
நான் பைபிள் மட்டுமே வாசிக்கிறேன்.
எத்தனை புத்தகங்களையும் படியுங்கள். ஆனால், வாழ்வது வேதத்தின்படி இருக்கட்டும் என்றார் போதகர் சார்ல்ஸ் ஸ்பர்ஜன். புத்தகம் வாசிப்பவர்களுக்கு முன் இருக்கும் சவால், வாசிக்கிறேன் பேர்வழி என்று வேதவாசிப்பைக் குறைத்துவிடக்கூடும் எனபதுதான். இது அபாயமான சவால். புத்தகம் வாசிக்காமல் நான் வேதம் மட்டுமே வாசிப்பேன் என்று சொல்பவர்கள் வைக்கும் நியாயமான கருத்தும் இந்த அபாயத்தைக் கருதிதான். ஆனால், புத்தகம் வாசிப்பவர்கள் எந்தச் சாக்குப் போக்கும் சொல்ல இயலாதபடி அவற்றை எதற்காக வாசிக்கிறோம் என்கிற தெளிவிருந்தால் இந்த அபாயத்தை சுலபமாக…

சுய முன்னேற்றம்! புத்தகங்கள் வழியே?
ஒரு காலத்தில் எம் எஸ் உதயமூர்த்தி புத்தகங்கள் சிலவற்றை நான் வாசித்திருக்கிறேன். குறிப்பாக ‘உன்னால் முடியும் தம்பி’. ஆங்கிலத்தில் ஏராளம் உண்டு. தற்காலத்தில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகக் கண்காட்சி கண்காட்சியாக அவை அலைவதையும், அவற்றை வாங்கி ‘முன்னேறிவிட’ மக்கள் கூட்டம் அலைமோதுவதையும் காணலாம். ஆனால், ஒரு கிறிஸ்தவராக இந்த சுய முன்னேற்றப்புத்தகங்களை வாசிக்கலாமா, இல்லை தேவையில்லையா என்று கேட்டால், கிரேங்கர் ஸ்மித் தரும் ஒரு பதிலையே தரவிரும்புகிறேன். “சுய முன்னேற்றப் புத்தகங்கள் எல்லாம் பிரச்சனை வெளியில்…