தேவனின் இறையாண்மை: அகிலத்தை ஆளும் ஏகாதிபத்தியம்!
“அவரின்றி ஓரணுவும் அசையாது” – இது நம் முன்னோர் இறைமொழி. இதிலிருக்கும் ஆழமான இறையியல் உண்மைதான் இறைவனுடைய இறையாண்மை (Sovereignty of God)! அதற்கு இன்னும் சிறப்பான பெயர்: ஏகாதிபத்தியம்! இறையாண்மை என்கிற இந்த வார்த்தையை அடிக்கடி அரசியல்வாதிகள் பேசக் கேட்டிருப்பீர்கள். இந்த இறையாண்மை என்றால் என்ன? எளிமையாகச் சொன்னால், இந்தப் பிரபஞ்சத்தின் மீது இறைவனுக்கு இருக்கும் முழுமையான அதிகாரம் மற்றும் கட்டுப்பாடு. தேவன் ஒரு அதிகாரம் மிக்க சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்; எனவே தற்செயலாக எதுவும் இங்கே…
பழைய துருத்தி புதிய ரசம்
ரொம்பநாளாக அதிகம் தியானிக்காமல் விட்டுவைத்திருந்த விஷயம். பழைய மொந்தையில் புதிய கள்ளு என்று நம்மூரில் சொல்லும் ஒரு விஷயத்தை அருள்நாதரும் அந்தக்காலத்திலேயே அந்த ஊர் மக்களுக்கேற்பச் சொல்லி இருக்கிறார். “புதுத் திராட்சரசத்தைப் பழைய துருத்திகளில் வார்த்து வைக்கிறதில்லை; வார்த்து வைத்தால், துருத்திகள் வெடித்துப்போகும், ரசமும் சிந்திப்போகும், துருத்திகளும் கெட்டுப்போகும்; புதுத் திராட்சரசத்தைப் புதிய துருத்திகளில் வார்த்து வைக்கிறார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.” மத்தேயு 9:17-ல் அருள்நாதர் முன்வைக்கும் தர்க்கம் வெறும் தோல்துருத்தி – திராட்சரசத்தைப் பற்றியதல்ல; கிறிஸ்தவனின் ஆவிக்குரிய…
பைபிள் ‘காப்பி’யடிக்கப்பட்ட புத்தகமா?
“நோவாவின் ஜலப்பிரளயமா? அதெல்லாம் சும்மா! எபிரெயர்கள் தங்களுக்கு முன்னிருந்த பாபிலோனியர்களின் புராணங்களை உருவி, பைபிளில் சேர்த்துவிட்டார்கள். மோசே கூட ஹமுராபியின் சட்டங்களைப் பார்த்து காப்பியடித்துதான் பத்துக்கட்டளைகளை எழுதினார்.” — அவ்வப்போது சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் இறைமறுப்பாளர்களும், கிறிஸ்தவத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களும் போகிற போக்கில் வீசும் வார்த்தைகள் இவை. பெரும்பாலும் இதைச் சொல்பவர்கள் கில்காமேஷ் காவியத்தையோ, ஹமுராபியின் சட்டத்தையோ அல்லது பாபிலோனிய படைப்பு காவியமான ‘எனுமா எலிஷ்’ பற்றியோ முழுமையாகப் படித்திருப்பார்கள் என்று நம்ப முகாந்தரமில்லை. ஏன்,…
ஜி.கே செஸ்டர்டன் – இன்றைய குழப்பங்களும், ஒரு பழைய தீர்க்கதரிசியும்
இன்றைய குழப்பங்களும், ஒரு பழைய தீர்க்கதரிசியும் 2026-ம் ஆண்டு, முன்னெப்போதும் இல்லாத அளவு தொழில்நுட்பமும், அதன் வழியாகக் கிடைத்திருக்கும் இணைப்புகளும் தொடர்புகளுமாகத் துவங்கியிருக்கிறது. எவரையும் தொடர்பு கொள்ளலாம், எதிலும் இணைந்துகொள்ளலாம், கற்கலாம், அறியலாம்…! இப்படி நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களும், நம்மைச் சுற்றியிருக்கும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த (AI) தொழில்நுட்பங்களும் வாழ்க்கையை எளிதாக்கியிருக்கலாம். ஆனால், மனித மனம் அமைதியாக இருக்கிறதா? என்றால், நிச்சயமாக முன்புபோல “இல்லை” என்பதே பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும்! சரியாக 120 ஆண்டுகளுக்கு முன்பு…
கோபங்கொண்ட தேவனுடைய கரத்தில் பாவிகள்
கிறிஸ்தவ வரலாற்றிலேயே மறக்கமுடியாத, அஸ்திபாரங்களை அசைத்த பல பிரசங்கங்களில் முதன்மையானது ஜோனாதன் எட்வர்ட்ஸ் (Jonathan Edwards) அவர்கள் 1741-ம் ஆண்டு பிரசங்கித்த “கோபங்கொண்ட கடவுளின் கரத்தில் பாவிகள்” (Sinners in the Hands of an Angry God) என்னும் இச்செய்தி. அமெரிக்காவில் “பெரிய விழிப்புணர்வு” (Great Awakening) நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், என்ஃபீல்ட் (Enfield) என்ற இடத்தில் இது பிரசங்கிக்கப்பட்டது. இச்செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்கள், தேவனுடைய உக்கிரகோபத்தையும், நரகத்தின் பயங்கரத்தையும் ஆவியானவரின் மூலமாக உணர்த்தப்பட்டபோது, தாங்கள் அந்த…
விதியா? அல்லது பிதாவின் சித்தமா? – ஒரு தெளிவு
கேள்வி: “நம் வாழ்வில் நடப்பதெல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு நியதிப்படிதான் (Fate) நடக்கிறது. நமக்கு சாதகமானால் அதை ‘தேவ சித்தம்’ என்கிறோம்; பாதகமானால் ‘சோதனை’ என்று சமாதானம் செய்துகொள்கிறோம். உண்மையில் நாம் ஒரு ‘ஸ்கிரிப்ட்’ (Script) படி நடிக்கும் பொம்மைகளா? கிறிஸ்தவம் சொல்லும் தேவ சித்தம் என்பது வேறு பெயரில் அழைக்கப்படும் விதிதானா?” பதில்: இந்தக் கேள்வி மேலோட்டமாகப் பார்க்கும்போது மிகச் சரியான ஒரு தர்க்கம் போலத் தோன்றும். கிரேக்க தத்துவத்தில் இதை Stoicism என்பார்கள். அதாவது,…
வேதத்துக்கு வெளியே இருந்துவரும் ஆதாரம் – ஜோசிபஸ்
இந்த பூமியில் இயேசுக்கிறிஸ்துவின் வாழ்க்கை நான்கு சுவிசேஷங்களில் நமக்குத் தெரிய வேண்டிய அளவுக்கு தெளிவாகவே எழுதப்பட்டுள்ளது. அதுவும் நான் வெவ்வேறு நபர்களால் நான்கு சுவிசேஷங்களாக – மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்று! . ஆனால், வேதாகமத்தில் இடம்பெறாத ஒரு மனிதர், இயேசு வாழ்ந்த காலத்தையும், அப்போஸ்தலர் காலத்தையும் பற்றி எழுதியிருக்கிறார். அவரைக் குறித்துக் கொஞ்சம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் ஃபிளேவியஸ் ஜோசிபஸ் (Flavius Josephus). பெரும்பாலான தமிழ்க் கிறிஸ்தவர்கள் இவரைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. பொதுவாகவே…
பவுல் கிறிஸ்தவத்தை உருவாக்கினாரா? ஒரு வேத வரலாற்றுப் பார்வை
வேதாகமத்தை ஆழமாக வாசியாத சிலர் மத்தியில், “இயேசு ஒரு நல்ல போதகர், ஆனால் பவுல்தான் இன்று நாம் காணும் கிறிஸ்தவ மதத்தை உருவாக்கினார் (Paul invented Christianity)” என்ற ஒரு கருத்து பரவலாக உண்டு. இயேசு போதித்த எளிய அன்பின் மார்க்கத்தை, பவுல் தனது இறையியல் அறிவாலும் நியாயப்பிரமாணப் பின்னணியாலும் சிக்கலான ஒரு மதமாக மாற்றிவிட்டார் என்பதே இவர்களின் வாதம். இந்தக் கருத்து எவ்வளவு தூரம் வேதத்திற்கும் சரித்திரத்திற்கும் புறம்பானது என்பதை நாம் ஆராய்வது அவசியம். பவுல்…
நாடு இல்லாத ஒரு நாடு
நாடு கடந்த அரசு (Provisional Transitional Government) என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இலங்கைத் தீவில் ஈழம் தனியே மலரவில்லை என்றாலும் 2009ஆம் ஆண்டில் பல நாடுகளிலும் வசிக்கும் ஈழத் தமிழர்கள் மனம் தளராமல் “நாடுகடந்த தமீழ் ஈழம்” என்ற ஒன்றை உருவாக்கினார்கள் அதாவது தங்களுக்கு என்று ஒரு நிலப்பரப்பு நாடாக இல்லாவிட்டாலும், மனங்களில் ஒன்றுபட்டு ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு உருத்திரகுமாரன் என்பவர் தலைமையில் ஒரு செயல்திட்டத்தையும் வகுத்தார்கள். நாடும் அதன் அமைவிடமும் ஒரு நாடு…
ஒரு அதிரடி அற்புதம்
கேள்வி: தேவன் ஒரு பெரிய அற்புதம் செய்து ஏன் அனைவைரையும் கிறிஸ்தவராக மாற்றிவிடக்கூடாது? பூமி இரண்டாகவோ, இல்லையென்றால் இந்துமா சமுத்திரம் வற்றினாலோ, எல்லோரும் அவரை ஏற்றுக் கொண்டு விடுவார்கள் அல்லவா? பதில்: ஆஹா, நல்ல கேள்விதான், ஆனால் கொஞ்சம் நிதானமாகத் தியானித்தால் இது எவ்வளவு ஒரு அபத்தமான சிந்தனை என்பது புரியும். ஆம், இறைவனால் ஒரு மகா பிரமாண்டமான அற்புதத்தை நிகழ்த்த முடியும்தான். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால், ஏன் அவர் என் விருப்பபடி ஒரு…