Apologetics

சட்டம் ஒரு சங்கடம்

சட்டம் ஒரு சங்கடம்

“இதென்ன உன் இடம்ணு எழுதி வச்சிருக்கா?” பள்ளியில் மாணவர்கள் இடையே இடத்தகறாறு வரும்போது வரும் வார்த்தைகள் இவை. இப்படிக் கேட்பதற்குக் காரணம் எழுத்துக்கு அல்லது எழுதப்பட்ட வார்த்தைக்கு வலிமை அதிகம் என்பதுதான். நிலப்பத்திரம் நாமறிந்த ஒரு நல்ல உதாரணம். ஒரு விண்ணப்பத்தைக்கூட எழுத்தில் கேட்டால்தான் அதற்குண்டான மதிப்பையும் மரியாதையையும் பெறுகிறது. துவக்கத்தில் தன் சாயலை தேவன் மனிதனுள் வைக்கும்போது அவருடைய பிரமாணங்களை இருதயத்தில்தான் வைத்தார். இருதயம் ஒரு எழுத்துப் பலகை. அதில் எப்போதும் விஷயங்கள் எழுதப்பட்டுக்கொண்டே தான்…

டோபமைன்: வீணாக்கப்படும் இறைப்படைப்பு

டோபமைன்: வீணாக்கப்படும் இறைப்படைப்பு

எக்கச்சக்கமாக மொபைலில் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருப்பீர்களானால், டோபமைன் என்கிற வார்த்தை ஒருமுறையாவது உங்களைக் கடந்து சென்றிருக்கும். இது நம் உடலில் ஏற்படும் ஒரு அவசியமான சுரப்பு. நம் சரீரம் தேவன் வடிவமைத்த ஒரு அதிசயமான கருவி. அதில் ஹார்மோன்களின் பங்கு மிகவும் அதிகம். பிரச்சனைகள் வராதவரை இந்த ஹார்மோன்களைப் பற்றியும் நாம் அதிகம் யோசிப்பதில்லை. ஹார்மோன்கள் ஒருவகை வேதிப்பொருட்கள் – பழைய தமிழில் இரசாயனம். நம் உடலில் ஒவ்வொரு இரசாயனமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு…

இப்படிக்கு பிசாசு

இப்படிக்கு பிசாசு

 ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பது தெரியும். ஆனால், பிசாசு கடிதம் எழுதுவது? அதுவும் தன் மருமகனுக்கு “நல்ல ஆலோசனை”களைக் கடிதங்களாக எழுதினால்? பிரச்சனைகளைக் கொண்டுவருபவன் பிசாசு. அந்தப் பிசாசுக்கே சில பிரச்சனைகள் இருந்து அதைப் பிசாசே சொன்னால் எப்படி இருக்கும்? அதையும் புத்தகமாக, “எனக்கு இருக்கும் பிரச்சனைகள் இவை, இவற்றைச் எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. எனக்கு திகைப்பாக இருக்கிறது” என்றெல்லாம் புலம்பலாக எழுதினால்? பிரச்சனைகளைக் கொண்டுவருபவன் பிசாசு. அந்தப் பிசாசுக்கே சில பிரச்சனைகள் இருந்து அதைப்…

சி. எஸ். லூயிஸ் 

சி. எஸ். லூயிஸ் 

சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த கிறிஸ்தவ எழுத்தாளர்  CS Lewis என்று சொன்னால் பலர் மறுக்கப்போவதில்லை. அவரை வாசிப்பது கடினம் என்பது முதல் புத்தகத்தை வாசிக்கும்போது தோன்றியது. அதற்குக் காரணம் அவர் அல்ல. அவரது சில முக்கியமான புத்தகங்கள் அவரது உரைகளில் இருந்து எழுத்துக்களாகத் தொகுக்கப்பட்டவை. அக்கால பிரிட்டிஷ் அறிஞர்களின் ஆங்கிலம் என்பதால் அதை அப்படியே எழுதிவிட்டார்கள். அவரது கருத்துக்களில் கைவைத்துவிடக்கூடாது என்பதற்காகவே புத்தகங்களை எளிமைப்படுத்தும் முயற்சியை எவரும் செய்யவில்லை.  நாத்திகத்தில் இருந்து ஆத்திகனாக மாறிய கிளைவ்…

தூரத்துக்கும் தேவன்

தூரத்துக்கும் தேவன்

நம்மால் ஒளியின் வேகத்தை அடையமுடியுமா? அடைவது எப்படி? அடைந்தால் என்ன ஆகும்? ஒரு கிறிஸ்தவனாக இந்த அறிவியலைக் குறித்து நம்மால் சிந்திக்க முடிந்தால்? பெரியப்பா மாதவன் பல வருடங்கள் முன் சொன்னது. “கடவுள் மிக வேகமானவர் என்று நினைக்கிறேன் பென்னி. அதனால்தான் அவரை நம்மால் பார்க்க முடிவதில்லை. வேகமாகச் சுற்றும் சைக்கிளின் ஸ்போக்ஸ் கம்பியை நம்மால் பார்க்கமுடிவதில்லையே. அதுபோலத்தான் கடவுளும் என்று நான் நினைக்கிறேன்” என்றார். அவருக்குக் இறை நம்பிக்கை இல்லை என்று நான் நினைத்துக் கேட்டபோது…

Apologetics என்கிற காப்புரை அல்லது காப்புவாதம்

Apologetics என்கிற காப்புரை அல்லது காப்புவாதம்

Apologetics என்கிற காப்புவாதம் தமிழ் கிறிஸ்தவத்தில் குறைவு. காரணம் இங்கு கிறிஸ்தவத்தை எதிர்ப்பவர்கள் வேதத்தைக் கற்று அதில் குற்றம் கண்டறிந்தபின் அதைபற்றிக் கேள்வி கேட்பவர் அல்லர். வெறுமனே “என் மத உணர்வைப் புண்படுத்திவிட்டாய்” என்று கிறிஸதவத்தை எதிர்ப்பவர்கள்தான் அதிகம். உண்மையில், வேதத்தைக் கற்று அதன்பின் நம்மைக் கேள்விகேட்டால் அதற்குப் பதில் அளிக்க  நிச்சயம் நமக்குப் பயிற்சி தேவை. இதில் நம் இறைஞானமும் வளரும்.  இது வரை கடினமான கேள்விகளைக் கேட்கும் ஒரு சூழல் இங்கு இல்லை. (இஸ்லாமியர்…