களின் வரலாற்றை அவ்வப்போது…