இறையியல்

இறைவனை அறிகிற அறிவு – ஒவ்வொரு கிறிஸ்தவருக்குமானது.

பதினோராம் மணிக் கிருபை!

பதினோராம் மணிக் கிருபை!

அதிகாலை வேலைக்கு வந்தவர்களுக்கு எஜமானன் கொஞ்சம் அதிகம் கொடுத்திருந்தால் என்ன? எல்லாருக்கும் ஒரேபணம் கூலி என்பது நியாயமாகப்படவில்லையே என்று விஷயம் புரியாத நாட்களில் நான் நினைத்து உண்டு. அந்தப் பகுதியை தியானித்திருப்பீர்கள் என்றால் (மத்தேயு 20) நீங்களும் அப்படி உணர்ந்திருக்கலாம். காரணம், நாம் எல்லாருமே நம்மை அதிகாலையில் இருந்து வேலை செய்பவர்களாகக் கருதிக்கொள்ளவதுதான். இங்குதான் இறைநீதியும் நம் மனதில் தோன்றும் நியாயங்களும் ஒன்றல்ல என்பதைக் கற்றுக்கொள்ள முடியும். பகலில் உஷ்ணம் இருக்கும், கஷ்டம் இருக்கும், வெயில் இருக்கும்…

லாஜிக் இடிக்கிறது

லாஜிக் இடிக்கிறது

சமீபத்தில் ஒரு மேடையில் லாஜிக்கலான உளறல் ஒன்றை ஒருவர் சொன்னார்: “சினிமாவில் நடிப்பவர்களையே தேவன் கோடீஸ்வர்களாக ஆக்கி இருக்கிறார்கள் என்றால் உன்னை பெருங்கோடீஸ்வரனாக மாற்ற மாட்டாரா?” என்று. கீழே கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு, அவர் துள்ளித் துடித்து கத்திப் பேசியவுடன், “ஆமா..சரிதானே..” என்றுதான் தோன்றி இருக்கும். வெறும் லாஜிக்கலாக இருப்பதைச் சரியென்று நம்புவதால் வரும் அபாயங்கள் இவை. ஆனால், வேதத்தில் பல விஷயங்கள் லாஜிக்கலாகவே (தர்க்கரீதியாகத்) தோன்றாது. உதாரணமாக, இயேசு முழு மனிதனாகவும் அதே சமயம், முழுக் கடவுளாகவும் இருந்ததாகப்…

தேவன் தன் முடிவுகளை மாற்றிக்கொள்பவரா?

தேவன் தன் முடிவுகளை மாற்றிக்கொள்பவரா?

நம்முடைய மனம் (வாக்குறுதி, பேச்சு) மாறுவதற்கும் தேவன் தன் மனதை மாற்றிக்கொண்டார் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. (அல்லது சம்பந்தமே இல்லை). நிச்சயம், நம்மைப்போல ஒன்றைச் செய்ய நினைத்து, தன் திட்டதில் ஏதோ குறையைப் பாதிவழியில் கண்டுபிடித்ததால் மாற்றிக்கொண்டார் என்று ஐயப்பட வழியே இல்லை. காரணம், அப்படி இருந்தால் அவர் இறைவன் அல்ல. அப்படி அவர் முடிவுகளை மாற்றிக்கொண்டேயிருப்பாரானால், நம்மைபோல அவரும் குழப்பமானவராகத்தான் இருப்பார் என்று கருதவே வாய்ப்புண்டு. மாறாக நாம் அவரை விசுவாசிக்கக் காரணமே, அவர் என்றும்…

எதெல்லாம் சரியாக இருக்க வேண்டுமோ…அதெல்லாம்

எதெல்லாம் சரியாக இருக்க வேண்டுமோ…அதெல்லாம்

முன்பு ஒரு பதிவில் கோல்டிலாக்ஸ் என்கிற வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தேன். இதற்குச் சரியான ஒற்றைப் பதம் தமிழில் என்னவென்று தெரியவில்லை. இதைச் “சரியான, பொருத்தமான” என்று சொல்லலாம்.  “கோல்டிலாக்ஸ்” என்ற இந்தப் பதம்,  “கோல்டிலாக்சும் மூன்று கரடிகளும்” என்ற சிறுவர் கற்பனைக் கதையிலிருந்து வந்த ஒரு சொல். (ஆங்கிலத்தில் இதுபோன்று பல வார்த்தைகள் புதுசு புதுசாகத் தோன்றுவதுண்டு). இக்கதையில் வரும் கோல்டிலாக்ஸ் ஒரு சிறுமி. அவள் அங்கு கஞ்சி நிரப்பப்பட்ட கோப்பைகளில் ஒன்றை “மிகவும் சூடாக”, இன்னொன்றை “மிகவும்…

கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்…!

கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்…!

இயேசு நினைத்தால் “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்று ஒற்றை வாக்கியத்திலோ, “எல்லோர பாவங்களையும் நான் மன்னித்துவிட்டேன்  வாங்க என்னோடு பரலோகத்துக்கு” என்றோ  சொல்லி நம் எல்லோரையுமே மன்னித்திருக்கலாமே? அதை அவர் இறைவனாக இருந்துகொண்டே செய்திருக்கலாமே? இதற்காக இந்த பூமியில் அவதரித்ததெல்லாம் அவசியமா? இப்படியெல்லாம் சிந்தித்தது உண்டா?  இல்லையென்றால் இப்போது சிந்தித்துவிடலாம். அப்படிச் செய்ய அவருக்கு வல்லமை உண்டு தான். ஆனாலும், அப்படிச் செய்யாமல், இன்னும் சிறப்பான, நியாமான முறையில் செய்வதுதான் அவருக்கு அது அவசியமாகத் தோன்றியது! காரணம்…

இந்த நம்பிக்கை!


இந்த நம்பிக்கை!


கிறிஸ்து உயிர்தெழாவிட்டால் எங்கள் நம்பிக்கை வீண். நாங்கள் உரைக்கும் எந்தவார்த்தையும் வீண் என்கிறார் பவுல். அவர் உயிர்தெழுந்திருக்காவிட்டால், கிறிஸ்தவமும் வீண். கிறிஸ்தவர்களும் வீண். நாமெல்லாம் வெறும் முட்டாள்களாக இருந்திருப்போம். ஆனால், இது எப்படிப்பட்ட நம்பிக்கை? 2000த்துச் சொச்சம் வருடங்களாக, தலைமுறை தலைமுறைகளாக வரும் இந்த நம்பிக்கை வெறும் முரட்டுப் பக்தர்களால் பின்பற்றப்படும் குருட்டு நம்பிக்கை அல்ல. மாறாக, பெரும் சவால்களையும், எதிர்விவாதங்களையும் முறியடித்துத் தாங்கி வந்த நம்பிக்கை. கண்கள் திறக்கப்பட்டவர்களின் நம்பிக்கை. படிப்பறிவற்ற காட்டுமிராண்டிகளால் ஏற்கப்பட்ட நம்பிக்கைகள்…

இரத்தம் ஏன்? பலி ஏன்?

இரத்தம் ஏன்? பலி ஏன்?

இயேசு சிலுவையில் தொங்கி மரித்தார். மரணம் கொடூரமாக, இரத்தமும் நீருமாக அனேகமாய் உடலில் இருந்த அனைத்து இரத்தமும் (தோராயமாக ஐந்து லிட்டர்) சிந்த மரித்தார். இப்படிப் பட்ட மரணம் எல்லோருக்கும் நடப்பதில்லை. அரிதினும் அரிதான ஒரு மரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் ஏன் இப்படிப்பட்ட ஒரு மரணத்தை அதுவும் இரத்தத்தை மையமாகக் கொண்ட – இரத்தமயமான – ஒரு மரணத்தைத் ஏன் தேர்ந்தெடுத்திருக் வேண்டும்? அதில், இரத்தத்தின் முக்கியத்துவம் என்ன? அவர் இரத்தத்தால் கழுவப்பட்ட ஒவ்வொருவரும்…

இயேசுவா? இயேசு கிறிஸ்துவா?

இயேசுவா? இயேசு கிறிஸ்துவா?

கிறிஸ்து இல்லாத இயேசு வேறு ஒரு இயேசு. நாம் சபைகளில் போதிக்கவேண்டிய இயேசு, வெறும் இயேசு அல்ல! — இயேசு கிறிஸ்து!!!