Apologetics என்கிற காப்புரை அல்லது காப்புவாதம்
Apologetics என்கிற காப்புவாதம் தமிழ் கிறிஸ்தவத்தில் குறைவு. காரணம் இங்கு கிறிஸ்தவத்தை எதிர்ப்பவர்கள் வேதத்தைக் கற்று அதில் குற்றம் கண்டறிந்தபின் அதைபற்றிக் கேள்வி கேட்பவர் அல்லர். வெறுமனே “என் மத உணர்வைப் புண்படுத்திவிட்டாய்” என்று கிறிஸதவத்தை எதிர்ப்பவர்கள்தான் அதிகம். உண்மையில், வேதத்தைக் கற்று அதன்பின் நம்மைக் கேள்விகேட்டால் அதற்குப் பதில் அளிக்க நிச்சயம் நமக்குப் பயிற்சி தேவை. இதில் நம் இறைஞானமும் வளரும். இது வரை கடினமான கேள்விகளைக் கேட்கும் ஒரு சூழல் இங்கு இல்லை. (இஸ்லாமியர்…
சிலுவைப் போர் சரியா?
கேள்வி: கிறிஸ்தவத்தின் பேரால் உலகில் நடைபெற்ற படுகொலைகளைப் (உம்: சிலுவைப் போர்) பற்றி என்ன சொல்கிறீர்கள்? பதில்: கிறிஸ்தவத்தின் பெயரால் யார்வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். “கிறிஸ்து”வின் பெயரிலும்கூட தாங்கள் விரும்பியதையெல்லாம் வருந்திச் செய்யலாம். அது போராக இருந்தாலும் சரி. ஊழியம் என்று நாம் நினைத்துக் கொண்டு செய்வதாயினும் சரி!. ஆனால், எதைச் செய்தாலும் கிறிஸ்துவுக்கு மகிமையைச் (அதாவது அவருக்குப் புகழை) சேர்ப்பதுவும், அதுவும் அவர் காட்டிய வழியில் அவர் விரும்பும் வண்ணமாகச் செய்வதுமே கிறிஸ்தவனின் செயல்பாடாக…
மத உணர்வுகளைப் புண்படுத்தாதீர்
ஒரு கிறிஸ்தவனாக மத உணர்வு புண்படுத்தப்பட்டால், அதை எப்படி எதிர்கொள்வது? கிறிஸ்தவ மத உணர்வு என்பதுதான் என்ன? இந்தக் கேள்விக்கு பதில் தெரியுமுன் மத உணர்வு என்பதை வேதம் எப்படிப் பார்க்கிறது என்பதை அறிந்துகொள்ளவேண்டும். பொதுவாக மத உணர்வு என்பது ஒரு மதத்தைப் பின்பற்றுவோரின் இறைநம்பிக்கை, பின்பற்றும் வழிமுறைகள், மதக் கோட்பாடுகள் மற்றும் கடவுளைப் பற்றிய எண்ணங்கள். இந்த எண்ணக்களைப் பரிகசிப்பதை, அல்லது தவறாகத் திரித்துப் பேசுவது அந்த மதத்தைப் பின்பற்றுவோரின் மனதைக் காயப்படுத்தினால் அதுவே மத…
கிறிஸ்தவத்தில் சட்டவாதம்: எளிய விளக்கம்
சமீபத்தில் ஒரு பிரசங்கம். அதில் பேசுபவர் ஒற்றைக்காலில் ‘முட்டிபோட்டு’ தான் ஜெபித்த விதத்தை விளக்கிக்கொண்டிருந்தார். மூட்டு இரண்டும் ‘காப்பு காய்த்து’ விடும்வரை ஜெபம் பண்ணுவாராம். அதாவது கடவுளை ‘இரங்க’ வைத்து இறங்கி வரச் செய்தல்.! இது ஒற்றைக்காலில் கிடுகிடு மலை உச்சியில் நின்று தவம் செய்வது போன்று; அதாவது அவரது கடினமான இந்த முயற்சிகளின் பலனாக, கடவுளின் மனதை இளக வைத்து, குளிரவைத்து – ஐஸ் வைத்து… அவர் விரும்பின காரியத்தை நடத்திவிடும்! தமிழ்க் கிறிஸ்தவத்தில் அதிகமாகப்…
கெட்ட நல்லவைகள்
நமக்குள் இருக்கும் கெட்ட விஷயங்கள் பளிச்சென்று தெரிந்துவிடும். ஆனால், பல இடங்களில் நல்ல விஷயங்கள், நாம் அறியாத வகையில் நமக்கு இடைஞ்சலாக இருக்கும்! இதற்கு சுயபரிசோதனை அவசியம். ஏனென்றால், நல்ல பழக்கவழக்கங்கள் என்பவை இயல்பில் நல்லவைகளாக இருப்பதால், நம் இருதயம் அதில் மகிழந்து நின்றுவிடும். எனவே, ஒரு கட்டத்தில் நல்லபழக்க வழக்கங்களே நம்மை நல்லவர்களாக ஆக்கிவைத்திருப்பதாக நினைக்கத் துவங்குவோம். விளைவு, நம்மிடம் நம்மைபோல இல்லாதவர்களை, நல்லவர்கள் அல்ல என்றும் கருதம் அபாயம் உண்டு. கிறிஸ்தவர்களாக நாம்…
லாஜிக் இடிக்கிறது
சமீபத்தில் ஒரு மேடையில் லாஜிக்கலான உளறல் ஒன்றை ஒருவர் சொன்னார்: “சினிமாவில் நடிப்பவர்களையே தேவன் கோடீஸ்வர்களாக ஆக்கி இருக்கிறார்கள் என்றால் உன்னை பெருங்கோடீஸ்வரனாக மாற்ற மாட்டாரா?” என்று. கீழே கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு, அவர் துள்ளித் துடித்து கத்திப் பேசியவுடன், “ஆமா..சரிதானே..” என்றுதான் தோன்றி இருக்கும். வெறும் லாஜிக்கலாக இருப்பதைச் சரியென்று நம்புவதால் வரும் அபாயங்கள் இவை. ஆனால், வேதத்தில் பல விஷயங்கள் லாஜிக்கலாகவே (தர்க்கரீதியாகத்) தோன்றாது. உதாரணமாக, இயேசு முழு மனிதனாகவும் அதே சமயம், முழுக் கடவுளாகவும் இருந்ததாகப்…
சுய முன்னேற்றம்! புத்தகங்கள் வழியே?
ஒரு காலத்தில் எம் எஸ் உதயமூர்த்தி புத்தகங்கள் சிலவற்றை நான் வாசித்திருக்கிறேன். குறிப்பாக ‘உன்னால் முடியும் தம்பி’. ஆங்கிலத்தில் ஏராளம் உண்டு. தற்காலத்தில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகக் கண்காட்சி கண்காட்சியாக அவை அலைவதையும், அவற்றை வாங்கி ‘முன்னேறிவிட’ மக்கள் கூட்டம் அலைமோதுவதையும் காணலாம். ஆனால், ஒரு கிறிஸ்தவராக இந்த சுய முன்னேற்றப்புத்தகங்களை வாசிக்கலாமா, இல்லை தேவையில்லையா என்று கேட்டால், கிரேங்கர் ஸ்மித் தரும் ஒரு பதிலையே தரவிரும்புகிறேன். “சுய முன்னேற்றப் புத்தகங்கள் எல்லாம் பிரச்சனை வெளியில்…
நான் யார்?
வேலைக்கான இண்டர்வியூ சென்றிருக்கிறீர்களா? அங்கு கேட்கப்படும் முக்கியமான கேள்வி – ‘உங்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்’ என்பார்கள். அதுவரை யோசிக்கவில்லை என்றால் திகிரென்று கூட இருக்கும். “நா…நா.. வந்து, என் பேரு..” என்று நாக்குக் குழறுவதில் இருந்து, இல்லாத பொல்லாத விஷயங்களைக்கூட நம்மைப் பற்றி என்று சொல்லக்கூடிய இடம் இண்டர்வியூக்கள். நம்முடைய அடையாளங்கள் பொதுவாக நம்மைப் பற்றிய அபிப்பிராயங்கள் மேல்தான் கட்டப்படுகின்றன. நம்மைப் பற்றி நாம் அறிந்திருப்பதற்கும், அடுத்தவர் அறிந்திருப்பதற்குமே கூடப் பல முரண்கள் இருக்கும் என்பதால் நம்முடைய…
தேவன் தன் முடிவுகளை மாற்றிக்கொள்பவரா?
நம்முடைய மனம் (வாக்குறுதி, பேச்சு) மாறுவதற்கும் தேவன் தன் மனதை மாற்றிக்கொண்டார் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. (அல்லது சம்பந்தமே இல்லை). நிச்சயம், நம்மைப்போல ஒன்றைச் செய்ய நினைத்து, தன் திட்டதில் ஏதோ குறையைப் பாதிவழியில் கண்டுபிடித்ததால் மாற்றிக்கொண்டார் என்று ஐயப்பட வழியே இல்லை. காரணம், அப்படி இருந்தால் அவர் இறைவன் அல்ல. அப்படி அவர் முடிவுகளை மாற்றிக்கொண்டேயிருப்பாரானால், நம்மைபோல அவரும் குழப்பமானவராகத்தான் இருப்பார் என்று கருதவே வாய்ப்புண்டு. மாறாக நாம் அவரை விசுவாசிக்கக் காரணமே, அவர் என்றும்…
எதெல்லாம் சரியாக இருக்க வேண்டுமோ…அதெல்லாம்
முன்பு ஒரு பதிவில் கோல்டிலாக்ஸ் என்கிற வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தேன். இதற்குச் சரியான ஒற்றைப் பதம் தமிழில் என்னவென்று தெரியவில்லை. இதைச் “சரியான, பொருத்தமான” என்று சொல்லலாம். “கோல்டிலாக்ஸ்” என்ற இந்தப் பதம், “கோல்டிலாக்சும் மூன்று கரடிகளும்” என்ற சிறுவர் கற்பனைக் கதையிலிருந்து வந்த ஒரு சொல். (ஆங்கிலத்தில் இதுபோன்று பல வார்த்தைகள் புதுசு புதுசாகத் தோன்றுவதுண்டு). இக்கதையில் வரும் கோல்டிலாக்ஸ் ஒரு சிறுமி. அவள் அங்கு கஞ்சி நிரப்பப்பட்ட கோப்பைகளில் ஒன்றை “மிகவும் சூடாக”, இன்னொன்றை “மிகவும்…