நாம் நல்லவர்களாக இருந்தால் போதுமா?

கிறிஸ்வர்கள் நல்லவர்களாக இருந்தால் போதுமா?

நல்லவனுக்கும், கிறிஸ்தவனுக்கும் ஒரு பெரும் வேறுபாடு  உண்டு.  

நல்லவர்கள் முடிந்தவரை நல்லவர்களாக வாழ்ந்து, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் தொல்லை தராமல் வாழ நினைக்கிறவர்கள். அவர்களே கடவுளை நம்புகிறவர்களாக இருந்தால்,  நல்லவர்களாக இருந்து கடவுளது நேசத்தைப் பெற முயற்சிப்பார்கள். தாங்கள் நல்லவர்களாக இருப்பதும், மற்ற நல்லவர்கள் தங்களை அங்கீகரிக்கவேண்டும் என்பதிலும் மிக கவனமாக இருப்பவர்கள்இவர்கள்.

ஆனால், கிறிஸ்தவன் அப்படி இல்லை. அவனிடம் வெளிப்படும் நன்மை – அது அவனுக்குள் வசிக்கும் கிறிஸ்துவிடம் இருந்து வெளிப்படுவதாக நம்புபவன். தான் நல்லவனாக இருப்பதால் தன்னைக் கடவுள் தன்னை நேசிக்கிறார் என்று எண்ணுவதற்குப் பதில், அவர் தன்னை நேசிப்பதால் கடவுளே தன்னை நல்லவனாக மாற்றுகிறார் என்று நம்புகிறவர்கள். 

அதாவது, தன்னால் செய்ய இயலுவதை விட மேலாக, உன்னதமாகச் செய்ய தனக்குள் இருந்து தன்னைத் தகுதிப்படுத்தும் கடவுள் தன்னை நற்செயலும் செய்யவைக்கிறார். மேலும், அதற்கு முன்பே தன்னை நேசிக்கவும் செய்கிறார் என்று கிறிஸ்தவன் நம்புகிறான். தனியாகப் போராடித் தன்னால் நல்லவனாக வாழப் பிரயத்தனப்படுவதை தன்னுள் இருக்கும் இறைவனே அதை இலகுவாக்கிவிடுகிறார் என்றும் நம்புகிறான்.

(சி. எஸ். லூயிஸின் Mere Christianity -ஐத் தழுவி எழுதியது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *