உபதேசங்களாகக் கற்றுக்கொள்ளுங்கள்
வசனங்கள் நம் இருதயத்தில் இருப்பது மிகவும் அவசியம். ஆனால், வசனங்களை மாத்திரம் அறிந்து வைத்திருக்காமல், முழுமையான உபதேசங்களையும் அறிந்து வைத்திருப்பதுதான் கிறிஸ்த வாழ்வின் வெற்றி இரகசியம். யோவான் 3:16இல் இரட்சிப்பு இயேசு வழியாக என்று அறிந்து, அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பாவ மன்னிப்பைப் பெற்று கிறிஸ்தவராக சபையில் சேர்க்கப்படுவது என்பது அந்த ஒற்றை வசனத்தால் நடப்பது அல்ல. மாறாக ஒரு முழுமையான இரட்சிப்பின் சத்தியத்தை உபதேசமாக அறிந்திருப்பதன் மூலம்தான். கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை உபதேசங்களை பல வசனங்களை…
தாங்கமாட்டீர்கள் பாகம் 4 – சத்தியம்
[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3] …[பாகம் 5] ஆண்டவர் பூமியில் இருந்தகாலங்களில் கிருபையைப் போதிக்கவில்லை என்று சென்ற பாகத்தில் பார்த்தோம். தேபோல் ஆச்சரியமானவிதமாக அவர் விளக்கிச் சொல்லாத மற்றொரு விஷயம் கிறிஸ்தவத்தின் அடிநாதமான ‘சத்தியம்’! அதை அவர் ஒரு உபதேசமாகச் சொல்லி விளக்கவில்லை. அதற்குக் காரணம் சீடர்கள் தாங்கமாட்டார்கள் என்ற காரணமாகத்தான் இருக்கமுடியும். ஆனாலும், அவரது குரலை வீதிகளில் கேட்டவர்கள் அவர் போதிப்பது சத்தியம் என்று சில பரிசேயர்கள் அனுப்பிய சில ஏரோதியரான வேவுக்கார்…
தாங்கமாட்டீர்கள் – பாகம் 1
நல்ல ஆசிரியர்களுக்கென்று சில அடையாளங்கள் உண்டு. நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது குறைந்தகாலம்தான் அவர் வகுப்பெடுத்தார். ஆனால், பள்ளியில் அந்த ஒரு ஆசிரியர் கற்பித்த விதம் மட்டும் இன்றும் நினைவில் இருக்கிறது. தான் எடுக்கப்போகும் பாடப்பகுதியை முதலில் ஒரு 10 நிமிடம் வாசிக்க நேரம் தருவார் அதன் பின் சில கேள்விகளைக் கேட்பார். அல்லது கேள்வி கேட்கச் சொல்வார். கடினமான பாடம் என்றால் என்ன புரிந்துகொண்டீர்கள் என்று கேட்பார். இந்த நேரம் முடிந்தவுடன்தான் அவர் அந்தப் பாடத்துக்குள்…
வேற யாராவது இருக்கீங்களா?
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1: 27 தேவன் மனிதர்களைப் படைத்ததுபோல வேறெங்கேனும் படைத்திருப்பாரா? இங்கு வேறு யாரேனும் உள்ளனரா? பூமியைப் படைத்து அதன் மண்ணில் இருந்து மனிதனைப் படைத்தவருக்கு வேறு எங்கேனும் அங்கிருக்கும் மண்ணை/தனிமங்களைக் கொண்டு அங்கே உயிரினங்களைப் படைத்திருப்பாரா? அதாவது ஏலியன்களை? 1950 ஆண்டு ஒரு சிறுகூட்டம் இயற்பியலாளர்கள் கூடி UFO (Unidentified Flying Object) என்கிற வானத்தில் அவ்வப்போது தெரியும்…
வாக்குத்தத்தங்கள் மந்திரக்கோல்களா?
இந்த வாழ்வுக்கான வாக்குத்தத்தங்கள் – பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று வேதம் முழுவதுதிலுமே நமக்கென்று அருளப்பட்டிருக்கின்றன. வேதாகமம் வெறுமனே பரலோக வாழ்வுக்கு நுழையப் படிப்பதற்கான Entrace test coaching book அல்ல என்பது உண்மை. மறுமைக்கு மட்டுமல்ல, இந்த வாழ்வுக்கும் அவை உண்டு. அப்படி இல்லாவிட்டால், இந்த வாழ்வை உருப்படியாக வாழ இயலாது! ஆனால், வாக்குத்தத்தங்களின் பிரதான நோக்கம், நம்மை அழைத்தவரை அறிகிற அறிவிலே வளரவும், அந்த வளர்ச்சியில் அவரது உறவைப் பேணவும், அந்த உறவில்…
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு…
நம் ஆண்டவருக்கு மிகப் பெரிதான சந்தோஷம் என்னவாக இருக்கும்? பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும், அவருக்குள்ளும் சிருஷ்டிக்கப்பட்டிருக்க அதென்ன பெரிதான சந்தோஷம் கிறிஸ்துவுக்கு என்று புதிதாக ஒன்று இருக்கமுடியும்? அதுவும் மரணத்தைக் குறித்த துயரத்தையும் ஒதுக்கிவைக்கக்கூடிய அளவுக்கு? பாவத்தில் உளலும் தன் மணவாட்டியாகிய சபையைத் தன் பரிசுத்த இரத்தத்தைத் தந்து, கழுவி, ஆட்டுக்குட்டியானவரின் திருமணநாளுக்காக, அவள்பால் கொண்ட தன் எல்லையில்லா அன்பினால் ஆயத்தப்படுத்தும் பெரும்…
- 1
- 2