வேதத்துக்கு வெளியே இருந்துவரும் ஆதாரம் – ஜோசிபஸ்
இந்த பூமியில் இயேசுக்கிறிஸ்துவின் வாழ்க்கை நான்கு சுவிசேஷங்களில் நமக்குத் தெரிய வேண்டிய அளவுக்கு தெளிவாகவே எழுதப்பட்டுள்ளது. அதுவும் நான் வெவ்வேறு நபர்களால் நான்கு சுவிசேஷங்களாக – மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்று! . ஆனால், வேதாகமத்தில் இடம்பெறாத ஒரு மனிதர், இயேசு வாழ்ந்த காலத்தையும், அப்போஸ்தலர் காலத்தையும் பற்றி எழுதியிருக்கிறார். அவரைக் குறித்துக் கொஞ்சம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் ஃபிளேவியஸ் ஜோசிபஸ் (Flavius Josephus). பெரும்பாலான தமிழ்க் கிறிஸ்தவர்கள் இவரைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. பொதுவாகவே…
பவுல் கிறிஸ்தவத்தை உருவாக்கினாரா? ஒரு வேத வரலாற்றுப் பார்வை
வேதாகமத்தை ஆழமாக வாசியாத சிலர் மத்தியில், “இயேசு ஒரு நல்ல போதகர், ஆனால் பவுல்தான் இன்று நாம் காணும் கிறிஸ்தவ மதத்தை உருவாக்கினார் (Paul invented Christianity)” என்ற ஒரு கருத்து பரவலாக உண்டு. இயேசு போதித்த எளிய அன்பின் மார்க்கத்தை, பவுல் தனது இறையியல் அறிவாலும் நியாயப்பிரமாணப் பின்னணியாலும் சிக்கலான ஒரு மதமாக மாற்றிவிட்டார் என்பதே இவர்களின் வாதம். இந்தக் கருத்து எவ்வளவு தூரம் வேதத்திற்கும் சரித்திரத்திற்கும் புறம்பானது என்பதை நாம் ஆராய்வது அவசியம். பவுல்…
நாடு இல்லாத ஒரு நாடு
நாடு கடந்த அரசு (Provisional Transitional Government) என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இலங்கைத் தீவில் ஈழம் தனியே மலரவில்லை என்றாலும் 2009ஆம் ஆண்டில் பல நாடுகளிலும் வசிக்கும் ஈழத் தமிழர்கள் மனம் தளராமல் “நாடுகடந்த தமீழ் ஈழம்” என்ற ஒன்றை உருவாக்கினார்கள் அதாவது தங்களுக்கு என்று ஒரு நிலப்பரப்பு நாடாக இல்லாவிட்டாலும், மனங்களில் ஒன்றுபட்டு ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு உருத்திரகுமாரன் என்பவர் தலைமையில் ஒரு செயல்திட்டத்தையும் வகுத்தார்கள். நாடும் அதன் அமைவிடமும் ஒரு நாடு…
ஒரு அதிரடி அற்புதம்
கேள்வி: தேவன் ஒரு பெரிய அற்புதம் செய்து ஏன் அனைவைரையும் கிறிஸ்தவராக மாற்றிவிடக்கூடாது? பூமி இரண்டாகவோ, இல்லையென்றால் இந்துமா சமுத்திரம் வற்றினாலோ, எல்லோரும் அவரை ஏற்றுக் கொண்டு விடுவார்கள் அல்லவா? பதில்: ஆஹா, நல்ல கேள்விதான், ஆனால் கொஞ்சம் நிதானமாகத் தியானித்தால் இது எவ்வளவு ஒரு அபத்தமான சிந்தனை என்பது புரியும். ஆம், இறைவனால் ஒரு மகா பிரமாண்டமான அற்புதத்தை நிகழ்த்த முடியும்தான். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால், ஏன் அவர் என் விருப்பபடி ஒரு…
முற்றிற்று
இந்திய வேதாகமச் சங்கத்தால் வெளியிடப்படும் வேதாகமங்களில் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் நாம் பார்க்க இயலும் வாசகம் ‘பழைய ஏற்பாடு முற்றிற்று’ மற்றும் ‘புதிய ஏற்பாடு முற்றிற்று’. முற்றிற்று என்பதன் முழு நோக்கம், இனி வேறு இல்லை என்றும், எழுதிக்கொடுக்கப்பட்ட தேவவார்த்தைகளால், வேதாகமம் முற்றுப்பெற்றாயிற்று; இனி பிற சேர்மானங்களுக்கு இடமில்லை என்பதுதான்!. ஆனால், நம் கையில் இருக்கும் வேதாகமம் போதாது என்று சொல்வதில் இருந்து வேதாகமம் முழுமையானது அல்ல என்று சொல்வதுவரை பலவிதமான போதனைகள் உபதேசிக்கப்பட்டு வந்திருக்கின்றன….
இழப்பவன் முட்டாள் அல்ல!
ஜனவரி 8, 1956 அன்று ஜிம் எலியட் மற்றும் அவருடைய நண்பர்களான பீட்டர் பிளெமிங், எட் மெக்கல்லி, நேட் செயிண்ட், ரோஜர் யூடெரியன் ஆகிய ஐவரும் தாங்கள் நண்பர்களாக்கி விட்டோம் என்று நினைத்து நெருங்கிய பழங்குடிகளால் தாக்கிக் கொல்லப்பட்டார்கள். சிறுவயதில் சண்டேஸ்கூலோடு போய்விடும் வழக்கம் மிஷனரிமார்களின் கதைகளைக் கேட்பது. வயதாக வயதாக ஊர்க்கதைகளைக் கேட்டு வளரும் காதுகளுக்கு ‘பழங்கதைகள்’ என்று அவை அதிக ஈர்ப்பை அளிப்பதில்லை. ஆனால், தேவனுடைய ராஜ்யத்திற்காகத் தங்களையே அர்ப்பணித்து வாழ்ந்தவர்களின் வரலாற்றை அவ்வப்போது…
ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புக்கள்
Image Source:https://bible-history.com ஒரு நல்ல ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுப்பது எப்படி? நீங்கள் தமிழ் வேதாகமம் மட்டுமே வாசிப்பவர் ஆனாலும், ஆங்கில வேதாகமம் ஒன்றாவது உங்களிடம் இருக்கவேண்டும். நான் சொல்வது அலமாரிகளில் 1960ல் இருந்து உறங்கிக் கொண்டிருக்கும் பழைய நம் தாத்தா கையெழுத்து காணப்படும் பழைய சிறு KJV வேதாமம் அல்ல. அது பத்திரமாக இருக்கட்டும். ஏனென்றால் ஆங்கிலத்தில் வாசித்துப் பழகாதவர்களுக்கான தொடக்கநாட்களுக்கான வேதாகமம் அது அல்ல. அதை வாசித்தால் பின்பு ஆங்கிலமே கசக்கக் கூடும். சுமார்…
பில்கிரிம்ஸ் ப்ரொக்ரெஸ் – மோட்சப் பிரயாணி
அனேகமாக 35 வருடங்களுக்குப் பின் இன்னூலை மீண்டும் வாசிக்கிறேன். சின்ன வித்தியாசம். முன்பு தமிழில்; இப்பொழுது ஆங்கிலத்தில். காரணம் முழுமையான தமிழ்ப்பதிப்பு என்னிடம் இல்லை. ஏராளமாக கதைப் புத்தகங்கள், காமிக்ஸ்கள் வாசித்து வளர்ந்த எனக்கு “கிறிஸ்தியானின்” வாழ்க்கைப்பயணம் மிகவும் பிடித்துப் போனது. இது ஒரு கதைப்புத்தகம். ஆனால், இந்தக் கதையில் நாம் தான் நாயகர்கள். நாம் ஒவ்வொருவரும்தான் அந்தக் கிறிஸ்தியான். எனவே வாசிக்கத் துவங்கிய 15 நிமிடங்களில் நீங்களும் கிறிஸ்தியானாக மாறிவிடுவீர்கள். இதன் தலைப்பிலேயே புரொக்ரஸ் (progress)…
பியூரிட்டன் போதகர்கள்
பரிசுத்தம், தூய்மை என்றால் கொஞ்சம் ஒரு பயம், ஏக்கம் என்று கலவையான உணர்வு முதலில் வருவது தவிர்க்கமுடியாதது. ஆனால், பரிசுத்தத்தை முன்னிறுத்தி வாழ்ந்த ஒரு கூட்டத்தார் உண்டு. அவர்களை பரிசுத்தத்தை முன்னிறுத்தி வாழ்ந்தார்கள் என்று சொவதைவிட பரிசுத்தரை முன்னிறுத்தி வாழ்ந்தவர்கள் என்று சொல்வதுதான் பொருத்தமானது. ஆங்கிலத்தில் இவர்கள் Puritans – ப்யூரிட்டன்கள். பியூரிட்டன்களைத் தூய்மையாளர்கள் என்றோ பரிசுத்தவாதிகள் என்றோ அழைக்கலாம் என்றாலும், அவர்களைக் குறித்த அறிமுகக் கட்டுரை என்பதால் பியூரிட்டன் (Puritans) என்றே இங்கே குறிப்பிட்டுவிடுகிறேன். பின்னர்,…
புதிய துவக்கங்கள்
தோல்வி மற்றும் தோல்வியில் ஏற்பட்ட மனச்சோர்வில், தங்கள் வாழ்க்கை இனி முடிந்துவிட்டது என்று நினைப்பவர்கள் ஏராளம். இனி வாழ்க்கையை அழகாக மாற்றுவதற்கு வாய்ப்பில்லை. இப்போதே என் வாழ்வில் எல்லாம் தாமதமாகிவிட்டது என்று நினைப்பதால் இனி புதிய வாய்ப்புகளைக் குறித்து சிந்திப்பதே கடினமாக ஆகிவிடுகிறது. சில விஷயங்கள் விரும்பத்தாக சூழலில் சென்று விட்டதால், இனி சரியான நிலைக்கு நான் வருவதே இயலாது என்ற நினைவுகளின் அழுத்தம் அதிகமாகி விடுகிறது. அது தலைக்கு மிஞ்சிய சூழலாகவே ஆகிவிடுகிறது. ஆனால் நாம்…