
நீங்கள் வீணடித்த வாழ்க்கை
குறிப்பு: பதிவு ஒரு எழுத்தாளரைப் பற்றியது அல்ல. மால்கம் மஃகரிட்ஜ் ஒரு ஆங்கில எழுத்தாளர். கொஞ்சம் நம்ம ஊர் ஆர்.கே.நாராயணன் மாதிரி. மால்கம் ஜாலியாக ஆனால் அதேசமயம் ஆழமாக எழுதுபவர். ஏகப்பட்ட அனுபவங்கள் அவருக்கு. ஆங்கிலேயர். ஆனால், இரஷ்யாவில் கம்யூனிசத்தின் தொடக்க காலங்களில் பிரச்சனைகள் மிகுந்த பகுதிகளில் இருந்திருக்கிறார். உக்ரேனியப் பஞ்சத்தைக் குறித்து ஆராய்ந்து ஆவணப்படுத்தியிருக்கிறார். இந்தியாவிலும் சில காலம் வாழ்ந்தார். மதர் தெரசாவை சந்தித்திருக்கிறார். அவருடனும் நல்ல நட்பு இருந்தது. மஃகரிட்ஜ் சந்தித்த எக்கச்சக்கமான நபர்கள்,…

தேவ பெலன்
‘ பாவியாகிய எனக்காக கிறிஸ்து சிலுவையில் மரித்தார்’ என்பதை விசுவாசித்து அவரை ஏற்றுக்கொள்ளும் எவரும் இரட்சிப்பு என்கிற சுதந்தரமாகிய பலனை அடைகிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கையில் பெற்ற பலன் அத்துடன் நம் வாழ்வில் நின்றுவிடுவதில்லை. அது தொடர்ச்சியாக வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வை வாழ பெலனும் செய்கிறது. “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது” என்று கொரிந்தியருக்கு எழுதும் முதலாம் கடிதத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு முக்கியமான திறவுகோலை விட்டுச் சென்றிருக்கிறார். இதை, ‘இரட்சிக்கப்பட்ட…

உணர்ச்சிகளில் மாற்றம்
கோபம், எரிச்சல், பயம், வருத்தம் போன்றவை எல்லாம் “அகிறிஸ்தவ” உணர்வுகள் என்று நினைத்தால் அது தவறு. உண்மையில் மனிதன் விழுந்ததில் இந்த சுபாவங்கள் எல்லாம் இடப்பெயர்ச்சி அடைந்துவிட்டன. விளைவு கோபம் மூர்க்கமாக, பயம் திகிலாக, வருத்தம் என்பது அவநம்பிக்கையாக – மனக்குழப்பமாக என்று சுபாவங்களின் சுபாவங்களே இருதயத்தில் அதனதன் இருப்பிடத்தைவிட்டு விலகிவிடுகின்றன. கோபம் கொண்டால் உடனே பாவம் செய்தல் அதன் விளைவுதான். அநீதியின்பால் கோபம் கொள்ளல், அநியாயத்தின்மேல் எரிச்சல் அடைதல், தேவனுக்குப் பயப்படுதல், பிறர் வருத்தம் கண்டு…

நாம் நல்லவர்களாக இருந்தால் போதுமா?
நல்லவனுக்கும், கிறிஸ்தவனுக்கும் ஒரு பெரும் வேறுபாடு உண்டு. நல்லவர்கள் முடிந்தவரை நல்லவர்களாக வாழ்ந்து, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் தொல்லை தராமல் வாழ நினைக்கிறவர்கள். அவர்களே கடவுளை நம்புகிறவர்களாக இருந்தால், நல்லவர்களாக இருந்து கடவுளது நேசத்தைப் பெற முயற்சிப்பார்கள். தாங்கள் நல்லவர்களாக இருப்பதும், மற்ற நல்லவர்கள் தங்களை அங்கீகரிக்கவேண்டும் என்பதிலும் மிக கவனமாக இருப்பவர்கள்இவர்கள். ஆனால், கிறிஸ்தவன் அப்படி இல்லை. அவனிடம் வெளிப்படும் நன்மை – அது அவனுக்குள் வசிக்கும் கிறிஸ்துவிடம் இருந்து வெளிப்படுவதாக நம்புபவன். தான் நல்லவனாக…

எண்ணங்களை மேம்படுத்துங்கள்
இன்று சில சபைக்குள் பிரசங்கிக்கப்படுகிற சில புத்தகங்கள்: ஆனால், இந்தப் புத்தகங்களின் பெயரையோ, எழுத்தாளர்களையோ குறிப்பிட்டால் மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதெல்லாம், இதையெல்லாம் கர்த்தர் சொன்னார் என்று வேதாமத்தில் சில வசனங்களை நுட்பமாக வியாக்கியானம் செய்துவிட்டால் போதும். சபை குஷியாகிவிடும்! எனவே மேற்சொன்ன புத்தகங்களுக்கு கறுப்பு அட்டைஇட்டு வேதாகமம் என்று பெயரிட்டால் எல்லாம் சுகமே! எதிர்காலம் டாப். ஏனென்றால் இதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். இதற்காக கீழே உள்ள வசனங்களை மறைக்கவேண்டும். மறக்கடிக்க வேண்டும். அல்லது புறக்கணிக்கிற அளவுக்கு புரட்டவேண்டும்: அன்றியும்…

நான் யார்?
வேலைக்கான இண்டர்வியூ சென்றிருக்கிறீர்களா? அங்கு கேட்கப்படும் முக்கியமான கேள்வி – ‘உங்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்’ என்பார்கள். அதுவரை யோசிக்கவில்லை என்றால் திகிரென்று கூட இருக்கும். “நா…நா.. வந்து, என் பேரு..” என்று நாக்குக் குழறுவதில் இருந்து, இல்லாத பொல்லாத விஷயங்களைக்கூட நம்மைப் பற்றி என்று சொல்லக்கூடிய இடம் இண்டர்வியூக்கள். நம்முடைய அடையாளங்கள் பொதுவாக நம்மைப் பற்றிய அபிப்பிராயங்கள் மேல்தான் கட்டப்படுகின்றன. நம்மைப் பற்றி நாம் அறிந்திருப்பதற்கும், அடுத்தவர் அறிந்திருப்பதற்குமே கூடப் பல முரண்கள் இருக்கும் என்பதால் நம்முடைய…

நீங்கள் vs நீங்கள்
ஒரு கிறிஸ்தவனின் ஆவிக்குரிய நிலை இன்னொரு கிறிஸ்தவனின் ஆவிக்குரிய நிலையுடன் ஒப்பிடப்பட்டு அளவிடப்படுவதில்லை. மாறாக ‘இன்றைய நீங்கள்’ நேற்றைய நீங்களைவிட எப்படி வித்தியாசப்படுகிறீர்கள் என்பதில்தான் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள இயலும். இந்த மதிப்பீடும்கூட இன்று கிறிஸ்துவுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நேற்று எப்படி ‘அவருக்குள்’ இருந்தீர்கள்? என்று அவரை அடிப்படையாகக் கொண்டதுதான்!. 2025ல் எப்படி கிறிஸ்துவுடனான உங்கள் உறவு எப்படி?, என்பதை உங்கள் 2024டன் எப்படி இருந்தீர்கள்; அல்லது இன்னும் கொஞ்சம் போய், தேவ உறவுக்குள் வரும்முன் இரட்சிப்பை…

மாற்றம்.. உருமாற்றம்
80’ களின் பின்பகுதி மற்றும் 90’ களின் ஆரம்பம் அது. மக்கள் ரிலாக்ஸ்டாக இருந்த கடைசி பத்து வருடங்கள். எல்லோருக்கும் 24 மணி நேரம் போதுமானதாக இருந்தது. பாலங்களிலும், கிரவுண்டுகளிலும் சைக்கிள் கேரியர்களிலும் வாலிபர்கள் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். பெரியவர்கள் மர்ஃபி ரிச்சர்ட்ஸில் இருந்து கறுப்பு-வெள்ளை சாலிடர், டயனராவுக்கு மாறிக்கொண்டும், பெண்கள் இன்னமும் தங்கள் வீட்டு முற்றங்களில், பக்கத்துவீட்டுப் பெண்களுடன் ‘முந்தாநாள்’ மேட்னிஷோ பேசிக்கொண்டும் மாலைகளை நிதானமாக ரசித்துக்கொண்டிருந்தனர். ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்துக் கவனித் ரசித்துப்…