
பன்னிரெண்டு கூடை நிறைய மீதமானவற்றை எடுத்தார்கள். ஏன்? ஆண்டவரால் இத்தனை பேர் X இத்தனை அப்பம் = இத்தனை ஆயிரம் அப்பம் என்று துல்லியமாகக் கணக்குப் போட்டிருக்க முடியாதா? அவர்தான் சர்வ ஞானம் பொருந்தியவராயிற்றே?
துணிக்கைகள் முழு சைஸ் அப்பங்கள் இல்லை. கையாளும்போது உடைந்த, பிய்ந்துவிட்ட துணிக்கைகளாக இருந்திருக்கலாம். நம் அருள்நாதர் தன் பிள்ளைகளுக்கு முழுமையானதை மட்டும் கொடுக்கவும், உடைந்துபோனவற்றை கொடுக்கவேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். கல்யாணவீட்டில் உடைந்த அப்பளங்களையெல்லாம் கடைசியில் பார்த்திருப்போமே அதேபோல்!
ஆனால் அவையும் வீணாக்கப்படவில்லை என்று இதற்கு ஒரு பொருள் கொள்ளலாம். தேவனுடைய இராஜ்ஜியத்தில் வீண் என்று எதுவும் இல்லை அல்லவா?
இதைத்தவிர, 5000 பேரெல்லாம் போஷிக்கப்படவில்லை; ஏதோ கொஞ்சம் பேர் சாப்பிட்டிருக்கலாம்; சிலருக்குக் கிடைக்காமல் போய் விட்டது. கடைசிப்பந்தியில் இருந்தவர்களுக்கும் பிய்ந்ததும், இன்னும் ஒரு பந்திக்கு மீன் மட்டும்தான் கிடைத்தது என்றெல்லாம் பிற்காலத்தில் எவரும் புதுக்கதை ஒன்றைப் புகுத்திவிடாமல் இருக்க மீதமான கூடைகளில் சேர்க்கப்பட்டது ஒரு சான்றாக அமைந்துவிட்டது.
ஆக, மீதமானவையும் இருந்தது என்பதால், அது அனைவரும் திருப்தி அடைந்தபின்னரே சேர்க்கப்பட்டது என்று அறிந்து கொள்ள அவற்றையும்கூட எழுதியவர்கள் மறக்காமல் குறிப்பிட்டு வைத்தார்கள்.! நம் தேவன் குறைவுகளை நிறைவாக்குகிறவர் என்பதால் அனைவருமே அன்று சரீரத்தில் பெற்று நிறைவில் இணைந்தார்கள்.
இப்படி அப்பங்களைக் குறித்து சிந்தித்தால் சிந்தித்துக்கொண்டே இருக்கலாம். காரணம், ஜீவ அப்பம் அவர்.