
இரட்சிக்கப்பட்ட உடன் ஒருவர் பரலோகம் போய்விடுவதில்லை! ஏன்? அப்படிச் சென்றால் ஒரு மணி நேரம்கூட அவரால் அங்கு தாக்குப்பிடிக்கமுடியாது. கற்றுக்கொண்ட, கற்றவைகளில் நிச்சயித்த, நிலைத்த மற்றும் முற்றும்முடிய இரட்சிக்கப்பட்ட நிலைகளைக் கற்றுத்தேற இவ்வுலகே சரியான இடம்.
முன்பு சரியற்ற இடமாக இருந்த அதே இடம் இன்று ஒரு பயிற்சிக்களமாக மாற்றப்படுகிறது. இதை அறியாமல், எப்படியோ பரலோகம் சென்று இந்த வண்டி சேர்ந்துவிடும் என்று கனவுகண்டு கொண்டிருந்தால் வண்டி பஞ்சராகிப் பரிதவிக்கும் அபாயம் உண்டு.
மாறாக இவ்வுலக வாழ்வின் நோக்கத்தையும், நித்தியவாழ்வு திட்டமாக அறிவிக்கப்பட்டிப்பதையும் அறிந்தால் இங்கு நல்ல மாணவர்களாக இருக்கலாம். கற்றுத் தேறுவதும் தகுதிப்படுத்தலும் நிச்சயம். கடைசி வெற்றி வந்தே சேரும்! உண்மையும் உத்தமமுள்ள ஊழியர் என்கிற சர்ட்டிபிஃகெட்டுடன் ஆரவாரமாக நுழைந்துவிட்டுப் போகிறோம்!