ஏன் தாகமாயிருக்கிறேன் என்று சொன்னார் இயேசு?
நானே ஜீவ ஊற்று என்று சொன்னவர், நான் தரும் தண்ணீரை அருந்துபவன் ஒருக்காலும் தாகமடையான் என்று சொன்னவர் – எப்படி தாகமாயிருக்கிறேன் என்று சிலுவையில் சொல்லியிருக்கமுடியும். இது கிறிஸ்துவை அறியாதவருக்கு மட்டுமல்ல, அறிந்தவருக்கே புதிர்தான். சிறுவயதில் நான் நினைத்ததுண்டு: இயேசுவுக்கு சிலுவையில் வலிதெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் இறைவன் என்பதால் வலியை உடலில் இருந்து எடுத்துப் போட்டிருக்க அவரால் இயலும் என்று. ஆனால் அவர் அதைச் செய்யவில்லை, மாறாக உண்மையாகவே தன் சரீரத்தில் வேதனைகளை அனுபவித்தார் என்பது புரிய…
ஏன் கடவுள் நம்மைப் படைத்தார்?
மனிதர்களைக் கடவுள் படைத்திருந்தார் என்றால், மனிதனை ஏன் அவர் படைத்திருக்க வேண்டும்? மனிதனால் அவருக்கு என்ன பயன்? படைக்கப்பட்ட மனிதன் படைத்தவருக்கு என்ன செய்துவிடமுடியும் என்ற கேள்வி உங்களில் யாருக்காவது வந்திருக்குமானால் மகிழ்ச்சி. இறைவன் குறைவுள்ளவராக இருந்திருப்பாரேயானால் அவர் இறைவனாக இருக்க முடியாது. அவர் தன்னில்தான் நிறைவாகவே இருந்தார். மனிதனோ, மனிதனின் சேவையோ அவருக்குத் தேவைப்படவே இல்லை ஆனால், அவர் தான் அன்புகூறவும், தன்னிடம் சுயனலமில்லா அன்பை வெளிப்படுத்தவும் மனிதனைப் படைத்தார். அதுவும் இல்லாமல் அவரால் இருந்திருக்க…
எத்தனை பேர்களோ.. அத்தனை பேர்களுக்கும்.
எத்தனை எத்தனைபேர் இரட்சிப்பை விரும்பினாலும் அத்தனைபேரையும் இரட்சிக்க வல்ல மகாபெரிய இரட்சிப்பு அவருடைய இரட்சிப்பு. எத்தனை கோடிப்பேர் வந்தாலும் அத்தனைபேரையும் கழுவக்கூடிய வல்லமையான இரத்தம் அவருடைய இரத்தம். எத்தனைபேர் சமாதானம் வேண்டினாலும், அத்தனைபேரையும் அமைதலாக்கும் சமாதானம் அவருடைய சமாதானம். எவ்வளவு திரளான மக்கள் இயலாமல் வந்தாலும் அவர்களெல்லோரையும் தாங்கும் பெரிதான கிருபை அவருடைய கிருபை. எவ்வளவு வெறுமையில் கோடானுகோடிபேர் இருந்தாலும், அனைவரிலும் அன்புகூரக்கூடிய அளவுக்கு உன்னதமானது அவரது அன்பு. எவ்வளவு திரள்கூட்டம் மக்கள் அவர் அணைப்புக்குள் வந்தாலும்,…
இருக்கிறேன்
வெள்ளைச்சாமி என்பவர் கருப்பாக இருப்பார். ஆரோக்கியசாமி ஆஸ்பத்திரிக்குப் போவார். பெயருக்கும் ஆளுக்கும் அல்லது குணத்திற்கும்கூடச் சம்பந்தம் இருக்காது. பெஞ்சமின் என்று எனக்கு என் தாத்தாவின் பெயரை இட்டார்கள். பெஞ்சமின் (அல்லது பென்யமின்) என்பதற்கு தெற்கின் மகன் அல்லது வலது கரத்தின் மகன் என்று பொருள். திருநவேலி வலது கைக்காரனுக்கு இந்தப்பெயர் கொஞ்சம் பொருத்தமாக இருப்பது தெரிகிறது. முதலிலேயே நமக்குப் பெயரிடப்பட்டுவிடுவதால் (சிலருக்குப் பிறக்கும் முன்பே) , குணத்திற்கு, நிறத்திற்கு, ஆளுக்கு என்று பொருத்தமற்ற பெயர்கள் நமக்கு அமைந்துவிடுகிறது….
மூன்று “ஐயோ” நகரங்கள்
கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ! …கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய். என்று மூன்று முக்கியமான நகரங்களைக்குறித்து இயேசு தன் பிரசங்கத்தின்போது பரிதவித்தார். ஐயோ! என்று சொன்னது அவர்களில் மனந்திரும்பாத நிலையைக் குறித்த பெரும் வருத்தத்தின் வெளிப்பாடே தவிர அவை அழிந்துபோகவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. அதாவது, இந்த நகரங்களை அவர் சபித்தார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், இந்த ஊர்களை தேவன் அதிகம் நேசித்தார். அவர் தன் சுவிசேஷப் பயணங்களை பொதுவாக, இம்மூன்று ஊர்களைமையமாகக்…