அறிவியல் வளர வளர இறைவன் தேவைப்படமாட்டாரா?
“அறிவியல் வளர்ந்துகொண்டிருக்கிறது. அதனால், அறிவியலுக்கு இன்னும் சிறிது காலம் கொடுங்கள்; மதங்கள், குறிப்பாக கிறிஸ்தவம் அதன்பின் அவசியம் இல்லாமல் போய்விடும்” என்பது சில கடவுள் மறுப்பாளர்களின் வாதம். அதாவது, அறிவியல் வளர வளர, இறைவன் தேவையற்றவர் ஆகிவிடுவார் என்பது இவர்களுடைய எண்ணம். ஆனால், இந்த எண்ணம் மெய்யறிவுக்கு (Truth) முற்றிலும் புறம்பானது. இன்று நாம் வாழும் உலகம் அறிவியலால் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். நேற்று முடியாத பல காரியங்கள் இன்று சாதாரணமாக நடக்கிறது; அறிவியலால்…
டோபமைன்: வீணாக்கப்படும் இறைப்படைப்பு
எக்கச்சக்கமாக மொபைலில் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருப்பீர்களானால், டோபமைன் என்கிற வார்த்தை ஒருமுறையாவது உங்களைக் கடந்து சென்றிருக்கும். இது நம் உடலில் ஏற்படும் ஒரு அவசியமான சுரப்பு. நம் சரீரம் தேவன் வடிவமைத்த ஒரு அதிசயமான கருவி. அதில் ஹார்மோன்களின் பங்கு மிகவும் அதிகம். பிரச்சனைகள் வராதவரை இந்த ஹார்மோன்களைப் பற்றியும் நாம் அதிகம் யோசிப்பதில்லை. ஹார்மோன்கள் ஒருவகை வேதிப்பொருட்கள் – பழைய தமிழில் இரசாயனம். நம் உடலில் ஒவ்வொரு இரசாயனமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு…