தவறான போதனைகள்

கேட்டுக்குப் போகும் பாதை விசாலமானது

சங்கிலியால் கட்டு… நரகத்தில் தள்ளு…!

சங்கிலியால் கட்டு… நரகத்தில் தள்ளு…!

பூமியும் வானமண்டலங்களும் (cosmos) பிசாசின் அதிகாரத்துக்குட்பட்டவை. குறிப்பிட்ட காலத்திற்கு அனுமதிக்கப்பட்ட அதிகாரம் அவனுக்கு அங்கே உண்டு. எதிரி ஆதிக்கம் செலுத்தும் நம் பகுதி (Enemy occupied Territory) எனலாம். தேவனுடைய அதிகாரத்துக்குட்பட்டு பிசாசுக்கும், அதேபோல, அவரது சுதந்திரத்தில் பங்குள்ளவர்களாகிய நமக்கும் சில அதிகாரங்களை தேவனே அளித்துள்ளார். அவரவர் அதிகாரத்துக்குட்பட்ட எல்லையில் அவரவருக்கு வல்லமை உண்டு. ஆனால், எல்லை தெரிந்திருப்பது அவசியம். பிசாசு தன் குணக்கேடால் எல்லை மீறுபவன். ஆனால், நமக்கோ எல்லை மீறும் வேலை இல்லை, காரணம்…

விதவித..வினோத.. விபரீத.. வேதப் புறக்கணிப்புகள்

விதவித..வினோத.. விபரீத.. வேதப் புறக்கணிப்புகள்

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19:7 .  ஆனால், காலந்தோறும் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருந்துகொண்டே இருக்கின்றன விதவிதமான வகைவகையாய் வேதப் புறக்கணிப்புகள் இவை. “வேதமே வெளிச்சம்”! ஆனால் அறிந்தோ அறியாமலோ அந்த வெளிச்சத்தை விரும்பாதவர்கள், அல்லது வெளிச்சத்தை மறைப்பவர்கள் எல்லோரும் இருளை விரும்புபவர்கள்தான். இங்கு எழுதப்பட்டிருப்பவை எல்லாம் சில உதாரணங்களே. 1. பழைய ஏற்பாட்டைப் புறக்கணிப்பது, அதில் தீர்க்கதரிசனப் புத்தகங்களைப் புறக்கணிப்பது. சிறு தீர்க்கர்களின் புத்தகங்கள் எதையும்…

கிறிஸ்தவத்தில் சட்டவாதம்: எளிய விளக்கம்

கிறிஸ்தவத்தில் சட்டவாதம்: எளிய விளக்கம்

சமீபத்தில் ஒரு பிரசங்கம். அதில் பேசுபவர் ஒற்றைக்காலில் ‘முட்டிபோட்டு’ தான் ஜெபித்த விதத்தை விளக்கிக்கொண்டிருந்தார். மூட்டு இரண்டும் ‘காப்பு காய்த்து’ விடும்வரை ஜெபம் பண்ணுவாராம். அதாவது கடவுளை ‘இரங்க’ வைத்து இறங்கி வரச் செய்தல்.! இது ஒற்றைக்காலில் கிடுகிடு மலை உச்சியில் நின்று தவம் செய்வது போன்று; அதாவது அவரது கடினமான இந்த முயற்சிகளின் பலனாக, கடவுளின் மனதை இளக வைத்து, குளிரவைத்து – ஐஸ் வைத்து… அவர் விரும்பின காரியத்தை நடத்திவிடும்! தமிழ்க் கிறிஸ்தவத்தில் அதிகமாகப்…

எண்ணங்களை மேம்படுத்துங்கள்

எண்ணங்களை மேம்படுத்துங்கள்

இன்று சில சபைக்குள் பிரசங்கிக்கப்படுகிற சில புத்தகங்கள்: ஆனால், இந்தப் புத்தகங்களின் பெயரையோ, எழுத்தாளர்களையோ குறிப்பிட்டால் மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதெல்லாம், இதையெல்லாம் கர்த்தர் சொன்னார் என்று வேதாமத்தில் சில வசனங்களை நுட்பமாக வியாக்கியானம் செய்துவிட்டால் போதும். சபை குஷியாகிவிடும்! எனவே மேற்சொன்ன புத்தகங்களுக்கு கறுப்பு அட்டைஇட்டு வேதாகமம் என்று பெயரிட்டால் எல்லாம் சுகமே! எதிர்காலம் டாப். ஏனென்றால் இதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.  இதற்காக கீழே உள்ள வசனங்களை மறைக்கவேண்டும். மறக்கடிக்க வேண்டும். அல்லது புறக்கணிக்கிற அளவுக்கு புரட்டவேண்டும்: அன்றியும்…

உனக்கு நரகம் தான்!

உனக்கு நரகம் தான்!

ஆதாமை தன் சாயலாகப் படைத்த தேவன், தன் சாயலின் மேன்மையான சிந்திக்கும் திறனை வைத்தார்.  இந்த சிந்திக்கும் திறன்தான் எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளவும் புறம் தள்ளவும் உதவுகிறது. எதையும் யோசிக்காமல் அப்படியே யோசிக்காமல் ஏற்றுக்கொள்ளும் சமநிலை அற்ற தன்மை நம்மில் இல்லாததற்குக் காரணம் இந்த சிந்திக்கும் திறன் தான். அவர் சமநிலையான தேவன். எதையும் பின்யோசனையின்றி செய்பவரோ, செய்துவிட்டு அதன்பின் அதைக்குறித்து ஆராய்பவரோ அல்ல. மனிதனை அப்படி ஒரு பிறவியாகத்தான் வைத்தார். அவரது சாயல் என்பது…

ஆவியானவரும் ஆவிகளும்

ஆவியானவரும் ஆவிகளும்

கிறிஸ்தவமே ஆவிக்குரியது. தேவனும் ஆவியாயிருக்கிறார் (யோவான் 4:24). நாமும் ஆவிக்குரியவர்கள். ஆனால், ‘ஆவி’ – என்பதைக் குறித்த போதனைகள் மிகவும் தெளிவாகக் கற்றுக்கொள்ளப்படாமல் இருப்பது பலவித வஞ்சனைகளுக்கு நேராகவே பெரும்பாலோனோரை நடத்திச் செல்கிறது. நான் ஆவிக்குறிய சபைக்குச் செல்கிறேன் என்று சொல்லும் – பழம் தின்று கொட்டைபோட்ட கிறிஸ்தவர்களாக தங்களைக் காண்பித்துக் கொள்பவர்களும்கூட, இந்தச் சவாலில் தோற்றுப்போய், ஏமாந்து, ஆட்டம் போடும் ஆவிகளையெல்லாம் பரிசுத்த ஆவியானவர் என்று நம்புவதே நடக்கிறது. ஆட்டம் போடாவிட்டால் ஆவியானவர் அவனில் இல்லை…