பாவமும் பரிசுத்தமும்

கிறிஸ்துவுக்குள் இருப்பவனுக்கு பாவம் என்றால் என்ன என்று அறிவது பெரியவிஷயமே இல்லை. சுருக்கமாக நினைவில் கொள்ள “இதெல்லாம் ஒரு பிரச்சனையா, தப்பா, ஆகாதா என்று கேள்வி வந்தால், அங்கு நிச்சயம் ஏதோ ஒன்று ஒளிந்திருக்கிறது. அது பெரும் குற்றமாக மனதில் பளிச்செனத் தெரியாவிட்டாலும், குற்றத்தின் நிழலான ஏதோ ஒன்றாக – ஒரு மீறுதல், அக்கிரமம் அல்லது பாவமாக இருக்கலாம். கிறிஸ்தவன் என்பவன் பாவத்தை மேலாண்மை செய்பவன் அல்லன். புது சிருஷ்டியாக இருக்கும் அவன், இன்று அவருடைய பரிசுத்ததில் பங்கு பெற்றவனாக, அந்த உறவைத்தான் பயிற்சி செய்துகொண்டிருக்கிறான். இதை மிக மிக நன்றாக மனதில் இருத்திவைப்பது ஒவ்வொருநாளும் முக்கியம். அதாவது, இரட்சிப்பை நமக்கே தினமும் சுவிசேஷமாக அறிவிப்பது மிகமுக்கியம்.

மிக முக்கியமாக, பாவம் தினமும் கழுப்பட்ட நிலையின் உறுதி பரிசுத்தத்தை விரும்பும் வாஞ்சையில் இருக்கிறது. பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே (எபிரெயர் 12:4 ), என்று சொல்லிப் பாவத்தை எதிர்க்கப் போதிக்கும் வேதம், உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும் (யோவான் 17:17) என்று நம்மைப் பரிசுத்தமாக்குவது அவரது வார்த்தைகளே என்றும்போதிக்கிறது. நம்முள் பரிசுத்தம் வேண்டும் என்பதற்காக திரியேக தேவன், நம்முள் அவரில் ஒருவரான பரிசுத்த ஆவியை அளித்து அதற்காக அவரை வைராக்கிய வாஞ்சையாகவும் இருக்கிறார்.  அதற்கென அவர் அதிகமான கிருபையை அவர் அளிக்கிறவராகவும் இருக்கிறார் என்பது நமக்கு நம்பிக்கை ஊட்டும் சத்தியம்.

நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள் என்றும் நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்றும் பேதுரு சொல்வது பரிசுத்தத்தை நினைப்பூட்டிக் கொள்ளத்தான். எப்படி பாவம் நம்மை உளழச் செய்கிறதோ, எப்படி அதை வெறுக்க இரத்தம் சிந்தத்கூட வேதம் அழைக்கிறதோ அதே விதமாக, பரிசுத்தத்தையும் விரும்பவும் அனுபவிக்கவும் அழைக்கிறது. அதேபோல், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருப்பது அவசியம். ( I தீமோத்தேயு 2:15)

நம் பாவத்தை எப்படி நாம் கழுவமுடியாதோ, அதேபோல், நம் பரிசுத்தத்தை நாமே உண்டு பண்ண இயலாது. இதை சரியாக அறிந்தோமானால், பாவத்தை விட்டு மனம் திரும்பவும் விருப்பம் வேண்டும். அதையும் செய்பவர் அவரே.  என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்கிற உறுதியை அவர் சிலுவையில் மரிக்கும்முன்பே தந்த உறுதி. (லேவியராகமம் 20:8)

நம்முள் முன்பு கிளைபரப்பி இருந்த பாவம் எப்படி கிளைகளாக முறிபடுவதை வாஞ்சிக்கிறோமோ அதேபோல் பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடையவும் வாஞ்சைவேண்டும் என்பதையும் அறிந்திருப்போம். ஆனால், அதைவிடுத்து பொதுவாக பாவ மேலாண்மை செய்துகொண்டிருப்பதையே இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் பரிசுத்தம் இன்னமும் அலர்ஜிப்பொருளாக இருப்பதுதான். அதாவது பரிசுத்தம் அன்பது திரியேகராக தேவனவிருப்பம் இல்லாத இடத்தில் கிருபை வேலை செய்வதில்லை. ஆனால், பரிசுத்தத்தைக் கண்டு ஒதுங்கும் கிறிஸ்தவர்கள், கிருபையைச் போர்த்திக்கொள்ள நினைப்பதுதான் பல புதுப் போதனைகளுக்குக் காரணம். 

நாம் எதையும் விரும்பத் தகுந்த எல்லாம் கிறிஸ்துவால் கிருபையாய்ச் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் விருப்பத்தை உண்டாக்குகிறவர் என்று பிலிப்பியரில் வாசிக்கிறோம். அவரது தயவே அதை செய்கையாகவும் மாற்ற, பரிசுத்தம் பரிதவிக்கவேண்டிய ஒன்றாக இல்லாமல், நம்முள் இயல்பாக வரும் ஒன்றாக மாறுகிறது. இதில் கொஞ்சம் பிறழ்ந்து சொன்னால், விருப்பங்கள் இடம்மாறி ஏக்கங்கள் உருவாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *