கிறிஸ்தவப் பார்வை

கிறிஸ்துவின் கண்கொண்டு பார்த்தல்

கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்…!

கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்…!

இயேசு நினைத்தால் “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்று ஒற்றை வாக்கியத்திலோ, “எல்லோர பாவங்களையும் நான் மன்னித்துவிட்டேன்  வாங்க என்னோடு பரலோகத்துக்கு” என்றோ  சொல்லி நம் எல்லோரையுமே மன்னித்திருக்கலாமே? அதை அவர் இறைவனாக இருந்துகொண்டே செய்திருக்கலாமே? இதற்காக இந்த பூமியில் அவதரித்ததெல்லாம் அவசியமா? இப்படியெல்லாம் சிந்தித்தது உண்டா?  இல்லையென்றால் இப்போது சிந்தித்துவிடலாம். அப்படிச் செய்ய அவருக்கு வல்லமை உண்டு தான். ஆனாலும், அப்படிச் செய்யாமல், இன்னும் சிறப்பான, நியாமான முறையில் செய்வதுதான் அவருக்கு அது அவசியமாகத் தோன்றியது! காரணம்…

உனக்கு நரகம் தான்!

உனக்கு நரகம் தான்!

ஆதாமை தன் சாயலாகப் படைத்த தேவன், தன் சாயலின் மேன்மையான சிந்திக்கும் திறனை வைத்தார்.  இந்த சிந்திக்கும் திறன்தான் எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளவும் புறம் தள்ளவும் உதவுகிறது. எதையும் யோசிக்காமல் அப்படியே யோசிக்காமல் ஏற்றுக்கொள்ளும் சமநிலை அற்ற தன்மை நம்மில் இல்லாததற்குக் காரணம் இந்த சிந்திக்கும் திறன் தான். அவர் சமநிலையான தேவன். எதையும் பின்யோசனையின்றி செய்பவரோ, செய்துவிட்டு அதன்பின் அதைக்குறித்து ஆராய்பவரோ அல்ல. மனிதனை அப்படி ஒரு பிறவியாகத்தான் வைத்தார். அவரது சாயல் என்பது…

வேற யாராவது இருக்கீங்களா?

வேற யாராவது இருக்கீங்களா?

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1: 27 தேவன் மனிதர்களைப் படைத்ததுபோல வேறெங்கேனும் படைத்திருப்பாரா? இங்கு வேறு யாரேனும் உள்ளனரா? பூமியைப் படைத்து அதன் மண்ணில் இருந்து மனிதனைப் படைத்தவருக்கு வேறு எங்கேனும் அங்கிருக்கும் மண்ணை/தனிமங்களைக் கொண்டு அங்கே உயிரினங்களைப் படைத்திருப்பாரா? அதாவது ஏலியன்களை? 1950 ஆண்டு ஒரு சிறுகூட்டம் இயற்பியலாளர்கள் கூடி UFO (Unidentified Flying Object) என்கிற வானத்தில் அவ்வப்போது தெரியும்…

முரட்டுப் பக்தர்கள்

முரட்டுப் பக்தர்கள்

ஆங்கிலத்தில் லீகலிஸம் (Legalism) என்கிற வார்த்தை உண்டு. கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமான வார்த்தை இது. இதன் அர்த்தம் “கடவுள் இதைத்தான் செய்யச் சொல்கிறார் என்று அவர் சொல்லாத ஒன்றைச் செய்யச் சொன்னதாக நினைத்துக்கொண்டிருப்பது”. தமிழில் இதைச் சட்டவாதம் என்று சொல்லலாம். “இதைச் செய்தால் சரி, இதைச் செய்யாவிட்டால் உன் அபிஷேகம் அம்பேல். இப்படிச் செய்தால் இரட்சிப்பு போச்சி!” என்று சொந்த விருப்பங்களை வேதம் காட்டும் ஒழுக்க நெறிகளாகத் திணிப்பதே இந்தச் சட்டவாதம். பெந்தேகோஸ்தே சபைகளில்தான் இதை அதிகமாக…

எது கிறிஸ்தவ நாடு?


எது கிறிஸ்தவ நாடு?


கிறிஸ்தவநாடு என்று இவ்வுலகில் எதுவும் கிடையாது. அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரவேல் உட்பட. அவற்றைக் கிறிஸ்தவநாடுகள் என்று சொல்வது இந்தியா மதநல்லிணக்க நாடு, இங்கு அனைவரும் சமம் என்று சொல்வதைப் போன்ற நகைச்சுவை. பொதுவிலும், அரசு ஏடுகளிலும், கல்வெட்டுகளிலும் தாராளமாக எழுதி இப்படி அறிவித்துக் கொள்ளலாம். ஆனால், நம் இந்தியா இன்று எப்படி இருக்கிறது என்பதை அறியாதோர் இருந்தால் அவர் பல வருடங்களாக நினைவின்றி இருந்திருக்கவேண்டும். எப்படித் தம்மைக் கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்வோரெல்லாம் கிறிஸ்தவர் இல்லையோ அதேபோல் கிறிஸ்தவநாடு…

அடுத்தவரை நியாயம் தீர்க்கலாமா?

அடுத்தவரை நியாயம் தீர்க்கலாமா?

உத்திரம் உங்கள் கண்களிலேயே இருந்ததென்றால் அது இயலாது. ஆகாது. அதையே இயேசு சொன்னார். முதலில் தன்னைச் சீர்செய்த அவசியம் நிச்சயம் தேவை. ஆனால், நியாயமே தீர்க்கக்கூடாது; குற்றப்படுத்தவே கூடாது என்பது இதற்குப் பொருள் அல்ல! “என் கண்களில் ஒரு பெரிய உத்திரமே இருந்ததப்பா, நான் அதையே எடுத்துப்போட என்னுள் வாழும் பரிசுத்த ஆவியானவர் உதவி செய்தார்; உன்னில் இருக்கும் துரும்ப அவருக்கு எம்மாத்திரம். நீ அதை உணர்ந்தால், அதை எடுத்துப்போடவது எளிது. உன் கண்ணில் இருக்கும் துரும்பை…

ஏரியாமாரி…

ஏரியாமாரி…

ஒரு புது ஊருக்கு மாறி செல்பவர்கள் அல்லது ஏரியா மாறிச் செல்பவர்கள், “ நல்ல ஏரியாவுல வீடு பாக்கணும், சுத்தி இருக்கிற ஆள்கள் வீடுகள் நல்லா இருக்கணும், சொந்த பந்தங்கள் இருக்குற ஏரியாண்ணா சிறப்பு!” என்றெல்லாம் பார்த்துதான் வீடு குடிபுகுவது வழக்கம். அதுவும் வீடு இடம் வாங்கவேண்டும் என்றால் சாதிசனமெல்லாம் பார்க்காமல் ஒரு ஏரியாவுக்குள் செல்லமாட்டர். ஏழைகள் குடிசைகள் வாழும் பகுதி என்றால், அந்த ஏரியாவே வேண்டாம் என்றுதான் ஒதுங்குபவர்கள் தாம் நாம் அனைவரும். ஆனால், இதற்கு…

பரலோகம் நுழையத் தகுதி

பரலோகம் நுழையத் தகுதி

இரட்சிக்கப்பட்ட உடன் ஒருவர் பரலோகம் போய்விடுவதில்லை! ஏன்? அப்படிச் சென்றால் ஒரு மணி நேரம்கூட அவரால் அங்கு தாக்குப்பிடிக்கமுடியாது. கற்றுக்கொண்ட, கற்றவைகளில் நிச்சயித்த, நிலைத்த மற்றும் முற்றும்முடிய இரட்சிக்கப்பட்ட நிலைகளைக் கற்றுத்தேற இவ்வுலகே சரியான இடம்.  முன்பு சரியற்ற இடமாக இருந்த அதே இடம் இன்று ஒரு பயிற்சிக்களமாக மாற்றப்படுகிறது. இதை அறியாமல், எப்படியோ பரலோகம் சென்று இந்த வண்டி சேர்ந்துவிடும் என்று கனவுகண்டு கொண்டிருந்தால் வண்டி பஞ்சராகிப் பரிதவிக்கும் அபாயம் உண்டு. மாறாக இவ்வுலக வாழ்வின்…

இயேசுவா? இயேசு கிறிஸ்துவா?

இயேசுவா? இயேசு கிறிஸ்துவா?

கிறிஸ்து இல்லாத இயேசு வேறு ஒரு இயேசு. நாம் சபைகளில் போதிக்கவேண்டிய இயேசு, வெறும் இயேசு அல்ல! — இயேசு கிறிஸ்து!!!