
டீட்ரிச் போன்ஹோஃபர் – சீஷத்துவத்தின் விலை
சென்ற நூற்றாண்டின் முதல் 50 வருடங்கள் பல நாடுகளில் மரணக்களங்களாகத்தான் இருந்தன. குறிப்பாக உலகப் போர்களின் விளைவாக ஐரோப்பா சந்தித்த இழப்புகள் பல இலட்சம். ஆனாலும், அக்காலங்களில் கோழைத்தனமான கொடூரங்களை அரங்கேற்றிய பலர் நடுவில் அவர்களை மிகத்தைரியமாக எதிர்கொண்ட வீரர்களும் தோன்றினர். அவர்களில் ஒருவர் டீட்ரிச் போன்ஹோஃபர் (Dietrich Bonhoeffer) . இவர் ஒரு ஜெர்மானியர், கிறிஸ்தவர். தமிழ்க் கிறிஸ்தவர்கள் அதிகம் அறிந்திராதவர் போன்ஹோஃபர். வரலாற்றின் கருமையான பக்கங்களில் கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக ஒளிவீசும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் இவர்…

டான் ரிச்சர்ட்ஸன் – அறியப்படாத மக்களிடையே அறியப்படாத தேவன்
முன்குறிப்பு: இதுவரை ஒருமுறைகூடக் கேள்விப்பட்டிராத ஜனங்களுக்கான நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது எனக்கு வந்த ஒரு சந்தேகம். அது, மேலும் அறிய சில வருடங்கள் முன்னர் ஒரு தேடலைத் துவக்கியது. உதாரணமாக, எவரும் நுழைய இயலாத அமேஸான் காடுகளுக்குள் வசிக்கும் மக்கள் இயேசு என்கிற பெயரைகூடக் கேள்விப்படாதிருந்தால் அவர்கள் நித்திய வாழ்வு அதோகதிதானா என்கிற கேள்வி!. எனவே, சிலவருடங்களுக்கு முன்னர் அதை அறிந்து ஒரு கட்டுரையாக எழுதவும் செய்தேன். (ஆனால், அதை இங்கு பதிவிடவில்லை). ஆனால், அப்போதைய…

சார்லஸ் (சக்) கோல்சன்: அரசியல் அதிகாரத்திலிருந்து சிறைச்சாலை ஊழியத்திற்கு
சார்ல்ஸ் “சக்” (Chuck) கோல்சன் – தமிழ் கிறிஸ்தவர்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சென்ற நூற்றாண்டு கிறிஸ்தவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க நபர். நாம் அறிந்துகொள்ளவேண்டியவர். அவரது வாழ்க்கை மீட்பின் சாட்சியாகவும், நம்பிக்கையின் செய்தியாகவும் அமைந்த ஒன்று. சுவாரசியமான அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகமே இக்கட்டுரை. சென்ற நூற்றாண்டின் நடுவில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு சக்திவாய்ந்த அரசியல் செயல்பாட்டாளராக இருந்தவர் சார்ல்ஸ் கோல்சன். பிற்காலங்களில் இரட்சிப்புக்குள்ளாக வந்தபின், சிறைக்கைதிகளுக்காகவும் அவர்கள் சார்ந்த விளிம்பு நிலை…