
தேவன் தன் முடிவுகளை மாற்றிக்கொள்பவரா?
நம்முடைய மனம் (வாக்குறுதி, பேச்சு) மாறுவதற்கும் தேவன் தன் மனதை மாற்றிக்கொண்டார் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. (அல்லது சம்பந்தமே இல்லை). நிச்சயம், நம்மைப்போல ஒன்றைச் செய்ய நினைத்து, தன் திட்டதில் ஏதோ குறையைப் பாதிவழியில் கண்டுபிடித்ததால் மாற்றிக்கொண்டார் என்று ஐயப்பட வழியே இல்லை. காரணம், அப்படி இருந்தால் அவர் இறைவன் அல்ல. அப்படி அவர் முடிவுகளை மாற்றிக்கொண்டேயிருப்பாரானால், நம்மைபோல அவரும் குழப்பமானவராகத்தான் இருப்பார் என்று கருதவே வாய்ப்புண்டு. மாறாக நாம் அவரை விசுவாசிக்கக் காரணமே, அவர் என்றும்…