
நாம் நல்லவர்களாக இருந்தால் போதுமா?
நல்லவனுக்கும், கிறிஸ்தவனுக்கும் ஒரு பெரும் வேறுபாடு உண்டு. நல்லவர்கள் முடிந்தவரை நல்லவர்களாக வாழ்ந்து, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் தொல்லை தராமல் வாழ நினைக்கிறவர்கள். அவர்களே கடவுளை நம்புகிறவர்களாக இருந்தால், நல்லவர்களாக இருந்து கடவுளது நேசத்தைப் பெற முயற்சிப்பார்கள். தாங்கள் நல்லவர்களாக இருப்பதும், மற்ற நல்லவர்கள் தங்களை அங்கீகரிக்கவேண்டும் என்பதிலும் மிக கவனமாக இருப்பவர்கள்இவர்கள். ஆனால், கிறிஸ்தவன் அப்படி இல்லை. அவனிடம் வெளிப்படும் நன்மை – அது அவனுக்குள் வசிக்கும் கிறிஸ்துவிடம் இருந்து வெளிப்படுவதாக நம்புபவன். தான் நல்லவனாக…

எண்ணங்களை மேம்படுத்துங்கள்
இன்று சில சபைக்குள் பிரசங்கிக்கப்படுகிற சில புத்தகங்கள்: ஆனால், இந்தப் புத்தகங்களின் பெயரையோ, எழுத்தாளர்களையோ குறிப்பிட்டால் மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதெல்லாம், இதையெல்லாம் கர்த்தர் சொன்னார் என்று வேதாமத்தில் சில வசனங்களை நுட்பமாக வியாக்கியானம் செய்துவிட்டால் போதும். சபை குஷியாகிவிடும்! எனவே மேற்சொன்ன புத்தகங்களுக்கு கறுப்பு அட்டைஇட்டு வேதாகமம் என்று பெயரிட்டால் எல்லாம் சுகமே! எதிர்காலம் டாப். ஏனென்றால் இதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். இதற்காக கீழே உள்ள வசனங்களை மறைக்கவேண்டும். மறக்கடிக்க வேண்டும். அல்லது புறக்கணிக்கிற அளவுக்கு புரட்டவேண்டும்: அன்றியும்…

சுய முன்னேற்றம்! புத்தகங்கள் வழியே?
ஒரு காலத்தில் எம் எஸ் உதயமூர்த்தி புத்தகங்கள் சிலவற்றை நான் வாசித்திருக்கிறேன். குறிப்பாக ‘உன்னால் முடியும் தம்பி’. ஆங்கிலத்தில் ஏராளம் உண்டு. தற்காலத்தில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகக் கண்காட்சி கண்காட்சியாக அவை அலைவதையும், அவற்றை வாங்கி ‘முன்னேறிவிட’ மக்கள் கூட்டம் அலைமோதுவதையும் காணலாம். ஆனால், ஒரு கிறிஸ்தவராக இந்த சுய முன்னேற்றப்புத்தகங்களை வாசிக்கலாமா, இல்லை தேவையில்லையா என்று கேட்டால், கிரேங்கர் ஸ்மித் தரும் ஒரு பதிலையே தரவிரும்புகிறேன். “சுய முன்னேற்றப் புத்தகங்கள் எல்லாம் பிரச்சனை வெளியில்…