விடுதலைக்குத் தடை!

இரட்சிப்பில் பாவமன்னிப்பு என்பது நமக்குள் பிரதானமாக வந்திருக்கும் ஆசிர்வாதம். ஆனால், அத்துடன் அந்த ஆசிர்வாதம் நிறுவவிடுவதில்லை. மாறாக பாவத்தின் விளைவுகளால் வந்த விஷயங்களில் இருந்தும் நம்மை தேவன் தொடர்ச்சியாக பல நிலைகளில் விடுவிக்கிறார்; விடுவித்துக்கொண்டிருக்கிறார்; இன்னமும் விடுதலை செய்வார்! எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான் என்று சங்கீதக்காரன் எழுதும்பொழுது இரட்சிப்பின் ஆசிர்வாதமான இந்த விடுதலையை உணர்ந்து பாடலாக்கியிருக்கிறார். தொடர்ச்சியான விடுதலை என்பது நம்மைத் தொடரும் ஆசிர்வாதம். ஆனால், அப்படியான ஆசிர்வாதத்துக்குத் தடையாகவும் நாமே அமைந்துவிடுவதுதான் வருத்தத்துக்குரிய விஷயம். நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று என்பதில் இருந்து நமக்குள் விடுதலையைத் தராதவண்ணம் எதிராகச் செயல்படும் எண்ணங்கள் இருப்பதையும் அவர் ஒத்துக்கொண்டு எழுதியிருப்பதையும் கவனிக்க வேண்டும். பாவம் மன்னிப்பு ஆசிர்வாதம் என்றால் அந்த ஆசிர்வாதத்தைப் பெற பாவத்தை அறிக்கை என்பது அவசியம். பாவ மன்னிப்பு என்பதற்குள் அதற்காக வருந்துதலும் அதை அறிக்கையிடுதலும் அடங்கியிருக்கிறது. பாவ மன்னிப்பாகிய ஆசிர்வாத்தை பாவத்தை ஒத்துக்கொள்ளாத இந்த மனநிலைதான் தடையாக இருந்துகொண்டே இருக்கும். தாவீது சொல்லும் பாவத்தை அடக்கிவைத்தல் என்பது இதுதான். அவரும் கிட்டத்தட்ட ஒருவருடம் இந்த நிலையில் இருந்தவர்தான். பாவத்தின் ஒரு தன்மையே அதை அடக்கிவைத்தல்தான். ‘பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு’ என்று இதை எபிரேயர் ஆக்கியோனும் இதை பிற்காலங்களில் நினைவுபடுத்தி இருக்கிறார் (எபிரெயர் 3:13). இதன் அர்த்தம், பாவம் செய்பவனுக்கு நான் பாவம் செய்தேன் என்று ஒத்துக்கொள்ளவே மனம் இருக்காது என்பதுதான். இது வீழ்ச்சியில் ஆதாமிலேயே துவங்கிவிட்ட ஒன்று. ‘ஆதாமே நீ என்ன செய்தாய்’ என்பதற்கு ‘நீர் கொடுத்த ஸ்திரி..’ என்று ஒரு காரணத்தை ஆதாம் சொன்னாரே ஒழிய தேவ கட்டளையை மீறிவிட்டதை ஒத்துக்கொள்ளவில்லை. கடைசிவரை அவர் பாவ மன்னிப்பென்று கேட்டதாகவும் வேதத்தில் இல்லை. இதுதான் பாவத்தை அடக்கிவைத்தல். நியாயப்படுத்துதல்: இந்தப் பாவத்தை அடக்கிவைத்தல் என்பது பலவகைகளில் வெளிப்படும். முதலாவதாக, அதை நியாயப்படுத்துவதாக வெளிப்படும். “நான் ஏன் இதச் செஞ்சேண்ணா..” என்று துவங்கி அதை சரி என்று நிரூபிப்பது. உண்மையில் மனிதர்களால் எந்த விஷயத்தையும் நியாயப்படுத்திவிடமுடியும். இந்த நியாயப்படுத்துதல் விடுதலையைக் கொண்டுவரப்போவதில்லை. ‘ஆம், தவறு செய்துவிட்டேன், இப்போது என்ன செய்வது’ என்று வந்துவிட்டால் விஷயம் எளிதாகிவிடும். ஆனால், “நான் ஏன் செஞ்சேன் தெரியுமா..இதெல்லாம் தப்பே கிடையாது” என்று துவங்கினால் அது சென்றுகொண்டிருக்கும் அதே வழியில் செல்லத்தான் வைக்குமே ஒழிய, மனதைத் திருப்ப உதவாது! குற்றப்படுத்துதல்: விடுதலை பெற இரண்டாவது எதிரி “ பிறரைக் குற்றப்படுத்துவது”. இதையும் ஆதாம் செய்திருக்கிறார். ‘நீர் கொடுத்த ஸ்திரீ..” என்பதில் அவர் குற்றத்தை ஏவாளை நோக்கித் திருப்புவதில் தான் நிற்கிறார். (“நீர் கொடுத்த..” என்று சொல்வதில் இருந்து தேவனைக் குற்றப்படித்தும் தொனியைக் கூட கவனிக்க முடியும்). இது நாம் செய்யும் எந்தத் தவறுக்கும் வேறுயாரையாவது பொறுப்பாளியாக்கிவிடுவது. ஆனால், பாவம் ஒரு நாளும் அதைச் செய்தவரை விடாது. பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை அறிவோம். கண்டுகொள்ளாமல் தவிர்த்தல்: மூன்றாவது தடை, பாவத்தைக் குறித்த அக்கறை இன்மை. அதாவது கண்டுகொள்ளாமல் செல்வது. “ஏங்க இவ்வளவு தவறு இருக்கிறது, இதைக் குறித்த அக்கறையே இல்லையா?” என்று கேட்டால், அதை அசட்டை செய்து கடப்பது. “அதுக்கென்ன இப்போ? நான் மாத்திரமா பண்றேன், மத்தவங்க பண்றதேயில்லையா..” என்று நடந்துகொள்வது. இதன் இன்னொரு கோணம் “அப்டியா, இது தவறுண்ணு எனக்குத் தெரியாதே..” என்பது போல நடிப்பது. இதுவும் விடுதலைக்குத் தடை! இயலாமையைக் காட்டுதல்: இன்னொரு வகை “இது கருமப்ப்பாவம், நம்மால என்னங்க செய்யமுடியும்?” இதை Fatalistic என்பார்கள். என்னால் இதைக்குறித்து எதுவும் செய்ய இயலாது. நடக்கிறதுதான் நடக்கும், நம்மால தடுக்க முடியாது; அது அப்படித்தான் நடக்கும் என்று தவிர்த்துவிட நினைப்பது. ஆனால், இது என்னால் செய்ய இயலாது என்பதைவிட என்னால் செய்ய முடியாது என்கிற வகையாகத்தான் இருக்கும். இவைதான் மிகப் பெரும் பிரச்சனைகளாக நாம் தொடர்ந்து பெறவேண்டிய விடுதலை என்னும் ஆசிர்வாததிற்கே தடை. ஆனால், இப்படியெல்லாம் இருந்தால் பிரச்சனை மாறப்போவதில்லை. அது அங்கேயேதான் இருக்கும். பாவம் என்று வந்துவிட்டால், அது போகப்போகச் சரியாகாது. காலப்போக்கில் நேராகவும் செய்யாது. போகப்போக மோசமாகத்தான் போகும். அடக்கிவைத்தமட்டும், கதறுதல்தான்! எலும்புகள் உலர்ந்துபோவதுதான் நடக்கும்; அதாவது சரீரத்தில்கூட அதன் பாதிப்பு தெரியத்துவங்கும். ஆனால் இப்படிப்பட்ட தடைளுக்கு எதிராக பாவத்தை ஒத்துக்கொண்டவர்களாக அறிக்கையிட்டு , மனம் திரும்புதலுக்கேதுவாத துக்கம் அடைந்தவர்களாக, செய்ய தவறுக்காக வருந்தி மனம் திரும்பினால் மட்டுமே விடுதலை உணர்வு சாத்தியம். பேதுருவுக்கு அப்படிப்பட்ட ஒரு விடுதலையும், யூதாஸ்காரியோத்துக்கு அப்படிப்பட்ட விடுதலை கிடைக்கவில்லை என்பதும் நமக்கு முன் இருக்கும் உதாரணங்கள். (போதகர் சார்ல்ஸ் அருமைநாயகம், கோவை - அவர்கள் கொடுத்த ஒரு செய்தியின், ஒரு பகுதியின் அடைப்படியில் - முழு செய்தியைக் கேட்க விரும்பினால், https://www.youtube.com/watch?v=Iubl7Dscclc)

இரட்சிப்பில் பாவமன்னிப்பு என்பது நமக்குள் பிரதானமாக வந்திருக்கும் ஆசிர்வாதம். ஆனால், அத்துடன் அந்த ஆசிர்வாதம் நிறுவவிடுவதில்லை.  மாறாக பாவத்தின் விளைவுகளால் வந்த விஷயங்களில் இருந்தும் நம்மை தேவன் தொடர்ச்சியாக பல நிலைகளில் விடுவிக்கிறார்; விடுவித்துக்கொண்டிருக்கிறார்; இன்னமும் விடுதலை செய்வார்!   

எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான் என்று சங்கீதக்காரன் எழுதும்பொழுது இரட்சிப்பின் ஆசிர்வாதமான இந்த விடுதலையை உணர்ந்து பாடலாக்கியிருக்கிறார். தொடர்ச்சியான விடுதலை என்பது நம்மைத் தொடரும் ஆசிர்வாதம்.

ஆனால், அப்படியான ஆசிர்வாதத்துக்குத் தடையாகவும் நாமே அமைந்துவிடுவதுதான் வருத்தத்துக்குரிய விஷயம். நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று என்பதில் இருந்து நமக்குள் விடுதலையைத் தராதவண்ணம் எதிராகச் செயல்படும் எண்ணங்கள் இருப்பதையும் அவர் ஒத்துக்கொண்டு எழுதியிருப்பதையும் கவனிக்க வேண்டும். 

பாவம் மன்னிப்பு ஆசிர்வாதம் என்றால் அந்த ஆசிர்வாதத்தைப் பெற  பாவத்தை அறிக்கை என்பது அவசியம். பாவ மன்னிப்பு என்பதற்குள் அதற்காக வருந்துதலும் அதை அறிக்கையிடுதலும் அடங்கியிருக்கிறது. பாவ மன்னிப்பாகிய ஆசிர்வாத்தை பாவத்தை ஒத்துக்கொள்ளாத இந்த மனநிலைதான் தடையாக இருந்துகொண்டே இருக்கும். தாவீது சொல்லும் பாவத்தை அடக்கிவைத்தல் என்பது இதுதான். அவரும் கிட்டத்தட்ட ஒருவருடம் இந்த நிலையில் இருந்தவர்தான். 

பாவத்தின் ஒரு தன்மையே அதை அடக்கிவைத்தல்தான். ‘பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு’ என்று இதை எபிரேயர் ஆக்கியோனும் இதை பிற்காலங்களில் நினைவுபடுத்தி இருக்கிறார் (எபிரெயர் 3:13). இதன் அர்த்தம், பாவம் செய்பவனுக்கு நான் பாவம் செய்தேன் என்று ஒத்துக்கொள்ளவே மனம் இருக்காது என்பதுதான். இது வீழ்ச்சியில் ஆதாமிலேயே துவங்கிவிட்ட ஒன்று. ‘ஆதாமே நீ என்ன செய்தாய்’ என்பதற்கு ‘நீர் கொடுத்த ஸ்திரி..’ என்று ஒரு காரணத்தை ஆதாம் சொன்னாரே ஒழிய தேவ கட்டளையை மீறிவிட்டதை ஒத்துக்கொள்ளவில்லை. கடைசிவரை அவர் பாவ மன்னிப்பென்று கேட்டதாகவும் வேதத்தில் இல்லை. இதுதான் பாவத்தை அடக்கிவைத்தல்.

நியாயப்படுத்துதல்:

இந்தப் பாவத்தை அடக்கிவைத்தல் என்பது பலவகைகளில் வெளிப்படும். முதலாவதாக,  அதை நியாயப்படுத்துவதாக வெளிப்படும். “நான் ஏன் இதச் செஞ்சேண்ணா..” என்று துவங்கி அதை சரி என்று நிரூபிப்பது. உண்மையில் மனிதர்களால் எந்த விஷயத்தையும் நியாயப்படுத்திவிடமுடியும். இந்த நியாயப்படுத்துதல் விடுதலையைக் கொண்டுவரப்போவதில்லை. ‘ஆம், தவறு செய்துவிட்டேன், இப்போது என்ன செய்வது’ என்று வந்துவிட்டால் விஷயம் எளிதாகிவிடும். ஆனால், “நான் ஏன் செஞ்சேன் தெரியுமா..இதெல்லாம் தப்பே கிடையாது” என்று துவங்கினால் அது சென்றுகொண்டிருக்கும் அதே வழியில் செல்லத்தான் வைக்குமே ஒழிய, மனதைத் திருப்ப உதவாது!

குற்றப்படுத்துதல்:

விடுதலை பெற இரண்டாவது எதிரி “ பிறரைக் குற்றப்படுத்துவது”. இதையும் ஆதாம் செய்திருக்கிறார். ‘நீர் கொடுத்த ஸ்திரீ..” என்பதில் அவர்  குற்றத்தை ஏவாளை நோக்கித் திருப்புவதில் தான் நிற்கிறார். (“நீர் கொடுத்த..” என்று சொல்வதில் இருந்து தேவனைக் குற்றப்படித்தும் தொனியைக் கூட கவனிக்க முடியும்). இது நாம் செய்யும் எந்தத் தவறுக்கும் வேறுயாரையாவது பொறுப்பாளியாக்கிவிடுவது. ஆனால், பாவம் ஒரு நாளும் அதைச் செய்தவரை விடாது. பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை அறிவோம். 

கண்டுகொள்ளாமல் தவிர்த்தல்:

மூன்றாவது தடை, பாவத்தைக் குறித்த அக்கறை இன்மை. அதாவது கண்டுகொள்ளாமல் செல்வது. “ஏங்க இவ்வளவு தவறு இருக்கிறது, இதைக் குறித்த அக்கறையே இல்லையா?” என்று கேட்டால், அதை அசட்டை செய்து கடப்பது. “அதுக்கென்ன இப்போ? நான் மாத்திரமா பண்றேன், மத்தவங்க பண்றதேயில்லையா..” என்று நடந்துகொள்வது.  இதன் இன்னொரு கோணம் “அப்டியா, இது தவறுண்ணு எனக்குத் தெரியாதே..” என்பது போல நடிப்பது. இதுவும் விடுதலைக்குத் தடை!

இயலாமையைக் காரணமாக்குதல்:

இன்னொரு வகை “இது கருமப்ப்பாவம், நம்மால என்னங்க செய்யமுடியும்?” இதை Fatalistic என்பார்கள். என்னால் இதைக்குறித்து எதுவும் செய்ய இயலாது. நடக்கிறதுதான் நடக்கும், நம்மால தடுக்க முடியாது; அது அப்படித்தான் நடக்கும் என்று தவிர்த்துவிட நினைப்பது. ஆனால், இது என்னால் செய்ய இயலாது என்பதைவிட என்னால் செய்ய முடியாது என்கிற வகையாகத்தான் இருக்கும்.

இவைதான் மிகப் பெரும் பிரச்சனைகளாக நாம் தொடர்ந்து பெறவேண்டிய விடுதலை என்னும் ஆசிர்வாததிற்கே தடை. ஆனால், இப்படியெல்லாம் இருந்தால் பிரச்சனை மாறப்போவதில்லை. அது அங்கேயேதான் இருக்கும். பாவம் என்று வந்துவிட்டால், அது போகப்போகச் சரியாகாது. காலப்போக்கில் நேராகவும் செய்யாது. போகப்போக மோசமாகத்தான் போகும். அடக்கிவைத்தமட்டும், கதறுதல்தான்! எலும்புகள் உலர்ந்துபோவதுதான் நடக்கும்; அதாவது சரீரத்தில்கூட அதன் பாதிப்பு தெரியத்துவங்கும். 

ஆனால் இப்படிப்பட்ட தடைளுக்கு எதிராக பாவத்தை ஒத்துக்கொண்டவர்களாக அறிக்கையிட்டு , மனம் திரும்புதலுக்கேதுவாத துக்கம் அடைந்தவர்களாக, செய்ய தவறுக்காக வருந்தி மனம் திரும்பினால் மட்டுமே விடுதலை உணர்வு சாத்தியம். பேதுருவுக்கு அப்படிப்பட்ட ஒரு விடுதலையும், யூதாஸ்காரியோத்துக்கு அப்படிப்பட்ட விடுதலை கிடைக்கவில்லை என்பதும் நமக்கு முன்  இருக்கும் உதாரணங்கள்.

(போதகர் சார்ல்ஸ் அருமைநாயகம், கோவை – அவர்கள் கொடுத்த ஒரு செய்தியின், ஒரு பகுதியின் அடைப்படியில் – முழு செய்தியைக் கேட்க விரும்பினால், https://www.youtube.com/watch?v=Iubl7Dscclc)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *