தேடுங்கள்… கண்டடைவீர்கள்!
கோடிக்கணக்கான மனிதர்கள் கடவுளைத் தேடிக்கொண்டிருப்பது உண்மையிலேயே இயல்பான விஷயம் தானா? இல்லை விவரமற்ற, முதிர்ச்சியற்ற, அறியாமையால் செய்யப்படும், பகுத்தறிவற்ற செயலா? மனிதன் ஏன் தன் கண்களால் பார்க்க இயலாத ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறான்? இது வெறும் பொழுதுபோகாமல் செய்யப்படும் காரியமா அல்லது கஷ்ட காலங்களில் மன சமாதானத்திற்காகத் தேடிக்கொள்ளும் ஒரு ‘உளவியல் சமாளிப்பா’ (Psychological Coping Mechanism)? அருள்நாதர் இயேசு கிறிஸ்து சொன்னார்: “தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்.” பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த வாசகத்தைச் சுவர்களிலும் பாறைகளிலும் சுண்ணாம்பால் சுவிசேஷகர்கள் எழுதியிருப்பார்கள்….