
எளிய ஜெபம்
ஒரு பொடியன் மூலையில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு “ABECDE…” என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் அம்மா வியப்புடன் அவனிடம் “தம்பீ… நீ என்ன செய்யுதே?” என்றார்கள். அதற்கு அவன் “நா ஜெவம் பண்ணுதேன்…” என்றான். “ஓ, ஆனா, நீ ABCD..ந்னுல்ல சொல்லிக்கிட்டு இருக்கிறமாதிரித் தெரியுது” “ஆமாம்மா…நீங்க ஜெவம் பண்ணச் சொன்னீங்க. எனக்கு நீங்க சொல்லித்தந்த ஜெபம் மறந்திருச்சி…அதுனால, ஆண்டவரே எனக்கு ஜெபிக்கதெரியாது… நா ABCD ஃபுல்லாச் சொல்றேன். அந்த எழுத்துக்களை வச்சி நீங்களே ஜெபம் பண்ணீக்கோங்க என்று…

மகிமை…மகிமை…மகிமை
முன்குறிப்பு: கட்டுரையின் பின்குறிப்பை வாசித்து வந்தால் நன்றாக இருக்கும். சில வார்த்தைகளை அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்போம்; அதன் ஆழம் தெரியாவிட்டாலும். கிறிஸ்தவத்தில் அப்படி ஒரு வார்த்தை – மகிமை!. அதாவது தேவனுடைய மகிமை. இதுபற்றி விளக்கமான போதனைகளும் நான் அதிகம் கேட்டதில்லை. அதற்கு முக்கியமான காரணம் இந்த மகிமை என்கிற வார்த்தையை விளக்குவது கடினம் என்பதாக இருக்கலாம். ஆனால், நீங்கள் கேட்டிருப்பீர்களானால், தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். 🙂 தேவ மகிமை என்பது அவருடைய பரிபூரணத்தின், அவருடைய தெய்வீக…

இப்படிக்கு பிசாசு
‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பது தெரியும். ஆனால், பிசாசு கடிதம் எழுதுவது? அதுவும் தன் மருமகனுக்கு “நல்ல ஆலோசனை”களைக் கடிதங்களாக எழுதினால்? பிரச்சனைகளைக் கொண்டுவருபவன் பிசாசு. அந்தப் பிசாசுக்கே சில பிரச்சனைகள் இருந்து அதைப் பிசாசே சொன்னால் எப்படி இருக்கும்? அதையும் புத்தகமாக, “எனக்கு இருக்கும் பிரச்சனைகள் இவை, இவற்றைச் எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. எனக்கு திகைப்பாக இருக்கிறது” என்றெல்லாம் புலம்பலாக எழுதினால்? பிரச்சனைகளைக் கொண்டுவருபவன் பிசாசு. அந்தப் பிசாசுக்கே சில பிரச்சனைகள் இருந்து அதைப்…

தூரத்துக்கும் தேவன்
நம்மால் ஒளியின் வேகத்தை அடையமுடியுமா? அடைவது எப்படி? அடைந்தால் என்ன ஆகும்? ஒரு கிறிஸ்தவனாக இந்த அறிவியலைக் குறித்து நம்மால் சிந்திக்க முடிந்தால்? பெரியப்பா மாதவன் பல வருடங்கள் முன் சொன்னது. “கடவுள் மிக வேகமானவர் என்று நினைக்கிறேன் பென்னி. அதனால்தான் அவரை நம்மால் பார்க்க முடிவதில்லை. வேகமாகச் சுற்றும் சைக்கிளின் ஸ்போக்ஸ் கம்பியை நம்மால் பார்க்கமுடிவதில்லையே. அதுபோலத்தான் கடவுளும் என்று நான் நினைக்கிறேன்” என்றார். அவருக்குக் இறை நம்பிக்கை இல்லை என்று நான் நினைத்துக் கேட்டபோது…

மீதமான அப்பங்கள்
பன்னிரெண்டு கூடை நிறைய மீதமானவற்றை எடுத்தார்கள். ஏன்? ஆண்டவரால் இத்தனை பேர் X இத்தனை அப்பம் = இத்தனை ஆயிரம் அப்பம் என்று துல்லியமாகக் கணக்குப் போட்டிருக்க முடியாதா? அவர்தான் சர்வ ஞானம் பொருந்தியவராயிற்றே? துணிக்கைகள் முழு சைஸ் அப்பங்கள் இல்லை. கையாளும்போது உடைந்த, பிய்ந்துவிட்ட துணிக்கைகளாக இருந்திருக்கலாம். நம் அருள்நாதர் தன் பிள்ளைகளுக்கு முழுமையானதை மட்டும் கொடுக்கவும், உடைந்துபோனவற்றை கொடுக்கவேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். கல்யாணவீட்டில் உடைந்த அப்பளங்களையெல்லாம் கடைசியில் பார்த்திருப்போமே அதேபோல்! ஆனால் அவையும்…

நீங்களும் இறையியலாளரே!
(குறிப்பு: இந்தக் கட்டுரை இறையியல் கல்லூரி செல்வது அவசியமா இல்லையா என்பதைப் பற்றியதல்ல) இறையியல் (Theology) என்றால் நமக்கு உடனடியாக மனதில் வருவது மதுரை அரசரடி, சென்னை குருகுல் மற்றும் பெங்களூரின் பிரபல இறையியல் கல்லூரிகளாக இருக்கக்கூடும். அதேபோல் இறையியலாளர் (Theologian) என்கிற வார்த்தையைக் கேட்டால் நினைவுக்கு வருவது இறைக்கல்வி பெற்ற பாஸ்டர்கள், குருமார்கள் தான். இது சரியே என்றாலும், இறைக்கல்வியை கல்லூரியில் சென்றுதான் படித்தாகவேண்டும் என்றும், அப்படிப் படித்தவர்கள்தான் இறையியலாளர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிருப்பது சரியல்ல. நாம்…

திரித்துவம் அல்லது திரியேகத்துவம்
குறிப்பு: கட்டுரையின் நோக்கம், ஏற்கனவே திரித்துவத்தை ஆராய்ந்து அறிந்தவர்களுக்கு இன்னும் ஒரு கோணத்தில் சிந்திக்க ஒரு சிறு உதவியாக இருப்பது மட்டுமே. கொஞ்சம் கவனத்துடன் வாசித்தால் சில புதுப் பரிமாணங்களில் நீங்களும் அவரைக் குறித்துச் சிந்திக்கலாம்! கிறிஸ்தவத்தில் திரும்பத் திரும்பப் போதிக்கப்படுவதும் விசுவாசிக்கப்படுவதுமான உபதேசம் திரித்துவம் அல்லது திரியேகத்துவம். இறைவன் மூவராக இருக்கும் ஒருவர் என்பதே திரித்துவம். இப்படிச் சொல்வதைப் புரிந்துகொள்வதில் நிச்சயம் சிரமம் இருக்கும். ஆனால், அது இயல்பானது. காரணம் எந்த நேரத்திலும் மனிதராக இருக்கும்…

தாங்கமாட்டீர்கள் – பாகம் 2
(முந்தைய பாகம்) பூமியில் கிறிஸ்து இருந்த காலங்களில் சீஷர்களால் விளங்கிக்கொள்ள அப்போது இயலாது என்பதாலேயே பலவற்றை அவர்களிடம் சொல்லவில்லை என்று சென்ற பாகத்தில் பார்த்தோம். ஒருமுறை ‘இப்போது சொன்னால் தாங்கமாட்டீர்கள்’ என்றேகூடச் சொல்லிவிட்டார். அவை என்ன என்று சீடர்களும் கேட்டாற்போல் தெரியவில்லை. இங்கு போதித்தவர் கிறிஸ்து! அவரைவிட மேலான போதகர் இருக்க வாய்ப்பில்லை. இருந்த போதிலும் அப்போது அவர்கள் பிற்காலங்களில் அவர்களாகவே கற்றுக்கொள்ள வேண்டிய காலத்திற்கென, பலவற்றை அவர் விட்டுவிட்டே சென்றார். அப்போது போதித்தவற்றில்கூட புரிந்து கொள்ளவும்…

தாங்கமாட்டீர்கள் – பாகம் 1
நல்ல ஆசிரியர்களுக்கென்று சில அடையாளங்கள் உண்டு. நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது குறைந்தகாலம்தான் அவர் வகுப்பெடுத்தார். ஆனால், பள்ளியில் அந்த ஒரு ஆசிரியர் கற்பித்த விதம் மட்டும் இன்றும் நினைவில் இருக்கிறது. தான் எடுக்கப்போகும் பாடப்பகுதியை முதலில் ஒரு 10 நிமிடம் வாசிக்க நேரம் தருவார் அதன் பின் சில கேள்விகளைக் கேட்பார். அல்லது கேள்வி கேட்கச் சொல்வார். கடினமான பாடம் என்றால் என்ன புரிந்துகொண்டீர்கள் என்று கேட்பார். இந்த நேரம் முடிந்தவுடன்தான் அவர் அந்தப் பாடத்துக்குள்…
- 1
- 2