தேடுங்கள்… கண்டடைவீர்கள்!
கோடிக்கணக்கான மனிதர்கள் கடவுளைத் தேடிக்கொண்டிருப்பது உண்மையிலேயே இயல்பான விஷயம் தானா? இல்லை விவரமற்ற, முதிர்ச்சியற்ற, அறியாமையால் செய்யப்படும், பகுத்தறிவற்ற செயலா? மனிதன் ஏன் தன் கண்களால் பார்க்க இயலாத ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறான்? இது வெறும் பொழுதுபோகாமல் செய்யப்படும் காரியமா அல்லது கஷ்ட காலங்களில் மன சமாதானத்திற்காகத் தேடிக்கொள்ளும் ஒரு ‘உளவியல் சமாளிப்பா’ (Psychological Coping Mechanism)? அருள்நாதர் இயேசு கிறிஸ்து சொன்னார்: “தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்.” பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த வாசகத்தைச் சுவர்களிலும் பாறைகளிலும் சுண்ணாம்பால் சுவிசேஷகர்கள் எழுதியிருப்பார்கள்….
தெய்வீகப் பேச்சு!
நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும். மற்றவர் மதிக்கும் வண்ணம் பேசவேண்டும். எல்லாம் சரிதான். ஆனால், தேவ வார்த்தைகளைப் பேசமுடியுமா? அதுவும் தேவனே பேசுவதுபோல்? அப்படி ஒரு மனிதன் பேசும் வார்த்தையை, தேவன் அப்படியே தன் வார்த்தையாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவது சாத்தியமா? 1 இராஜாக்கள் 17-ல் எலியா ஆகாபுக்கு முன்பாக நின்று, “கர்த்தர் சொல்லுகிறார்” என்று ஒரு செய்தியாளராக மட்டும் பேசவில்லை. மாறாக, “என் வாக்கின்படியே அன்றி…” என்று ஒரு அதிகாரத் தொனியில் முழங்குகிறார். வானத்தை அடைக்கும் சாவியைத் தான்…
தேவனின் இறையாண்மை: அகிலத்தை ஆளும் ஏகாதிபத்தியம்!
“அவரின்றி ஓரணுவும் அசையாது” – இது நம் முன்னோர் இறைமொழி. இதிலிருக்கும் ஆழமான இறையியல் உண்மைதான் இறைவனுடைய இறையாண்மை (Sovereignty of God)! அதற்கு இன்னும் சிறப்பான பெயர்: ஏகாதிபத்தியம்! இறையாண்மை என்கிற இந்த வார்த்தையை அடிக்கடி அரசியல்வாதிகள் பேசக் கேட்டிருப்பீர்கள். இந்த இறையாண்மை என்றால் என்ன? எளிமையாகச் சொன்னால், இந்தப் பிரபஞ்சத்தின் மீது இறைவனுக்கு இருக்கும் முழுமையான அதிகாரம் மற்றும் கட்டுப்பாடு. தேவன் ஒரு அதிகாரம் மிக்க சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்; எனவே தற்செயலாக எதுவும் இங்கே…
கோபங்கொண்ட தேவனுடைய கரத்தில் பாவிகள்
கிறிஸ்தவ வரலாற்றிலேயே மறக்கமுடியாத, அஸ்திபாரங்களை அசைத்த பல பிரசங்கங்களில் முதன்மையானது ஜோனாதன் எட்வர்ட்ஸ் (Jonathan Edwards) அவர்கள் 1741-ம் ஆண்டு பிரசங்கித்த “கோபங்கொண்ட கடவுளின் கரத்தில் பாவிகள்” (Sinners in the Hands of an Angry God) என்னும் இச்செய்தி. அமெரிக்காவில் “பெரிய விழிப்புணர்வு” (Great Awakening) நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், என்ஃபீல்ட் (Enfield) என்ற இடத்தில் இது பிரசங்கிக்கப்பட்டது. இச்செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்கள், தேவனுடைய உக்கிரகோபத்தையும், நரகத்தின் பயங்கரத்தையும் ஆவியானவரின் மூலமாக உணர்த்தப்பட்டபோது, தாங்கள் அந்த…
பவுல் கிறிஸ்தவத்தை உருவாக்கினாரா? ஒரு வேத வரலாற்றுப் பார்வை
வேதாகமத்தை ஆழமாக வாசியாத சிலர் மத்தியில், “இயேசு ஒரு நல்ல போதகர், ஆனால் பவுல்தான் இன்று நாம் காணும் கிறிஸ்தவ மதத்தை உருவாக்கினார் (Paul invented Christianity)” என்ற ஒரு கருத்து பரவலாக உண்டு. இயேசு போதித்த எளிய அன்பின் மார்க்கத்தை, பவுல் தனது இறையியல் அறிவாலும் நியாயப்பிரமாணப் பின்னணியாலும் சிக்கலான ஒரு மதமாக மாற்றிவிட்டார் என்பதே இவர்களின் வாதம். இந்தக் கருத்து எவ்வளவு தூரம் வேதத்திற்கும் சரித்திரத்திற்கும் புறம்பானது என்பதை நாம் ஆராய்வது அவசியம். பவுல்…
எளிய ஜெபம்
ஒரு பொடியன் மூலையில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு “ABECDE…” என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் அம்மா வியப்புடன் அவனிடம் “தம்பீ… நீ என்ன செய்யுதே?” என்றார்கள். அதற்கு அவன் “நா ஜெவம் பண்ணுதேன்…” என்றான். “ஓ, ஆனா, நீ ABCD..ந்னுல்ல சொல்லிக்கிட்டு இருக்கிறமாதிரித் தெரியுது” “ஆமாம்மா…நீங்க ஜெவம் பண்ணச் சொன்னீங்க. எனக்கு நீங்க சொல்லித்தந்த ஜெபம் மறந்திருச்சி…அதுனால, ஆண்டவரே எனக்கு ஜெபிக்கதெரியாது… நா ABCD ஃபுல்லாச் சொல்றேன். அந்த எழுத்துக்களை வச்சி நீங்களே ஜெபம் பண்ணீக்கோங்க என்று…
மகிமை…மகிமை…மகிமை
முன்குறிப்பு: கட்டுரையின் பின்குறிப்பை வாசித்து வந்தால் நன்றாக இருக்கும். சில வார்த்தைகளை அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்போம்; அதன் ஆழம் தெரியாவிட்டாலும். கிறிஸ்தவத்தில் அப்படி ஒரு வார்த்தை – மகிமை!. அதாவது தேவனுடைய மகிமை. இதுபற்றி விளக்கமான போதனைகளும் நான் அதிகம் கேட்டதில்லை. அதற்கு முக்கியமான காரணம் இந்த மகிமை என்கிற வார்த்தையை விளக்குவது கடினம் என்பதாக இருக்கலாம். ஆனால், நீங்கள் கேட்டிருப்பீர்களானால், தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். 🙂 தேவ மகிமை என்பது அவருடைய பரிபூரணத்தின், அவருடைய தெய்வீக…
இப்படிக்கு பிசாசு
‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பது தெரியும். ஆனால், பிசாசு கடிதம் எழுதுவது? அதுவும் தன் மருமகனுக்கு “நல்ல ஆலோசனை”களைக் கடிதங்களாக எழுதினால்? பிரச்சனைகளைக் கொண்டுவருபவன் பிசாசு. அந்தப் பிசாசுக்கே சில பிரச்சனைகள் இருந்து அதைப் பிசாசே சொன்னால் எப்படி இருக்கும்? அதையும் புத்தகமாக, “எனக்கு இருக்கும் பிரச்சனைகள் இவை, இவற்றைச் எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. எனக்கு திகைப்பாக இருக்கிறது” என்றெல்லாம் புலம்பலாக எழுதினால்? பிரச்சனைகளைக் கொண்டுவருபவன் பிசாசு. அந்தப் பிசாசுக்கே சில பிரச்சனைகள் இருந்து அதைப்…
தூரத்துக்கும் தேவன்
நம்மால் ஒளியின் வேகத்தை அடையமுடியுமா? அடைவது எப்படி? அடைந்தால் என்ன ஆகும்? ஒரு கிறிஸ்தவனாக இந்த அறிவியலைக் குறித்து நம்மால் சிந்திக்க முடிந்தால்? பெரியப்பா மாதவன் பல வருடங்கள் முன் சொன்னது. “கடவுள் மிக வேகமானவர் என்று நினைக்கிறேன் பென்னி. அதனால்தான் அவரை நம்மால் பார்க்க முடிவதில்லை. வேகமாகச் சுற்றும் சைக்கிளின் ஸ்போக்ஸ் கம்பியை நம்மால் பார்க்கமுடிவதில்லையே. அதுபோலத்தான் கடவுளும் என்று நான் நினைக்கிறேன்” என்றார். அவருக்குக் இறை நம்பிக்கை இல்லை என்று நான் நினைத்துக் கேட்டபோது…
மீதமான அப்பங்கள்
பன்னிரெண்டு கூடை நிறைய மீதமானவற்றை எடுத்தார்கள். ஏன்? ஆண்டவரால் இத்தனை பேர் X இத்தனை அப்பம் = இத்தனை ஆயிரம் அப்பம் என்று துல்லியமாகக் கணக்குப் போட்டிருக்க முடியாதா? அவர்தான் சர்வ ஞானம் பொருந்தியவராயிற்றே? துணிக்கைகள் முழு சைஸ் அப்பங்கள் இல்லை. கையாளும்போது உடைந்த, பிய்ந்துவிட்ட துணிக்கைகளாக இருந்திருக்கலாம். நம் அருள்நாதர் தன் பிள்ளைகளுக்கு முழுமையானதை மட்டும் கொடுக்கவும், உடைந்துபோனவற்றை கொடுக்கவேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். கல்யாணவீட்டில் உடைந்த அப்பளங்களையெல்லாம் கடைசியில் பார்த்திருப்போமே அதேபோல்! ஆனால் அவையும்…