பொதுவான சிந்தனைகள்

வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்

இருக்கிறேன்

இருக்கிறேன்

வெள்ளைச்சாமி என்பவர் கருப்பாக இருப்பார். ஆரோக்கியசாமி ஆஸ்பத்திரிக்குப் போவார். பெயருக்கும் ஆளுக்கும் அல்லது குணத்திற்கும்கூடச் சம்பந்தம் இருக்காது. பெஞ்சமின் என்று எனக்கு என் தாத்தாவின் பெயரை இட்டார்கள். பெஞ்சமின் (அல்லது பென்யமின்) என்பதற்கு தெற்கின் மகன் அல்லது வலது கரத்தின் மகன் என்று பொருள். திருநவேலி வலது கைக்காரனுக்கு இந்தப்பெயர் கொஞ்சம் பொருத்தமாக இருப்பது தெரிகிறது.  முதலிலேயே நமக்குப் பெயரிடப்பட்டுவிடுவதால் (சிலருக்குப் பிறக்கும் முன்பே) , குணத்திற்கு, நிறத்திற்கு, ஆளுக்கு என்று பொருத்தமற்ற பெயர்கள் நமக்கு அமைந்துவிடுகிறது….

மூன்று “ஐயோ” நகரங்கள்

மூன்று “ஐயோ” நகரங்கள்

கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ! …கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய். என்று மூன்று முக்கியமான நகரங்களைக்குறித்து இயேசு தன் பிரசங்கத்தின்போது பரிதவித்தார். ஐயோ! என்று சொன்னது அவர்களில் மனந்திரும்பாத நிலையைக் குறித்த பெரும் வருத்தத்தின் வெளிப்பாடே தவிர அவை அழிந்துபோகவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. அதாவது, இந்த நகரங்களை அவர் சபித்தார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், இந்த ஊர்களை தேவன் அதிகம் நேசித்தார். அவர் தன் சுவிசேஷப் பயணங்களை பொதுவாக, இம்மூன்று ஊர்களைமையமாகக்…