வேதாகமம்

This is a category description…

ஏரோது: ஒரு கொலைகார வம்சத்தின் வரலாறு

புதிய ஏற்பாட்டில் “ஏரோது” என்ற பெயர் ஏறக்குறைய ஐம்பது முறை வருகிறது. ஆனால், நினைவில் கொள்ளுங்கள்: இது ஒரே நபரைக் குறிப்பதல்ல! ரோமானியப் பேரரசின் தயவால் யூதேயாவை ஆண்ட ஒரு வம்சத்தின் பெயரே ‘ஏரோது’. புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஏரோதுகள் அனைவருமே கி.மு. 40 வாக்கில் ரோமானியப் பேரரசால் யூதேயா மீது அமைக்கப்பட்ட ஆட்சியாளர்களின் வம்சத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். இவர்கள் யார்? ஆதிப் பிதாவாகிய யாக்கோபின் வழித்தோன்றல்கள் அல்ல; அவருடைய சகோதரன் ஏசாவின் வம்சத்தார் (ஏதோமியர்கள்)….

ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புக்கள்

Image Source:https://bible-history.com ஒரு நல்ல ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுப்பது எப்படி? நீங்கள் தமிழ் வேதாகமம் மட்டுமே வாசிப்பவர் ஆனாலும், ஆங்கில வேதாகமம் ஒன்றாவது உங்களிடம் இருக்கவேண்டும். நான் சொல்வது அலமாரிகளில் 1960ல் இருந்து உறங்கிக் கொண்டிருக்கும் பழைய நம் தாத்தா கையெழுத்து காணப்படும் பழைய சிறு KJV வேதாமம் அல்ல. அது பத்திரமாக இருக்கட்டும். ஏனென்றால் ஆங்கிலத்தில் வாசித்துப் பழகாதவர்களுக்கான தொடக்கநாட்களுக்கான வேதாகமம் அது அல்ல. அதை வாசித்தால் பின்பு ஆங்கிலமே கசக்கக் கூடும்.  சுமார்…

சட்டம் ஒரு சங்கடம்

“இதென்ன உன் இடம்ணு எழுதி வச்சிருக்கா?” பள்ளியில் மாணவர்கள் இடையே இடத்தகறாறு வரும்போது வரும் வார்த்தைகள் இவை. இப்படிக் கேட்பதற்குக் காரணம் எழுத்துக்கு அல்லது எழுதப்பட்ட வார்த்தைக்கு வலிமை அதிகம் என்பதுதான். நிலப்பத்திரம் நாமறிந்த ஒரு நல்ல உதாரணம். ஒரு விண்ணப்பத்தைக்கூட எழுத்தில் கேட்டால்தான் அதற்குண்டான மதிப்பையும் மரியாதையையும் பெறுகிறது. துவக்கத்தில் தன் சாயலை தேவன் மனிதனுள் வைக்கும்போது அவருடைய பிரமாணங்களை இருதயத்தில்தான் வைத்தார். இருதயம் ஒரு எழுத்துப் பலகை. அதில் எப்போதும் விஷயங்கள் எழுதப்பட்டுக்கொண்டே தான்…

தாமஸ் ஜெஃபர்ஸன் (படித்துக்) கிழித்த பைபிள்

“ஆமா, அப்படியே படிச்சுக் கிழிச்சிட்டாரு… எங்க…இந்தக் கேள்விக்கு பதில் சொல்பார்ப்போம்” என்று ஆசிரியர்கள், பெற்றோர் சொல்வது வழக்கம். ஆனால், உண்மையிலேயே, அப்படிப் படித்துக் கிழித்தவர் ஒருவர் வரலாற்றில் இருந்தார். அதுவும் பைபிளை!. அவர் பெயர் தாமஸ் ஜெஃபர்ஸன். அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்; நன்றாகப் படித்தவர் என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். கிறிஸ்துவை விசுவாசிக்காமல் கிறிஸ்தவராக வாழ முயற்சிப்பவர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், அந்நாட்டின் சுதந்திரப் பிரகடனத்தை…

மகிமை…மகிமை…மகிமை

முன்குறிப்பு: கட்டுரையின் பின்குறிப்பை வாசித்து வந்தால் நன்றாக இருக்கும். சில வார்த்தைகளை அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்போம்; அதன் ஆழம் தெரியாவிட்டாலும். கிறிஸ்தவத்தில் அப்படி ஒரு வார்த்தை – மகிமை!. அதாவது தேவனுடைய மகிமை. இதுபற்றி  விளக்கமான போதனைகளும்  நான் அதிகம் கேட்டதில்லை. அதற்கு முக்கியமான காரணம் இந்த மகிமை என்கிற வார்த்தையை விளக்குவது கடினம் என்பதாக இருக்கலாம். ஆனால், நீங்கள் கேட்டிருப்பீர்களானால், தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். 🙂 தேவ மகிமை என்பது அவருடைய பரிபூரணத்தின், அவருடைய தெய்வீக…

ஒரு நேரத்தில் ஒரு அடி

இரவுகள் இருளாக இருந்த காலங்கள் அது. இன்று போல லைட் ஃபொல்யூஷன் இல்லாத காலங்கள். இன்று நகரங்களில் மட்டுமல்ல, குறுநகரங்களில் கூட ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சி இருளை மறைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு – அன்று ஒரு இரவில் ஆபிரகாமால் தேவன் வானத்தைப் பார்க்கச்சொன்ன போது சுமார் 20000 நட்சத்திரங்களைப் பார்த்து, எண்ணி இருக்க முடியுமாம். இன்று பல நாட்களில் நம்மால் அது இயலாது. நட்சத்திரங்களைக் கோள்களைப் படமெடுக்க விண்வெளிப் புகைப்பட ஆர்வலர்கள் இருளைத்தேடி அலைகிறார்கள்….

ஏரோதுக்கள்

புதிய ஏற்பாட்டில் “ஏரோது” என்ற பெயர் கிட்டத்தட்ட ஐம்பது முறை குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இந்தப் பெயர் ஏரோது என்கிற ஒரு நபரை அல்ல –  பல்வேறு நபர்களைக் குறிக்கிறது. புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஏரோதுகள் அனைவருமே கிமு 40 இல் ரோமானியப் பேரரசால் யூதேயா மீது அமைக்கப்பட்ட ஆட்சியாளர்களின் வம்சத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். இந்த ஏரோதுக்கள் ஏசாவின் வழித்தோன்றல்கள் (ஏதோமியர்கள்!). யாக்கோபின் வம்சத்தினர் அல்ல, என்றபோதிலும் அவர்களின் முன்னோர்கள் யூத மதத்திற்கு மாறியிருந்தனர். புதிய ஏற்பாடு…

சிங்கம் தன் வரலாறு கூறுதல்

‘சிங்கங்கள் புத்தகம் எழுதாத வரை, வேட்டைக்காரன் தன்னைக் குறித்துதான் பெருமையாக எழுதிக் கொண்டிருப்பான்’ என்று ஒரு ஆப்பிரிக்க பழமொழி உண்டு. எழுத்தாளர்கள் அனைவருக்குமே உள்ளதை உள்ளபடி எழுதுவது என்பது இயலாது. ஸ்டைல் என்கிற பேரிலாவது தங்களை எழுதுவதில் கலந்துகொண்டிருப்பார்கள். வரலாறும் அப்படித்தான்.  அக்கால மன்னர்களைத் தாண்டி வரலாற்று ஆசிரியர்கள் உண்மையை  மட்டும் எழுதியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். இதை வரலாறு படிப்பவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். யுவான் சுவாங், பாஹியான் போன்றவர்கள் எல்லாம் அந்த வகையறாக்கள். அவர்கள் எழுதியவை எல்லாம் சரியாகத்தான்…

எண்ணாகமம் – என்ன ஆகமம்?

அதிகம் பேரால் வாசிக்கப்படாத ஒரு புத்தம் வேதாகமத்தில் இருக்கிறது என்றால் அது அநேகமாக இந்தப் புத்தகம்தான். வேதாகமத்தை வருடத்திற்கு இத்தனை முறை படித்தாகவேண்டும் என்கிற கட்டாயத்துள் தங்களை வைத்திருப்பவர்கள் இந்தப் புத்தகத்தைக் கடந்தது எப்படி என்பதை அவர்கள்தான் விளக்கவேண்டும். 🙂  முதல் பத்து அதிகாரங்கள் சற்று விளக்கமாக சில முறைமைகளைக் கொண்டிருப்பது உண்மைதான். வெகு விளக்கமாக வரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, பாளையம் இறங்கவேண்டிய இடங்கள், மோசே மற்றும் ஆரோனின் வம்ச வரலாறு, ஆசரிப்புக்கூடாரத் திட்டங்கள், அவர்களது பணிகள்,…

திரித்துவம் அல்லது திரியேகத்துவம்

குறிப்பு: கட்டுரையின் நோக்கம், ஏற்கனவே திரித்துவத்தை ஆராய்ந்து அறிந்தவர்களுக்கு இன்னும் ஒரு கோணத்தில் சிந்திக்க ஒரு சிறு உதவியாக இருப்பது மட்டுமே. கொஞ்சம் கவனத்துடன் வாசித்தால் சில புதுப் பரிமாணங்களில் நீங்களும் அவரைக் குறித்துச் சிந்திக்கலாம்! கிறிஸ்தவத்தில் திரும்பத் திரும்பப் போதிக்கப்படுவதும் விசுவாசிக்கப்படுவதுமான உபதேசம் திரித்துவம் அல்லது திரியேகத்துவம். இறைவன் மூவராக இருக்கும் ஒருவர் என்பதே திரித்துவம். இப்படிச் சொல்வதைப் புரிந்துகொள்வதில் நிச்சயம் சிரமம் இருக்கும். ஆனால், அது இயல்பானது. காரணம் எந்த நேரத்திலும் மனிதராக இருக்கும்…

  • 1
  • 2