எளிய ஜெபம்
ஒரு பொடியன் மூலையில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு “ABECDE…” என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் அம்மா வியப்புடன் அவனிடம் “தம்பீ… நீ என்ன செய்யுதே?” என்றார்கள். அதற்கு அவன் “நா ஜெவம் பண்ணுதேன்…” என்றான். “ஓ, ஆனா, நீ ABCD..ந்னுல்ல சொல்லிக்கிட்டு இருக்கிறமாதிரித் தெரியுது” “ஆமாம்மா…நீங்க ஜெவம் பண்ணச் சொன்னீங்க. எனக்கு நீங்க சொல்லித்தந்த ஜெபம் மறந்திருச்சி…அதுனால, ஆண்டவரே எனக்கு ஜெபிக்கதெரியாது… நா ABCD ஃபுல்லாச் சொல்றேன். அந்த எழுத்துக்களை வச்சி நீங்களே ஜெபம் பண்ணீக்கோங்க என்று…
என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்!
காத்திருப்பு கடினம். சில நிமிடம் கம்யூட்டர் boot ஆகும் நேரம் என்றாலும் சரி, ஒரு அலுவலகத்தில் வரவேண்டியவர் வந்து உட்காரவேண்டியவர் வரும் வரை அந்த சீட்டையே பார்த்துக்கொண்டிருப்பதும் சரி… கடினம்தான். எனக்கு பில்லிங் கவுண்டர்களில் காத்திருப்பது கொஞ்சம் சலிப்பையும் உண்டுபண்ணும். பொருளை வாங்கிக் காசு கொடுக்கக் காத்திருக்க வேண்டுமா? என்று நினைப்பதுதான் காரணம்! வாட்ஸப்பில் இரண்டு ப்ளூடிக்குகள் வரும்வரை காத்திருக்கமல் ஃபோன் போட்டுவிடுபவர்கள் உண்டு. காத்திருப்பு அவஸ்தை!. காரணம் அது நம்மிடம் இருக்க வேண்டிய, ஆனால் இல்லாத…