
சங்கிலியால் கட்டு… நரகத்தில் தள்ளு…!
பூமியும் வானமண்டலங்களும் (cosmos) பிசாசின் அதிகாரத்துக்குட்பட்டவை. குறிப்பிட்ட காலத்திற்கு அனுமதிக்கப்பட்ட அதிகாரம் அவனுக்கு அங்கே உண்டு. எதிரி ஆதிக்கம் செலுத்தும் நம் பகுதி (Enemy occupied Territory) எனலாம். தேவனுடைய அதிகாரத்துக்குட்பட்டு பிசாசுக்கும், அதேபோல, அவரது சுதந்திரத்தில் பங்குள்ளவர்களாகிய நமக்கும் சில அதிகாரங்களை தேவனே அளித்துள்ளார். அவரவர் அதிகாரத்துக்குட்பட்ட எல்லையில் அவரவருக்கு வல்லமை உண்டு. ஆனால், எல்லை தெரிந்திருப்பது அவசியம். பிசாசு தன் குணக்கேடால் எல்லை மீறுபவன். ஆனால், நமக்கோ எல்லை மீறும் வேலை இல்லை, காரணம்…

மீதமான அப்பங்கள்
பன்னிரெண்டு கூடை நிறைய மீதமானவற்றை எடுத்தார்கள். ஏன்? ஆண்டவரால் இத்தனை பேர் X இத்தனை அப்பம் = இத்தனை ஆயிரம் அப்பம் என்று துல்லியமாகக் கணக்குப் போட்டிருக்க முடியாதா? அவர்தான் சர்வ ஞானம் பொருந்தியவராயிற்றே? துணிக்கைகள் முழு சைஸ் அப்பங்கள் இல்லை. கையாளும்போது உடைந்த, பிய்ந்துவிட்ட துணிக்கைகளாக இருந்திருக்கலாம். நம் அருள்நாதர் தன் பிள்ளைகளுக்கு முழுமையானதை மட்டும் கொடுக்கவும், உடைந்துபோனவற்றை கொடுக்கவேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். கல்யாணவீட்டில் உடைந்த அப்பளங்களையெல்லாம் கடைசியில் பார்த்திருப்போமே அதேபோல்! ஆனால் அவையும்…

பாவமும் பரிசுத்தமும்
கிறிஸ்துவுக்குள் இருப்பவனுக்கு பாவம் என்றால் என்ன என்று அறிவது பெரியவிஷயமே இல்லை. சுருக்கமாக நினைவில் கொள்ள “இதெல்லாம் ஒரு பிரச்சனையா, தப்பா, ஆகாதா என்று கேள்வி வந்தால், அங்கு நிச்சயம் ஏதோ ஒன்று ஒளிந்திருக்கிறது. அது பெரும் குற்றமாக மனதில் பளிச்செனத் தெரியாவிட்டாலும், குற்றத்தின் நிழலான ஏதோ ஒன்றாக – ஒரு மீறுதல், அக்கிரமம் அல்லது பாவமாக இருக்கலாம். கிறிஸ்தவன் என்பவன் பாவத்தை மேலாண்மை செய்பவன் அல்லன். புது சிருஷ்டியாக இருக்கும் அவன், இன்று அவருடைய பரிசுத்ததில்…

உபதேசங்களாகக் கற்றுக்கொள்ளுங்கள்
வசனங்கள் நம் இருதயத்தில் இருப்பது மிகவும் அவசியம். ஆனால், வசனங்களை மாத்திரம் அறிந்து வைத்திருக்காமல், முழுமையான உபதேசங்களையும் அறிந்து வைத்திருப்பதுதான் கிறிஸ்த வாழ்வின் வெற்றி இரகசியம். யோவான் 3:16இல் இரட்சிப்பு இயேசு வழியாக என்று அறிந்து, அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பாவ மன்னிப்பைப் பெற்று கிறிஸ்தவராக சபையில் சேர்க்கப்படுவது என்பது அந்த ஒற்றை வசனத்தால் நடப்பது அல்ல. மாறாக ஒரு முழுமையான இரட்சிப்பின் சத்தியத்தை உபதேசமாக அறிந்திருப்பதன் மூலம்தான். கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை உபதேசங்களை பல வசனங்களை…

தாங்கமாட்டீர்கள் – பாகம் 2
(முந்தைய பாகம்) பூமியில் கிறிஸ்து இருந்த காலங்களில் சீஷர்களால் விளங்கிக்கொள்ள அப்போது இயலாது என்பதாலேயே பலவற்றை அவர்களிடம் சொல்லவில்லை என்று சென்ற பாகத்தில் பார்த்தோம். ஒருமுறை ‘இப்போது சொன்னால் தாங்கமாட்டீர்கள்’ என்றேகூடச் சொல்லிவிட்டார். அவை என்ன என்று சீடர்களும் கேட்டாற்போல் தெரியவில்லை. இங்கு போதித்தவர் கிறிஸ்து! அவரைவிட மேலான போதகர் இருக்க வாய்ப்பில்லை. இருந்த போதிலும் அப்போது அவர்கள் பிற்காலங்களில் அவர்களாகவே கற்றுக்கொள்ள வேண்டிய காலத்திற்கென, பலவற்றை அவர் விட்டுவிட்டே சென்றார். அப்போது போதித்தவற்றில்கூட புரிந்து கொள்ளவும்…

உனக்கு நரகம் தான்!
ஆதாமை தன் சாயலாகப் படைத்த தேவன், தன் சாயலின் மேன்மையான சிந்திக்கும் திறனை வைத்தார். இந்த சிந்திக்கும் திறன்தான் எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளவும் புறம் தள்ளவும் உதவுகிறது. எதையும் யோசிக்காமல் அப்படியே யோசிக்காமல் ஏற்றுக்கொள்ளும் சமநிலை அற்ற தன்மை நம்மில் இல்லாததற்குக் காரணம் இந்த சிந்திக்கும் திறன் தான். அவர் சமநிலையான தேவன். எதையும் பின்யோசனையின்றி செய்பவரோ, செய்துவிட்டு அதன்பின் அதைக்குறித்து ஆராய்பவரோ அல்ல. மனிதனை அப்படி ஒரு பிறவியாகத்தான் வைத்தார். அவரது சாயல் என்பது…